ஞாயிறு, 13 ஆகஸ்ட், 2017

மனைவி அமைவதெல்லாம்!



                                             

                                                 மனைவி அமைவதெல்லாம்!

இளைஞசனே !   மனைவியை தேர்ந்தெடுப்பதில்  எச்சரிக்கையாய் இரு
அவசரத்தில் கல்யாணம் பண்ணி  சாவாசத்தில் சங்கடப்படாமல் இரு
புற அழகையும், பார்க்கும்போது உடலும், மனமும இச்சை கொள்ளாமல் இரு.
பார்த்தாலே கவர்ந்து இழுக்கும் அழகைக் கண்டு மயங்காமல்  இரு.

பூரித்து நிற்கும் சரீரத்தில் உன் பார்வை லயித்துவிடாமல் கவனமாய் இரு
எந்த பெண்ணை பார்த்தாலும், சரியான கண்ணோட்டத்தில் பார்க்க விரும்பு
ஆத்ம பூர்வமாய், பார்க்கும் பார்வை உனது எண்ணத்தில் தோன்றட்டும்
காதல், அன்பு  என்பது ஆத்மாவின் ராகம் அல்ல, சரீரத்தின் தாளமே !

 பெண் பேசும் போது, கனிவும், மரியாதை தெரிந்தவளா என எண்ணிப் பாரு
அகங்கார பேச்சும், கட்டளை இடும் தோரணைகளை நினைத்துப் பாரு
படித்தும் கர்வம் கொள்ளாமல், ஆடம்பரம்  இல்லாமல் இருப்பதை பாரு
உன்  வார்த்தைக்கு, பேச்சுக்கும் மதிப்பு அளிப்பவளா என எண்ணிப் பாரு!

அழகும், ஆடம்பரமும், நிலையற்றது, குணம் ஒன்றே மதிப்பளிக்கும்
பெண்ணின் பார்வை ஆணை நோக்கும்போது அச்சம்,நாணம் தோன்றும்
காலப்போக்கில் ஆண், பெண் வேலைக்கு செல்வதால் இவை மாறும்
ஆடவனின் அழகு அதிர்ச்சி தந்தாலும், தன் குல இயல்புடன் நோக்கவேண்டும்

மனைவி கணவனின் சினத்தை தனிப்பவளாக இருக்க வேண்டும்
கோபத்தை எண்ணெய் ஊற்றி பெரிது படுத்தாமல் இருக்க வேண்டும்
 கணவன் அறிவாளியானாலும்,கெட்ட மனைவியால் வாழ்க்கை பாழ்படும்
மனைவி அறிவாளியாக இருந்தால், மூடனும் அறிவாளியாக ஆவான் !

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரமே
கணவன் பெருமை அடைவதெல்லாம் மனைவி வந்த நேரமே
மனைவி உணவு அளிப்பதில் தாயாக இருக்கவேண்டும்
மனைவி மந்திரியாகவும்,கட்டிலில் கணிகையாகவும் இருக்க வேண்டும்

கணவன் என்றாலே கண் + அவன்  என்பதாகும்
அவன் வழியே உலகை காண்பவள் மனைவியாகும்
மனைவி, கணவன் இடையே   ஊடல், கூடல் இருக்கும்
ஒருவரையொருவர் விட்டுக்கொடுத்து வாழ்ந்தாலே வாழ்க்கை இனிக்கும்!



 ரா.பார்த்தசாரதி












             .
..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக