வெள்ளி, 30 ஏப்ரல், 2021

Ulaga thozhilalar Thinam

 

                                   


                                        உலக தொழிலாளர் தினம்                                      

                                                         01-05-2021


தொழில் வளர்ச்சிக்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் தொழிலாளியின் பங்குண்டு,
அவர்கள் உரிமைகளையும், நலனையும் காக்க பல சங்கங்கள் உண்டு 
தொழிலாளர்களின் நலமும், உரிமையும்,சரிவர காக்கப்படுகின்றதா
அரசாங்கமும், முதலாளிகளும், இதனை சரிவர நிறைவேற்றியதா !

முதலாளி,  தொழிலாளியை கைப்பொம்மையாக ஆட்டி வைப்பதா 
தொழிலாளியை  அடிமையாக என  என்றும் நினைப்பதா 
ஏன் நன்மை செய்யவேண்டும் என  கருதுவதா !
இம்மனப்பாங்கே தொழிலாளர்கள் துன்பம்  அடைவதா  !

ன் முன்னேற்றமே பெரிதென நினைக்கும் முதலாளி
தொழிலாளர்களை கசக்கிப் பிழியும் தன்மை
ஏனோ தொழிலாளர்களிடத்தில்  ஏற்படும் வன்மை,
இதனால் தொழிலாளி வர்க்கம் அடைவதோ தீமை!


ட்டங்களும், நலச்சங்கங்களும் தொழிலாளியின் நலன் காக்கவே,
அங்கேயும்  அரசியல் நுழைந்து  அவைகளை கெடுக்கவே
காலத்திற்கேற்ப சட்டதிடங்களை  வலைப்பதுண்டு
இதனால் தொழிலாளர்களின்  நலன்கள் lபாதிப்பு  அடைவதுண்டு !


தொழிலாளர்களின்  சிலை கடற்கரையில் அமைந்ததுள்ளதே
இன்று கொடுமையான நோயும்  அவர்களை வாட்டுகின்றேதே 
ஊரடங்கால்  தொழிலாளியும் , தொழில்களும் பாதிக்கிறதே 
உரிமைக்கும், நலனுக்கும், நீதி கிடைக்க போராடுவோம்
சபதம் ஏற்போம்    உலக தொழிலாளர்  தினத்தன்று !


ரா.பார்த்தசாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக