ஞாயிறு, 16 மே, 2021

Parasaran and Sandhya Marriage Vazhthu Madal = 24-05-2021




                                                   

                           திருமண  வாழ்த்து மடல் 
  இடம்: ராகவேந்திர கல்யாணமண்டபம்                                              தேதி: 24  மே 2021
                 கோடம்பாக்கம், சென்னை -

1, கடல்மங்கலம் வேணுகோபால பெருமாள் அருளால் ஓர் கல்யாண மேடை
   கோடம்பாக்கம் ராகவேந்திரா  கல்யாண நடைபெறும் திருமண மேடை 
   திரு.பராசரனுக்கும், திருமதி சந்தியா விற்கும் அமைந்த கல்யாணமேடை !

2. வாழ்க்கை  துணைநலம் நாடும்  பராசரன்  எனும்  ஆடவனே 
    என்றும் சென்னையில் சந்தியாவுடன் வாழ்ந்திடுவாய் சிறப்புடனே 

3, திருமணம்  என்றாலே உற்றார் உறவினர்  வாழ்த்துகளே 
     வாரணமாயிரம்  பாடியும்  மணமக்களை  வாழ்த்துவோமே !

4.  திருமணம்  என்பது  இருமனம் அல்ல 
     அதுவே  இருமனம் கொண்ட  ஒருமனம் !

5.   மூன்றெழுத்துக்கு  ஓர்   சிறப்புண்டு 
      முத்தமிழ்  எனும்  பெயருண்டு !

6.   ஐந்தெழுத்தில்(பராசரன்)  என்றும் நான்கு(சந்தியா) அடங்கும் 
     அதில் சந்தியா  என்ற பெயரும் விளங்கும் !

7.   திருமதி ஒரு வெகுமதி  என்று  கூறுவது வழக்கம் 
      திருமதியின் பெயரோ சந்தியா என்றழைப்பது பழக்கம்!

8.   காலமும்,  காட்சிகளும்  என்றும்  மாறும் 
      கணவன்  மனைவி உறவே என்றும் நிலைத்து வாழும் !

9.  மலர்போன்று  மலர்கின்ற மனம் வேண்டும் நற்பெண்ணே,
     மண்வாசனை மாறாத குணம் வேண்டும் மணப்பெண்ணே!

10,பிறந்த வீட்டின்  குலம் காக்க வேண்டும் ,
     புகுந்த வீட்டின்  நலம் காக்க  வேண்டும் !

11.கணவன் என்றாலே,  கண்ணைப் போன்றவனாகும்,
    அவன் வழியே  உலகை காண்பவள்  மனைவியாகும் !

  
12.ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை,
     ஆயிரம்  உறவுகள் இருந்தாலும், மனைவி, கணவனை மறப்பதில்லை!

13.திருமணம் என்றாலே உற்றார், உறவினர்  ஆசிர்வாதமே 
     அகிலத்தில் சிறந்தது தாய் தந்தையரின்  ஆசீர்வாதமே 

14. திருமணத்தை காணொளியில் கண்டு களித்தனரே  
      மகிழ்வுடன் தங்கள் வாழ்த்தையும் ஆசியும் வழங்கினரே !

15,அன்பும் அறனும் உடைத்தாயின், இல்வாழ்க்கை களித்தனரே 
     பண்பும் பயனும் அது.

      ரா.பார்த்தசாரதி -  8148111951
---------------------------==================================================================


வாரணமாயிரம்  சூழவலஞ்செய்து 
நாரணன் நம்பி நடக்கின்றாரென்று 
எதிர் பூரண பொற்குடம் வைத்துப் 
புறமெங்கும் தோரணம் நாட்டக் கனாக் 
கண்டேன் தோழி !

மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்று ஊத 
முத்துடைத் தாமம் நிரைதாழ்ந்த பந்தர்கீழ் 
மைத்துனன் நம்பி மதுசூதனன் என்னைக் 
கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழி !

















 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக