செவ்வாய், 4 மே, 2021

மகளே உன் வாழ்வு உன்கையில்

 


                                               மகளே உன் வாழ்வு  உன்கையில் 

           கல்யாணம் என்பது சொர்க்கத்தில் நிச்சையகப்படுவதா ?
          ஆயிரம் பொய் சொல்லி  ஒரு கல்யாணம்  செய்வதா ?

         தாலியே  பெண்ணிற்கு வேலி  என்பதா ?
         திருமணம் என்பது  இருமனம் கொண்ட ஒரு மனம் என்பதா ?

         சொல்வதெல்லாம்  அக்கால  வழக்கு !
        இன்றைய தலைமுறைக்கு ஏற்ப  பழகு !

        சக்தியே  இறைவனின்  சரிபாதி 
        வாழ்க்கையில் ஓவ்வொரு பெண்ணும் ஆணில் சரிபாதி !

       அன்று மணமகனை திருமணத்தின்போதுதான்  சந்திப்பு !
        இன்று கணினி மூலமும், கைபேசி மூலமும் நேரடி சந்திப்பு !

       மணமகனோ  எழுதிவைத்துக் கொண்டு பேசும் நிபந்தனைகள் !
       மணமகள் தான் சம்பாதிப்பதால் நிர்பந்திக்கும் நிபந்தனைகள் !

,      உடன் பிறந்தவர்கள், தாய் தந்தையரை  மறக்காமல்  இருக்கவும் 
      தன நிலைமை அறிந்து  தன குடும்பத்திற்கு உதவிக்கரம் நீட்டவும்  

     புகுந்த வீட்டிலும் எல்லோரையும் அனுசரித்து நடக்கவும்
     நானும் உனக்கு சமமாய் படித்து வேலை செய்கின்றேன் 

      எனக்கு எதிலும் சம பங்கு வேண்டும் என எதிர்பார்க்கின்றேன் 
      தாய் தந்தையருக்கு என்னால் முடித்ததை கொடுக்க விரும்புகிறேன் 

     உன் தாய் தந்தையரையும் என் பெற்றோர் போல் கருதுகிறேன் 
     உனக்கும்  நம் குடும்பத்திற்கும் உறுதுணையாய் இருப்பேன் !

    இல்லறம் என்பது விட்டுக்கொடுத்து வாழ்வது என்பதில் ஐயமில்லை!
    விட்டுக்கொடுத்தவர்கள்  வாழ்க்கையில்  என்றும் கெட்டுபோனதில்லை 

   விட்டுக்கொடுக்காத  வாழ்க்கை  என்றும் அடைவதோ  துன்பம் 
   ஒருவரையொருவர் விட்டுக்கொடுத்து  வாழ்தலே  இன்பம் !

   அன்பும், விட்டுக்கொடுக்கும்  மனபான்கே என்றும் நிலைத்திருக்கும் 
   நீ  அடிமை என எண்ணாமல் அன்போடு அரவனைத்துச் செல் !

  கணவனோடு வாழ்வில்  நம்பிக்கையுடன் கைகோர்த்து செல் 
 மகளே  என் வாழ்வு  உன் கையில்தான் என உறுதியிட்டு செல் !
1
     
                                                                                                                                 
      
     
    
       
        
 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக