வியாழன், 15 மே, 2014

ஒரு நாள் போதுமா?


.
                                                 
                                                        ஒரு நாள் போதுமா 


அன்பு ஊற்றுக்கு  இன்று  அடையாள  தினம்.
அதுவே  அன்னையரை  வாழ்த்தும்  தினம் ,
அடுத்த  தலைமுறை உருவாக்கிய  அணங்கு,
அரும்பணி  ஆற்றிய  அன்னையெனும் தெய்வம்.
.
மங்கல  நாண்   அணிந்த   முதல்  நாளாக 
சுற்றத்தையும், தன் வாரிசுகளை  பேணும் பெண்ணாக,
வித விதமான வினாக்களுக்கு  விடையளிக்கும் தாயாக,
கருக்கொண்ட  நாளில் இருந்து  தாயின்  உருவமாக 

ஐயிரண்டு    திங்கள்  அடிவயிற்றில்   காத்து,
சிசுவின்  செல்ல  உதைகளை  நினைத்து,
சுகமாய்  உள்வாங்கி  தழும்புகள் பதிந்தாலும்,
பிரசவதுயருற்று, குருதியை  பாலாகப்  பொழிந்தாலும்,

ஈன்று எடுத்த   தாயை  இருகரம்  கூப்பி 
வணங்குதல்  இயல்பே  ஆனாலும் , நாம் 
வணங்குவதற்கு  ஒரு நாள் போதுமா ?

ரா.பார்த்தசாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக