செவ்வாய், 8 ஆகஸ்ட், 2017

தெருவில் பசுமாடு - 123


 படக்  கவிதை போட்டி எண் 123


                                                தெருவில் பசுமாடு - 123

கோமாதா என் குலமாதா  என்று சொல்வதில்தான் பெருமை 
தனியே பசுவினை வீதியில் உணவுக்காக அலையவிடுவது சிறுமை 
நான் பால் கொடுத்தால்தான்  எனக்கு நல்ல உணவு 
பாலை நிறுத்தினால் அலையவிடுவதோ நடைபாதைத் தெருவு !

வயிறுக்காக  கண்டதை தின்று  நான் உயிர்  வாழ்கின்றேன் 
என் உடம்பு பாழானாலும் ஊசிப் போட்டு பால் கறக்கின்றான் 
தவிர, வைக்கோல் கன்றை வைத்தும் ஏமாற்றி பால் கறக்கின்றான் 
ஏனோ, இன்று வரை காப்பாற்றியதற்கு நான் பாலை கொடுத்தேன் !

என் பாலிலும் தண்ணீர் கலந்து,  கலப்படம் செய்து விற்கின்றான் 
 என் முதுமையை உணர்ந்து என்னை தெருவில் அலைய விடுகிறான் 
என் கன்றுகளை சொத்தாக கொடுத்து அவனை மேம்படுத்தினேன் 
என்னை  சொத்தையாக நினைத்து அடிமாடாய் நினைக்கின்றான் !

நம் உயிரையும், உடலையும் வளர்ப்பது தாயும், பசுவுமே 
பால் தரும்வரை அதனை  தெய்வமாய் நினைக்கின்றோம் 
முதிர்ந்த பசுவினை கோசாலையில் விட தோன்றவில்லை
 தாயை முதியோர் இல்லத்திலிருந்து அழைத்துவர மனமில்லை !

பறவைகளும், மிருகங்களும் ஜாதி மதம் பார்ப்பதில்லை,
பணத்தால், ஏழை, பணக்கார ஜாதி தோன்றாமல் இல்லை
தாயாரையும், பசுவினையும் தெய்வமாக  கருதவில்லை 
ஆறறிவிற்கும் , ஐந்தறிவிற்கும் இவ்வுலகில் மதிப்பில்லை !
 

.  ரா.பார்த்தசாரதி
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக