புத்தாண்டு சபதம் எடுப்போமா !
புதிதாய் ஆண்டு பிறக்கும் போதெல்லாம்
புதிதாய் சபதம் எடுப்பதே ஓர் சம்பிரதாயம்
ஏனோ மனிதர்களுக்குள் ஒரு பிரகடனம் !
சரியோ தவறோ நமக்குள் ஓர் ஒழுக்கம் !
எத்தனை ஆண்டுகள் ! எத்தனை சபதங்கள்
சாதித்தது என்ன ! சாதிக்காமல் விட்டது என்ன !
புதிய கனவுகள், ஆசைக்கள் , நித்தம் புதுப்பித்து
உயரிய இலக்குகளை அடைய வழி என்ன !
சுயநலமும், சுரண்டல்களுமே கொள்களையாக்கி
கொள்ளையடிக்கும் அரசியல்வாதியின் வாய்ஜாலங்கள்
சிக்கி திசை மாறி, இனியும் நூலறிந்த பட்டம் போல்
மக்கள் வாழ்க்கை நலிந்து போக விடலாமா !
இலவசம் பெறாமல் ஓட்டுப்போட வேண்டும்
தவறு இழைத்தால் தட்டி கேட்கவேண்டும்
கனல் என கொதித்து புறப்பட வேண்டும்
இனியாவது உறுதியெடு தோழா !
நாள்காட்டி தாள்களை நீங்கள் கிழிக்கும்போது
நேற்று என்ன சாதித்து கிழித்தேன் என
மனசாட்சியை கேட்டு யோசி நண்பா !
தைரியத்துடன் முன்வந்து கேள் நண்பா !
உதாசீனத்தால் நிராகரிக்கத்தாலும் நிமிர்ந்து நில் !
மேலே எறிந்த பந்து கீழே பூமிக்கு வந்தே தீரும்
செய்யப்பட்ட முயற்சிகள் பலனை அடைந்தே தீரும் !
முயற்சி தன் மெய்வருத்த பலன் அளிக்கும் !
நவீன தொழில்நுட்பங்களுக்கு முன்னுரிமை அளிப்போம்
அதன் மேம்பாட்டில் சந்திரயான்யங்களாக வான் ஆளுவோம்
நாம் வாழப் பிறந்தவர்கள். சரியான பாதையில் செல்வோம்
எத்தனை பயணமானாலும் முதல் அடியில் கால் வைப்போம் !
புகுந்தது நம் வாழ்வில், புதியதோர் ஆண்டில் சபதம் எடுப்போம்
நாடும், வீடும் மேன்மையடைய என்றும் உறுதி எடுப்போம்
வேற்றுமையில் ஒற்றுமையை நம்மிடையே நிலைநாட்டுவோம்
புத்தாண்டு மலரட்டும் ! நமது வளம் பெருகட்டும் !
வாழ்க தமிழ் நாடு !! வாழ்க பாரதம் !!!
ரா.பார்த்தசாரதி - D-103 Metro zone. - 8148111951
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக