ஞாயிறு, 4 ஏப்ரல், 2021

பிலவ புத்தாண்டில் ஒற்றுமைப் பூக்கள் மலராதோ! - 2021

 \     


          பிலவ   புத்தாண்டில்  ஒற்றுமைப் பூக்கள் மலராதோ! - 2021
                                 
*புலரும் பொழுதாய்
புத்தொளி பரப்பும்

புத்தாண்டே
...

பூமியெங்கும்
அமைதி மட்டும்

ஆட்சி புரியாதோ

புத்தாண்டே
!

மண்ணில் விழும்
மழைத்துளியும்

விண்ணில் வீசும்

காற்றும்

யாவருக்கும்

பொதுதானே

புத்தாண்டே
!

* நதியால்
இணைந்த

மாநில மக்கள்

அணையால் பிரியும்

அவலமும்

அமிழ்ந்து போகாதோ
புத்தாண்டே!

சுயநலங்களும்
சூழ்ச்சிகளும்

சுவடு தெரியாமல்

மறையாதோ

புத்தாண்டே

நாட்டுக்கு நாடு
சமாதானம் மட்டும்

தானமாய் கிடைக்காதோ

புத்தாண்டே
!

தேசங்களுக்கிடையே
மதப் பிரிவினைகள் சிதைந்து 
ஒற்றுமை பூககள் 

மலராதோ

புத்தாண்டே
!

ஆட்சியும்
அதிகாரமும்

விவசாயிகள் 
ஏக்கம் தீர்க்காதோ

புத்தாண்டே
!

* உலகெங்கும் கோரோனா  அழிந்து 
மக்கள் வாழ்வில்  அமைதி 
ஆட்சி புரியாதோ

புத்தாண்டே
!

ரா.பார்த்தசாரதி 

    V

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக