சனி, 12 ஆகஸ்ட், 2017

சுதந்திரம் எங்கே





                                                          


                                                     சுதந்திரம்  எங்கே 


      எழுபத்தொன்று ஆண்டுகள் சுதந்திர காற்றை சுவாசிக்கின்றோம்
      பெயரளவில்  வளர்ச்சியிணை   கண்துடைப்பாக காட்டுகின்றோம்  
      முக்கிய திட்டங்களுக்கு அரசாங்கம், முன்னுரிமை கொடுப்பதில்லை
      நதிநீர்  இணைப்பும்,  விவசாயிகளின் குறைகள் தீர்க்கப்படவில்லை !

      இன்று சுதந்திர நாட்டின் நிலைமை என்ன   நினைக்கத்தோன்றுதே
      அண்டை மாநிலங்களே  உதவி  அளிக்க மறுக்கிறதே
      ஜாதி, மத  பிரிவினையால் எல்லா திட்டங்களும் முடக்கப்படுகிறதே
     அரசியல் தலைவர்கள் ஒற்றுமை விலகி, பிளவு ஏற்படுகின்றதே !

      அன்றைய அரசியல் தலைவர்கள் நாட்டிற்காக பாடுபட்டனரே
      இன்றைய அரசியல் தலைவர்கள் தனக்காக பாடுபடுகின்றனரே
      லஞ்சமும், தீவிரவாதமும் எங்கும் தலைவிரித்து ஆடுகின்றதே
      கோடி, கோடியாக பணம் மந்திரிகள் கைகளில் புழங்குகிறதே     !

      இன்று சுதந்திரமாக எதிர்க்கவோ, எழுதவோ துணிவு    இல்லை
      பத்திரிகைகளும், இலைமறை,காய்மறைவாய்  வெளிப்படுத்துதே
      பத்திரிகை சுதந்திரமும், அரசியல் ஆதிக்கத்தால் ஒடுக்கப்படுகிறதே
      அரசியல் செல்வாக்கால் எல்லாவற்றையும் அடிபணிய வைக்கிறதே ! 

      சுதந்திரத்திற்காக  தன் உயிரையும் தியாகம்  செய்தனர்  அன்று 
      சுதந்திரமாக கோடிகணக்கில் பணம் கொள்ளையயடிக்கின்றனர் இன்று 
      நெஞ்சு பொறுக்கவில்லையே இந்த நிலை கெட்ட  அரசியல் அராஜகம் 
      மக்களே ! இன்றே எழுமின் கடைசி வரை போராடி எதிர்த்து வெல்விர்! 

      சுதந்திர நாட்டில், சுதந்திரம் எங்கே என கேட்க தோணுதே?
      மக்கள் நலனில் அக்கறையுள்ள அரசியல்  அமையுமா 
      நல்ல அரசியல் தலைவர்கள் ஆட்சிக்கு வரவேண்டாமா 
      எழுபத்தோராவது சுதந்திரம் தினம் இதற்கு விடை காணுமா ?  
       
       
     ரா.பார்த்தசாரதி
           

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக