புதன், 12 மே, 2021
Shastiabtha poorthi madal for Ramesh
அகவை அறுபதும், ஆயிரம் நிலவு காண்பதும் சிறப்புடையந்தன்றோ
இவ்விழாவினை கோகுல் பொறுப்பேற்று நடத்துவதும் பெருமையன்றோ !
சஷ்டிஅப்தபூர்த்தி என்றாலே ஆசி வழங்குவதாகும்,பெறுவதாகும்
அகிலத்தில் சிறந்தது தாய் தந்தையர் ஆசிர்வாதமே ஆகும் !
குடும்பம் ஒரு கதம்பம் , குடும்பம் ஒரு பல்கலைகழகம்,
குடும்பத்தை , ஆணிவேர் போல் தங்குவதும் தலைவனாகும் !
காலமும் , கோலமும் என்றும் மாறும்,
கணவன், மனைவி உறவே என்றும் நிலைத்து வாழும் !
கணவன் என்றாலே கண்ணை போன்றவனாகும்,
அவன் வழியே உலகை காண்பவள் மனைவியாகும் 1
ஆயிரம் கைகள் மறைத்தாலும், ஆதவன் மறைவதில்லை,
ஆயிரம் உறவுகள் இருந்தாலும், மனைவி, கணவனை மறப்பதில்லை !
வேலையும் செய்துகொண்டே மற்றும் பகுதிநேர நடுவராய் (கிரிக்கெட்டில்) இருந்து நற்பெயர் பெற்றாய்,
ஒரே மகன் நன்கு படித்து, நல்ல வேலையும் கிடைக்கப் பெற்றான் !
உலகில் பிரிக்க முடியாதது பந்தமும், பாசமும்,
உலகில் பிரிக்க முடியாது நட்பும், உறவும் 1
உற்றாரும், உறவினரும் ஒன்று கூடி விருந்துண்போம்
சிறியவர்களுக்கு ஆசி வழங்கி,பெரியவர்களின் ஆசியை பெற்றிடுங்கள் !
ரா.பார்த்தசாரதி ( பாச்சு )
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக