செவ்வாய், 4 ஆகஸ்ட், 2026

Sudanthirathinam - 2026

 


                                          சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம் 


          1. காசு கொடுத்து வாங்கவில்லை என்றாலும், பல உயிர்களை 
               காவு கொடுக்காத குடும்பங்கள் இல்லையென சொல்லும் 
              அளவுக்கு சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம் !

        2.  சுதந்திர தினம் கொண்டாடுவதை விட கொடுத்து உணர்வதே 
             சுதந்திரத்தின்  முழுமை !

        3.  எதை வேண்டுமானாலும் பேசி செல்ல வாங்கவில்லை சுதந்திரம் .
             பேசியதை செயல் படுத்துவதே  முழு சுதந்திரம் !

      4.   மதுவுக்கு  அடிமையாகி மாண்டபின், மானியம் வாங்கிட  
            வாங்கவில்லை சுதந்திரம் !

     5.    மாற்றி  முயற்சித்து மதியால் பிழைத்திடவே முழு சுதந்திரம்!

     6.   பதவி  வைத்து பத்தும் செய்ய வாங்கவில்லை சுதந்திரம் 
            பத்திரமாக மக்களை வாழ வைக்கவே முழு சுதந்திரம் !

    7.    சொத்து சேர்க்க இயற்கையை அழிக்க வாங்கவில்லை 
           சுதந்திரம் .

   8.    செத்து விடாமல்  சுற்றுசூழல் காக்கவே முழு சுதந்திரம் .

  9.     நாட்டுக்காக உயிர் நீத்த ராணுவ வீரர், தியாகிகளை 
          மதிப்பதற்காகவே  முழு சுதந்திரம் !

10,   தேசிய தலைவர்கள் சிந்திய ரத்தம் எழுதிய  இந்தியா எனும் 
        சித்திரம் 

11.   இளைஞ்சர்கள் கையில் ஆட்சி மாறட்டும். மக்களுக்கு நன்மை 
        பிறக்கட்டும்,

12.      முதலமைச்சர், பிரதமர்  யார் வந்தாலும் மக்களின் 
          நன்மை கொண்டு  இச்சுதந்திரநாளை வரவேற்போம்  நன்றி 

      தொகுத்தவர் : ரா.பார்த்தசாரதி 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக