வியாழன், 13 மே, 2021

thiru K.Ramesh shashtiabthapoorthi vazhthu madal



   

                                      ஷஷ்டியப்தபூர்த்தி  வாழ்த்து மடல் 

 
சக்ரபாணி தெருவில் உள்ள நவீன் ராஜ் ஹாலில் ஷஷ்டியப்தபூர்த்தி விழா 
திரு.ரமேஷ் (வெங்கடேச ஐயங்காருக்கு }ஷஷ்டியப்தபூர்த்தி  விழா !

அகவை   அறுபதும் , எண்பதும்  என்றும் சிறப்புடையதன்றோ 
தலைமையேற்று நடத்தும் ஷரத், சாய் சந்திவிற்கு பெருமையன்றோ 1

எல்  என் டீயில்  சிறப்புடன் பணியாற்றி  ஒய்வு பெற்றாய் 
அன்பு மகள் சந்தியாவிற்கு திருமணம் நிச்சியம் செய்தாய் !

 சஷ்டிஅப்தபூர்த்தி என்றாலே ஆசி வழங்குவதாகும்,பெறுவதாகும் 
 அகிலத்தில் சிறந்தது தாய் தந்தையர்  ஆசிர்வாதமே  ஆகும் !

திருமதி ஒரு வெகுமதி  என்று அழைப்பது  வழக்கம் 
திருமதியின் பெயரோ சுபஸ்ரீ என்றழைப்பது பழக்கம் !

 குடும்பம் ஒரு கதம்பம் , குடும்பம்  ஒரு பல்கலைகழகம்,
குடும்பத்தை , ஆணிவேர் போல் தங்குவதும் தலைவனாகும்  !


காலமும் , கோலமும்  என்றும் மாறும்,
கணவன், மனைவி உறவே  என்றும் நிலைத்து வாழும் !

கணவன்  என்றாலே கண்ணை போன்றவனாகும்,
அவன் வழியே உலகை காண்பவள் மனைவியாகும் 1


ஆயிரம் கைகள் மறைத்தாலும், ஆதவன் மறைவதில்லை,
ஆயிரம் உறவுகள் இருந்தாலும், மனைவி, கணவனை மறப்பதில்லை 


உலகில்  பிரிக்க முடியாதது  பந்தமும், பாசமும்,
உலகில் பிரிக்க முடியாது  நட்பும், உறவும் 1


உற்றாரும், உறவினரும்  ஒன்று கூடி விருந்துண்போம்
சிறியவர்களுக்கு ஆசி வழங்கி,பெரியவர்களின்ஆசியை பெற்றிடுங்கள் !

அன்பும், அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை 
பண்பும்  பயனும் அது .


  ரா.பார்த்தசாரதி  








                                   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக