திங்கள், 12 மே, 2014

மனிதனின் எண்ணமும் நினைவும்


மனிதனின்  எண்ணமும்  நினைவும்

எண்ணிக் கொண்டிருப்போம்!
* கடலின் சிந்தனையாய்
எழும்பியடங்கும் அலைகள்
உணர்த்துகின்றன
கடலின் வீரியத்தை!

* மரத்தின் சிந்தனையாய்
துளிர்க்கும் இலைகள்
உணர்த்துகின்றன
மரத்தின் பசுமையை!

* நெருப்பின் சிந்தனையாய்
உமிழப்படும்
வெளிச்சமும் வெப்பமும்
நெருப்பின் ஆற்றலை
உணர்த்துவதைப் போல...

* நம் எண்ணங்களே
உணர்த்துகின்றன
நம்மை, நமக்கும்
பிறர்க்கும்!

* நினைவில்
வைத்துக் கொள்வோம்...
சித்திரம் என்பது
வண்ணங்கள் அன்றி
வேறில்லை என்பது போல...
நாம் என்பது
நம் எண்ணங்கள் அன்றி
வேறில்லை என்பதை!

* துயரத்திற்கு
அழைத்துச் செல்லும்
நம் துவண்ட
எண்ணங்களுக்கு மாறாக
உயரத்திற்கு அழைத்துச்
செல்லத் தெரிந்தவை
நம் உத்வேக எண்ணங்கள்!

* நமக்குள்ளே
தோன்றி மறைந்தாலும்
நம்மை நிழலாக்கிவிட்டு
தம்மை
நிஜமாக்கிக் கொள்ளும்
தந்திரமிக்கவை அவை
என்பதால்...

* எத்தனை என்று
மட்டுமல்ல
எத்தகையது என்றும்
எண்ணிக் கொண்டேயிருப்போம்
ஒவ்வொரு கணமும்
நமக்குள் தோன்றுகிற
எண்ணங்களை!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக