வியாழன், 31 ஆகஸ்ட், 2017

சேவல் கூவுது



                                           

                            சேவல்  கூவுது

சேவல் கூவிதான்  பொழுது   விடியுது
 கோழி தன்  இரையைத் தேடி அலையுது
ஆண்  சம்பாதித்தால்தான் குடும்பத்திற்கு விடிவு
பெண் சம்பாத்தியம், பற்றாக்குறைக்கு ஓர் தீர்வு !

சேவலும்,நீர்நிலைக்கு தன் பெட்டையுடன் செல்கின்றனது,
தாகம் தீர்க்கவும், இரைதேடவும் வழி காண்பிக்கின்றது
தன் தலைவன் வழியே தன் வழி என பின்தொடர்கின்றது
தன் குஞ்சுகளையும்   காப்பாற்றும் என எண்ணுகின்றது

 கோழி தன் குஞ்சுகளுடன் சேர்ந்தே  இரைதேடி உண்ணும் 
சிலசமயங்களில் சேவலுடன் சேர்ந்தே இரை தேடி உண்ணும்
ஆணும் பெண்ணும் பணத்திற்காக வேறிடம் செல்கின்றனரே
குழந்தைகளிடம்  அன்பை காட்ட நேரமில்லை என கூறுகின்றனரே !

கூரை ஏறி கோழி கூவினாலும் ஓசையில்லை
கோழி முட்டை இட்டாலும் சேவல் அடைகாப்பதில்லை
ஆண்களும், பெண்களும்,பொருள் ; ஈட்டாமலில்லை
குழந்தைகளுக்கு நல்ல உணவும், கல்வியும் அளிக்காமலில்லை!

சேவலுக்கு கொண்டை அழகு, மயிலுக்கு தோகை அழகு,
சேவலுக்குப் பின் இரண்டடி பின்னே  வீட்டுக் கொடுத்து செல்கிறதே
ஆணும்,பெண்ணும், வாழ்க்கையில் விட்டுக்கொடுத்து வாழ்வதே அழகு
நல்ல கணவனுக்கு உத்யோகமும், பண்பும் அழகு

சேவல் கூவி அழைத்து பொழுதினை உணர்த்துகின்றது,
கோழி  முட்டை  ஆரோக்கியமானது என உணர்த்தப்படுகின்றது
மனிதனே !  பொழுதோடு உழைத்து,இரவில் களைப்பாறுவாயா
ஐந்தறிவு பறவை கூவுவதை  அலட்சியமாக நினைப்பாயா !


ரா.பார்த்தசாரதி






.
 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக