செவ்வாய், 12 டிசம்பர், 2023

 



       எதுவும் வீணாவதில்லை 

வீழ்ந்ததெல்லாம்   வீணாகிவிடுவதில்லை  
வீசி  எறிந்த  விதைதான்  விருச்சமாகிறது 

உதிர்ந்த மலர்கள் எல்லாம் வீணாவதில்லை 
அவைகள் எல்லாம் வாசனை திரவியமாகிறது 

உதிர்ந்த இலைச் சருகுகள் வீணாவதில்லை 
அவைகள் விவசாயின் வயலுக்கு எருவாகிறது 

விருந்து முடிந்து எரியும் வாழை இலைகள் 
பசுக்களுக்கு இரையாகி, பாலை அளிக்கிறது 

வீசி எறிந்த விதைகள் தான்  இங்கு விருட்சமாக
விண்ணை முட்டி உயரே வளர்கின்றது   

வீணாவதில்லை துாக்கி எறியப்பட்டது துடைப்பம் தான்...
எனினும எவ்வளவு துாசிகளைஉதிர்ந்த துவம்சம் செய்தது
 என்று எண்ணி பார்க்கும் இதயம் எத்தனை இருக்கிறது !

முச்சந்தியில் கிடக்கும்முனை ஒடிந்த பேனா
எத்தனை இதிகாசங்களை எழுதியது என்று
எவருக்கு தெரியும்!

விழுந்து, வெடித்து மரணித்த மழைத் துளிகளின் 
மகிமையில் தான் உலகம் தன் வதனத்தை 
அலங்கரித்துக் கொள்கிறது!

விரல் பிடித்து நடக்க விழுந்து எழும் குழந்தைகள் தான்
விண்ணை சுற்றி வரும் விமானத்திற்கு விழிகளாகிறது!

உயிர் துறந்து, உதிர்ந்து விழுந்த சருகுகள் தான் 
உலகம் உயர்த்தும் விளை நிலத்திற்கு வளம் சேர்க்கிறது!

இங்கு
உதிர்ந்தவைகளும்
உயிர் துறந்தவைகளும்
வீழ்வதற்கு மட்டுமல்ல
இன்னொரு ஜென்மத்தை

வெல்வதற்கே என்று எண்ணுங்கள் !

ரா.பார்த்தசாரதி 


ஞாயிறு, 10 டிசம்பர், 2023

மழை பேசுகிறது

 




                                              மழை பேசுகிறது 

         விசும்பின் கீழே வீழ்வதெல்லாம்  மழைதானே !
           பருவத்திற்கு ஏற்ப காலத்தில் பொழிவதும் மழைதானே !
          கீழே வீழ்ந்தாலும் தடுத்து நிறுத்துவதும்  மனிதன்தானே !
          மனிதர்கள் வீடு கட்ட  என் தடங்களை பலி கொடுத்தேனே !

          என் உடன் பிறப்புக்களையும் நானே பொழிந்து அழித்தேனே 
          என் பாதையில் செல்ல பல வழியில் தடைபட்டு நின்றேனே 
          அணை கட்டாமல் பல வழிகளில் வீணாய் கடலடைந்தேனே 
         அந்நியமாய் கேட்பாரின்றி பல வருடங்கள் அழித்தானே !

         இந்திரனிடம் அனுமதி பெற்று புயலுடன் பொழிந்தேனே !
         கடுங்கோபத்துடன் மிக்ஜெம் எனும் பெயருடன்சூறையாடினேனே  
         முடிவில் வழியின்றி எல்லா இடங்களிலும் கொட்டித்தீர்த்தேனே
         சக்ர வியூகத்தில் அபிமன்யூ போல் நடுவில் மாட்டிக்கொண்டேனே!

        நான் யாரிடம் முறையிடுவது என நினைத்தேனே 
        நாட்டையே விற்பவன் இந்திரனையே பொம்மையாக்கினானே 
        பணத்தால் எல்லாம் முடியும் என பல வருடமாய் தீர்மானித்தானே 
        நான் யார் பேச்சையும் கேட்பதில்லை என்று சாடினானே !

        வெளிவரத்தெரியாமல் ஆங்காங்கே தேங்கி நின்றேனே 
       நாட்டுத் தலைவன் என்னையே தந்திரமாய் பழித்துரைத்தானே !
       நான் கோபப்பட்டுதான், வீட்டையும்.மக்களையும்சுற்றிவளைத்தேனே 
        என் வழித்தடங்களை சரிசெய்ய மும்மூர்த்திகளை வேண்டினேனே!   

       ரா.பார்த்தசாரதி 
              

சனி, 9 டிசம்பர், 2023

வாழ்க்கை ரகசியம்

                    






                                                     வாழ்க்கை  ரகசியம் 

                               புரியாது, புரியாது, வாழ்க்கை ரகசியம் புரியாது 
                               வளரும் ஆசைக்கு அளவேது !  முடிவு ஏது !
                                முடிந்த பின்,  உலகம் நமக்கேது
                                முடிந்ததை நினைத்தால் பயனேது !

                                ஒரு சிலர் வாழ்வு தியாகத்தில் கூடும் 
                                உரிமை, அன்பும் மறுபடி சேரும் 
                                திருமணம்  இரு மனமாகும் 
                                பெண் மனம் தாய்மையை தினம் தேடும் !

                               பெருமைகள் பேசுபவர் பூமியில் பிறந்தார் 
                               பிறந்தவர்  தாயின் மடிதனில் வளர்ந்தார் 
                               வளர்ந்தவன் வாழ்வில் கொடுப்பதை மறந்தான் 
                                ஒருபிடி சாம்பலே முடிவெனஉணர்ந்தான் !

                                ஒரு சிலரே புகழோடு தோன்றுவர் 
                                ஒரு சிலரே புகழோடு  இறப்பர் 
                                வாழ்க்கையில் பிறப்பும் இறப்பும் ஒன்றே 
                                 மானிடம் அறியாமல் திரிவதும் இன்றே !

                              

வெள்ளி, 1 டிசம்பர், 2023

பாரதியே ! மறுபடியும் எழுந்து வா

 


                                      


                             பாரதியே ! மறுபடியும் எழுந்து வா 

            பாரதிபோல்  ஒருவன் தமிழகத்திற்கு  வருவாரா !
            நடக்கும் அக்கிரமங்களுக்கு சாட்டையடி கொடுப்பாரா !
            நாட்டில் கல்வியும் அறிவையும்தானே வளர்க்கச்சொன்னேன் 
           ஆண் பெண் வித்தியாசமின்றி ஆடையை குறைக்க சொன்னேனா !

           நாட்டிலுள்ள மக்களுக்கு நன்மை செய்ய சொன்னேனே !
           நாட்டையே கூறு போட்டு விற்று லாபமடைய சொன்னேனா !
           வாணிபம்,பெருக விளைப்பொருளை விற்க சொன்னேனே !
           கனிமங்களை சூறையாடி,ஆறுகளை கெடுக்க சொன்னேனா !

          சுயநலம் மிகுந்து பத்து தலைமுறைக்கு பணம் சேர்க்க சொன்னேனா
          மக்களை குடிகாரனாக்கி வாழ்க்கையை கெடுக்கசொன்னேனா !
         நாட்டின் தலைவர்கள் நீதி தவறி நடப்பதும் முறையா !
          கண்டிக்காத அரசும் இன்று மக்களுக்குத் தேவையா !

          அன்று விடுதலைக்கும், பாமரனுக்கும் துணிந்துகவிதை எழுதினேன் !
          வெள்ளையர்களே மேல்இக்கொள்ளையர்களை விட என எழுதுவேன்
         பாரதி போல் ஒருவர் தமிழகத்திற்கு வருவார் ! எதிர்த்து கேட்பார் !
         மக்களை திருத்துவார் ! நல்லாட்சிக்கு  வழி  வகுப்பார் !

         எழுத்துரிமை  பேச்சுரிமை  என்பது எங்கே போயிற்று !
        ஜனநாயகம் என்பதே கேள்விக்குறியாக  போயிற்று !
        நானே  தமிழகத்தை கண்டு பதறி கடற்கரையில் சிலையானே !
        பராசக்தியை வேண்டி தர்மத்தை நிலைநாட்ட வேண்டினேன் !

                     

திங்கள், 27 நவம்பர், 2023





                                               சமாமெஷ்ஷில்  பனித்துளி                                                       


             பனித்துளிகள் புல்லின்மேல்  மிக அழகாய் காட்சியளிக்குதே 
            படுக்க வெண்ணிறப்பாய்  போல் நமக்கு தோற்றமளிக்குதே 
            குளிர்ச்சியுடன் எங்கும் தரையில் பரவி நீண்டு பரவியதே 
            குளிர்ந்த காற்றுடன் தென்றல்போல் சில்லென்று வீசுதே 
           சிலமணி நேரத்தில் கதிரவன் ஒளி பட்டு மறைந்ததே 
           சமா மெஷ்ஷில் அதிகாலையில் காணும் காட்சியானதே 
           மரங்களும் இலை உதிர்த்து பல நிறங்களில் மிளிர்கின்றதே !
           எங்கள் மனதிலும் உடையிலும் குளிர்ச்சி உண்டானதே !


              
     

ஞாயிறு, 26 நவம்பர், 2023

Ithuthaan Kaliyugam

 


                                                            



                                                           இதுதான்  கலியுகம் 

                   நல்லவை அழிந்து  தீயவை  தொடர்ந்து நடப்பதே கலியுகம் 
                  தன்னலமே பொதுநலமாக  மனிதன் கருதும் கலியுக காலம் 
                  மக்களை ஏமாற்றி பணம் சேர்பதயே குறிக்கோலான காலம் 
                  பல கோடிகள் பணம் சேர்ந்தாலும் திருப்தியடையாத காலம் 

                  கொள்கைகள் இருப்பது போல் கபடநாடகம் ஆடும் காலம் .
                 பொய் மூட்டைகள் அவிழ்த்து விடும் சந்தர்ப்பவாதிகள் காலம் 
                  பணத்தைக் கொண்டு மக்களை ஏமாற்றும் பொற்காலம் 
                  எதையும் செய்யாமல் வாய் கிழிய சமூக நீதி பேசும் காலம் 

                  மது, மாது மற்றும் சூதாட்டம் தலைவிரித்து ஆடும் காலம் 
                  ஆண்களை குடியால் அடிமையாகி வாழ்வை அழிக்கும் காலம் 
                   பணத்திற்காக பெண்கள் கற்புநெறி தவறி நடக்கும் காலம் .
                   அடிதடி,  கொலை, கொள்ளைக்கு  அஞ்சாத கலியுக காலம் 

                   மக்களையும், ஏழைகளையும் ஏமாற்றி பிழைக்கும்  காலம் .
                   பணத்தால் , நியாயம் தர்மம் நீதியை வாங்கும் கலியுக காலம் 
                   பாசம் உறவு, நட்பு இவை என்னவென்று கேட்கும் கலியுக காலம் 
                   தவறுகளை கண்டிக்க கடவுளே அவதாரம் எடுத்து வருவார் !
                   

சனி, 25 நவம்பர், 2023

தமிழும், தமிழ் மக்களும்

 


                                                 

                                                  தமிழும், தமிழ் மக்களும் 

        தமிழனின் படைப்பிற்கு உலகில் ஈடு இணை உண்டா ?
        வைணவர்கள் ஆற்றிய தொண்டிற்கு இணை உண்டா ?
       சைவர்கள் ஆற்றிய தொண்டிற்கு ஈடு இணை உண்டா ?
       நம் இதிகாசங்களுக்கும், புராணங்களுக்கும் இணை உண்டா ?

      கல் தோன்றா காலத்தே, முன் தோன்றி மூத்தகூடி !
      எனது தமிழ் பழமையான மொழியாக கருதப்பட்டதே !
      மற்ற மொழிகள் யாவும் எம்மொழிக்கு பிற்பட்டதே !
      சேவையும். கண்டுபிடிப்பும் என்றும் இன்றியமையானதே !
      
     கண் பார்வையற்ற ஹெலன் கேளரை நாம் பாராட்டுகின்றோம்
     ஆனால் ராமபத்ராசாரியாரை நினைவில் கொள்ளமாட்டோம் 
     முயற்சியால் பல கண்டுபிடிப்புக்களை செய்தவர் G D Naidu!
     மூலிகை பெட்ரோல் அறிமுகப்படுத்தியவர் ஸ்ரீ ராமர் பிள்ளை  

   பல கண்டுபிடுப்புகளை இந்திய விஞ்ஞானிகள் செய்தனரே 
  அப்துல்கலாம், சர்  சி.வி  ராமன், சமுதாயத்திற்காக செய்தனரே 
   ஒன்று மட்டும் நிரந்தரம், விஞ்ஞானிகளை வாழ விடுவதில்லை 
   அரசியல் செய்து, கண்டுபிடிப்பில் நாட்டம் கொள்வதில்லை !
   
   எங்கே இவர்களால் நாடு முன்னேற்றம் அடைந்துவிடுமோ ?
   தங்கள்  ஈட்டும் லாபத்தில் துண்டு விழுமோ என அஞ்சுமோ !
   நாட்டைப்பற்றிகவலைஇல்லை,என்றும் சுய நலக் கொள்கை !
   நாடு எப்படி போனால் என்ன ! தன குடும்ப முன்னேற்றமே !

  சிறுதொகை கொடுத்து, பெரும்தொகை அடைய வேண்டுமே!
 இதனையறியா பாமரமக்கள் வாழ்க்கை என்றும் பாழ்படுமே
  அன்று நடந்த வெள்ளையன் ஆட்சியால் நன்மை பெற்றோமே  !
  இன்று நடக்கும் கொள்ளையர் ஆட்சியில் நாடே நலிவுற்றதே !

தமிழ் மக்களே! சுதந்திர உரிமை கொண்டுஎதிர்த்துநில்லுங்கள் 
மக்களே,  குடியரசு நாட்டில் வாழ்கிறோம் என் நினையுங்கள் !
ஜனநாயகத்தில் உணவு, உடை, உறையுள் பெற வழி செய்யுங்கள் 
மக்கள் குரலே! மகேசன் குரல் என எங்கும் ஒலித்திடுங்கள் !
தன்னலமற்ற தலைவனையே  பதவி ஏற்க உதவிடுங்கள் !
வாழ்க தமிழ் திருநாடு ! வாழ்க பாரத நாடு !வாழ்க ஜனநாயகம் !