ஞாயிறு, 11 மே, 2014

தாயே கண்கண்ட தெய்வம்



                    

                         தாயே  கண்கண்ட  தெய்வம்

                  வாழ்வின்  ஏட்டினை திருப்பிப்  பார்த்தேன,
                  வலிதாங்கா  இளமை  பருவத்தினை எண்ணிப்பார்த்தேன்
                  என் பேனாவின்  துணைகொண்டு எழுத  முடிவுகொண்டேன,
                  அன்னையின்  அருமையினை  எழுத  துணிந்தேன்

                  மக்களை  பெற்ற  மகராசியே  தாய்தான்,
                  குடும்பத்தின்  ஆணிவேராய்  இருப்பதும் தாய்தான்,
                  ஞானியும்,  துறவியும்  போற்றும்  தெய்வம்,
                  ஞாலம் புகழ்ந்திடும்  சிறந்த  தெய்வம்.!
                  ஓய்வின்றி , உறக்கமின்றி , உண்  உயிரைக்கூட,

                  ஒவ்வோர்  பிறப்பிற்கும்  பணயம்  வைத்தாய்,
                  உன்னை வையகம்  என்றும்  போற்றுமே,

                  உன் பெருமை அறியா மனிதனை  தூற்றுமே !
                   
                 பாசத்தோடு  வாழ்வதுதான் தாயின்  குணமே ,
                 பாசத்தோடு  இருப்பதுதான்  பிள்ளைகளுக்கும் நலமே,
                 எனக்கென்று  துன்பம் வந்தா, உனக்கு வேறு பிள்ளையுண்டு, 
                 உனக்கென்று  துன்பம் வந்தா, என்னக்கு வேறு தாயுண்டோ ?
                     
                 தாயை விட  சிறந்த  கோவில்  இல்லை,
                 தாயே  என்றும்  அன்பின்  எல்லை 
                 தாயின் பெருமையினை  சொல்ல    வார்த்தையில்லை, 
                  தியாகச்சுடரே  தாயுருவம், மனதிலிருந்து  மறைவதில்லை !
            
                 அம்மா, அன்னை, தாய்   எனும்  பல  வார்த்தையே ,
                  அம்மா என்ற வார்த்தை குழந்தையின் முதல் வார்த்தையே,
                  அம்மா  என்றாலே  எல்லோர்க்கும்  ஆனந்தமே 
                  அதுவே  மனித இனத்திற்கும் பேரானந்தம்மே! 

                  இளமையில்  ஸ்பரிசம், முதுமையில் பாசம்,
                   என்றும்  உறவின், சிறந்த பந்தபாசம் ,
                  இளமையில் நான் உனக்கொரு குழந்தை ,
                  முதுமையில் நீ எனக்கொரு குழந்தை !

                   வாழ்வெனும்  படகிலே நீ ஒரு  துடுப்பு,
                   எங்கள்  பிறப்பே  உன்  படைப்பு ,
                   எங்கள்  வளமே உன்  சிறப்பு ,
                   எங்கள்  நினைவே  பாசத்தின் பிணைப்பு !

                   பூமியை  விட  சிறந்தவள்  தாய் ,
                   ஆகாயத்தை விட உயர்ந்தவர்  தந்தை,
                    தரணியி லே  தாய்க்கு  என்றும் சிறப்புண்டு
                    தாயே  கண்கண்ட தெய்வம்   என்று சொல்வதுண்டு !

                                                                                ரா. பார்த்தசாரதி

               

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக