தனிமனிதன் ஒழுக்கம்
நிதி நீச்சலடிப்பதால், நீதி அதனை எதிர்த்து நிற்க தவிக்குது
அதிகாரம் எதையும் செய்ய துணிவதால்,அமைதி அல்லல்படுகிறது
பழக்க வழக்கங்கள் பாழானதால், தனிமனிதன் ஒழுக்கம் நிலைகுலைந்தது
காலில் விழுந்தாலே காரியம் முடிகிறது,இதில் மனிதநேயம் எங்கே?
நீதிநெறிகள் பித்தலாட்டமாய் இருப்பதால் தனிமனிதஒழுக்கம் மறைந்தது
காந்தி தேசம் என்று சொல்லி,பிராந்தி கடையால் வாந்தி தேசமாயிற்று
தனிமனிதன் ஒழுக்கம் ,ஏற்படின், காவலும்,நீதித்துறையும் குறையும்
தனிமனிதர்கள் சேர்ந்தாலே ஓர் கூட்டுவுறவு அமைப்பு உண்டாகும் !
தனிமனிதன் ஓட்டுரிமையை அட்சய பாத்திரமாக நினைத்துவிட்டான்
அதனையே பணத்திற்காக பிச்சையிட்டு, பிச்சைக்காரனாகி விட்டான்
பணத்தை கொண்டு மக்களை அடிபணியவைத்து அராஜகம் செய்கிறான்
எதிர்த்து கேட்போரை கட்டப்பஞ்சாயத்தை காட்டி பயமுறுத்துகின்றான் !
தனிமனித ஒழுக்கம் பணத்தால் சீரழிந்து மக்களை படுகுழியில் தள்ளும்
ஒன்று கூடி காந்திய வழியில் போராடினால் நமக்கு நன்மை கிடைக்கும்
ஒன்று கூடி எதிர்த்தால், நியாயமும், தீர்வும் விரைவில் கிடைக்கும்
நமது ஆன்மிகமும், பண்பாடும்,தனிமனிதன் ஒழுக்கதை நிலைநாட்டும் !
ரா.பார்த்தசாரதி
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக