கதிரவன் குணதிசையில் பன்முகமாய் உதித்தான் ,
புலரும் புத்தாண்டை புதிதாய் உருவமெடுதான் 1
பூமியெங்கும் அமைதியே ஆட்சியாக அமையாத புத்தாண்டே ,
மண்ணில் விழும் மழைத்துளியும், விண்ணில் வீசும் காற்றும்
யாவருக்கும் பொதுதானே புத்தாண்டே !
நதியால் இணைந்த மாநில மக்கள்
அவலம் அழிந்து போகாதோ புத்தாண்டே !
எவர் ஆட்சி செய்யவரினும் நல்ல எண்ணத்துடனே
மக்களுக்கு நல்லதை செய்ய வேண்டும் புத்தாண்டே !
தீவிரவாதமும், லஞ்சமும், கருப்பு பணமும் ஒழியாதோ
மக்கள் மனதில் நிம்மதி ஏற்படாதோ !
சுயநலங்கள், சூழ்ச்சிகள் சுவடு தெரியாமல்
அவனியில் அழிந்து போகாதோ புத்தாண்டே !
நாட்டுக்கு நாடு, சமாதனம் மட்டும் ,
தானமாய் கிடைக்காதோ புத்தாண்டே !
ஆட்சியும் அதிகாரமும் ஏழையின்
ஏக்கத்தை தீர்காதோ புத்தாண்டே !
சுயநலமற்ற ஆட்சியாளர்களும்,அரசியல்வாதிகளும் தோன்றமாட்டார்களா !
நாட்டிற்கு நன்மை ஏற்படுத்தமாட்டார்களா!
பூமியெங்கும் அமைதி மட்டும்
ஆட்சி புரியாதோ புத்தாண்டே