பெண்ணே ! பட்டங்கள் பல
1. முதிர்கன்னியாய் முப்பது வருடங்கள் கழிந்தாலும்
ஏன் என்று கேட்காத ஊர் உலகம்.
2. காதலித்தவன் கைப்பிடித்து போனால்
கொடுக்கும் பட்டமோ " ஓடுகாலி ".
3. கைபிடித்தவாள் காலமெல்லாம் காப்பாற்றுவான்
என்று நினைத்து, பின் கழற்றிவிட்டு போனால்
கூசாமல் கொடுக்கும் பட்டமே " வாழாவெட்டி "
4. கட்டியநாள்முதல், கட்டில் ஆடியும்,
தொட்டில் ஆடாவிட்டால் அட்சதை
தூவி ஆசிர்வதித்த அதே கையே
கொடுக்கும் பட்டமே "மலடி "
5. விதிசெய்த சதியால் கட்டியவன்
காலமாகி கலங்கிநிற்கும் பேதைக்கு
கலப்படமில்லாமல் கொடுக்கும்
பட்டமே " விதவை "
6, பெண்ணே ! பல பட்டங்களை பெறாவிட்டால் என்ன,
பெண்களுக்காகவே பல வழங்க காத்திருக்கிறது
வள்ளலான இவ்வுலகம்.
7. பெண்ணே! உன்னால் முடியாதது உண்டோ
அன்பிற்கும், பாசத்திற்கும் என்றும் வளைந்து கொடு
ஆணவத்தையும் அகம்பாவத்தையும் என்றும் எதிர்த்திடு
உரிமைக்கும், உறவிற்கும் என்றும் கைகொடு !
8. வாழ்ந்தாலும் ஏசும் ! தாழ்ந்தாலும் ஏசும் !
தன்னம்பிக்கையோடு வாழ்நாள் முழுதும்
தன்மானமுள்ளவளாய் இந்த தரணியே பேசட்டும்
திறமையும், மனஉறுதியும் கொண்டு செயல்படு !
ரா.பார்த்தசாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக