முதுமை
முதுமை என்பதே மனிதனின் அனுபவ முதிர்ச்சி
உடலும் உள்ளமும் சற்றே அடையும் தளர்ச்சி
துணை தடுமாறினாலும் மனம் கொள்ளும் எழுச்சி
வீ ழ்ந்தாலும் கைகொடுத்து தூக்கிவிடும் முயற்சி !
அனுபவத்திற்கும், வயதிற்கும், மதிப்பு இல்லை
பெற்றதும் உடன்பிறந்ததும் உதவ நினைப்பதில்லை,
ஏனோ கடனுக்காக உதவும் நிலைமை இக்காலத்திலே
உள்ளத்தில் கலங்கும் முதுமைக்கு நிம்மதி எக்காலத்திலே ?
அடிபட்டு, இடம் தேடித், தட்டிதடும்மாறும் நெஞ்சங்கள்
பாசத்தினால் விடுபட முடியாத முதியோரின் எண்ணங்கள்
இளம் ஜோடிகள் போல் காதலும், காமமும் இல்லை
முதிர்ந்த காதல்தான், ஆனால் காமம் இங்கில்லை !
முதுமை காதல் என்பது தாஜ் மஹாலின் நினைவு
இளமைக் காதல் என்பது மனக் கோட்டையின் வளைவு !
இன்று முதுமையின் அடைக்கலம் முதியோர் இல்லங்கள்
இதனை மாற்றாதோ இளமையின் எண்ணங்கள் !
என்றும் உறவுக்கும், பாசத்திற்கும் ஏங்கும் தனிமை
இளமையின் முதிர்ச்சியே மனித இனத்தின் முதுமை
தன் வினை தன்னைச் சுடும் என்பதுதான் பொதுஉடைமை !
முதுமையை இளமையாக்கி நெஞ்சுரத்துடன் நடைபோடுங்கள்
நட்பையும், உறவையும் என்றும் தவிர்த்து விடாதீர்கள்
நடைப்பயிற்சியும், யோகாவும் செய்து உடலை பேணுங்கள்
எங்கே சென்றிடும் காலம் நம்மை, வாழ்விக்கும் என எண்ணுங்கள் !
ரா.பார்த்தசாரதி
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக