சதாபிஷேக விழா
இடம்: மயிலை கல்யாணநகர் அசோசியேஷன் தேதி:07-09-2017
மயிலை கல்யாணநகர் அசோசியேஷனில் இன்று ஓர் சதாபிஷேக விழா
திருமதி ஸ்ரீமதி, திரு.எம்.கே .ஸ்ரீனிவாசனின் சதாபிஷேக விழா !
திருமதி & திரு. மாடபூஷி கோதண்டராமனின் .முதன்மை மகனே
என்றும் திருவல்லிக்கேணியில் வாழ்ந்திடுவாய் சிறப்புடனே !
அகவை அறுபதும், எண்பதும் என்றும் சிறப்புடையதன்றோ
மகள் ஸ்ரீலேகாவும்,ஸ்ரீகாந்தும் தலைமையேற்று நடத்துவதும் பெருமைக் குறியதன்றோ !
கல்யாணம் என்றாலே வைபோகமே,
வாரணமாயிரம் பாடி வாழ்த்துவோமே !
ஆயிரம் நிலவு (பௌர்ணமி) கண்ட இல்லற தம்பதிகளே,
என்றும் வாழ்வாங்கு வாழ்வீ ர்கள் வையத்திலே !
கூட்டுறத்துறையில் ஓய்வுவடைந்து,,வழக்ககறிஞராய் தொழில் செய்கிறாய் எண்பதிலும் சுறு,சுறுப்புடன் தெய்வநம்பிக்கையோடு பணி புரிகின்றாய் ! ,
கணவன் என்றாலே (கண் + அவன் ) என்பதாகும்.,
அவன் வழியே உலகை காண்பவள் மனைவியாகும் !
ஆயிரம் கைகள் நீட்டி மறைத்தாலும், ஆதவன் மறைவதில்லை,
ஆயிரம் உறவுகள் இருந்தாலும் மனைவி, கணவனை மறப்பதில்லை !
திருமதி ஓர் வெகுமதி என்று கூறுவது பழக்கம்
திருமதியின் பெயரே ஸ்ரீமதி என்று அழைப்பது பழக்கம்!
கல்யாணம் என்றாலே உற்றார் , உறவினர்ககளின் , ஆசிர்வாதமே,
அகிலத்தில் சிறந்தது , தாய், தந்தையின் ஆசிர்வாதமே !
காலமும், கோலமும் என்றும் மாறும்,.
கணவன் மனைவி உறவே என்றும் நிலைத்து வாழும்.!
உற்றார், உறவினர்களும், பேரன்,பேத்திகளும் ஆசி பெறட்டும்
வயதில் மூத்தவர்கள் தங்கள் ஆசியை நல்மனதுடன அளிக்கட்டும்!
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்கை
பண்பும் பயனும் அது. என்பது வள்ளுவன் வாக்கு
===================================================================
சதாபிஷேக மந்த்ரம்
சந்த்ராணாம் து ஸஹஸ்ரஸ்ய தர்சனாத்பு விமானவ: |
ப்ரபௌத்ர தர்சனாத்வாபி ஸர்வபாபை: ப்ரமுச்யதே ||
ஸீமந்தஜஸ்ய புத்ரஸ்ய புத்ரஸ்ஸீமந்தஜஸ்து ய: |
தஸ்யாபி தாத்ருச: புத்ர: ப்ரபௌத்ர: புண்யவர்தன்: ||
ஸஹஸ்ரம் சசினாம் த்ருஷ்ட்வா பூர்வோக்தம் ச ப்ரபௌத்ரகம் |
மஹத்புண்யம் அவாப்னோதி தே வைரபி துராஸதம் ||
சதா பிஷே சனாத்லோகே லோக பூஜ்யத்வம்ருச்சதி |
ச்ரியம் ப்ராப்னோதி விபுலாம் ஸ்வர்கம் அந்தேச கச்சதி ||
ஸஹஸ்ர சந்த்ர தர்சனம் கண்டு
சதாபிஷேக சாந்தி செய்து கொண்ட
ப்ரம்ஹ ஞான லக்ஷ்யவாதிகளுக்கு
அனந்த கோடி நமஸ்காரங்கள்.==================================================================
ரா. பார்த்தசாரதி , .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக