,
மகனே ! உன் வாழ்வு உன் கையில் !
உன் விருப்பத்திற்கு ஏற்ற பெண்ணை தீர்மானி
உன் வருமானதிக்குள் செலவழிபவளை தீர்மானி
உன் பண்பையும் உன் படிப்பிற்கு எற்ற கௌரத்தையும்
மதிக்கின்ற பெண்ணையே ஏற்றுக்கொள் !
உன்னை அனுசரித்து எந்த இடத்திலும், உனக்கேற்ப
நடந்துகொள்ளும் பெண்ணையே தேர்ந்தெடுத்க்கொள் !
படித்ததால், உன் ஆணவ பேச்சால் ஒரு பெண்ணை தாழ்த்தி
பேசுவதை விட, மதிப்பும், மரியாதையும் தந்து கவர்ந்துகொள் !
அதிகார பேச்சும் , ஆணவம் உள்ள பெண்ணை தவிர்த்துவிடு
உனது வருமானத்தையே பெரிதாக நினைப்பவளை தவிர்த்துவிடு !
எதிலும் நீ உண்மையாய் நடந்துகொள் முன் யோசனையுடன் பேசு !
தவறாக பேசினாலும், மன்னிப்பு கேட்க தயங்காதே !
பெண்ணின் குணத்தையும், நடத்தையும், அறிந்து செயல்படு
எதிலும் ஒருமித்த கருத்துடன் விவாதித்து செயல்பாடு !
உன் பெற்றோர்க்கு தரும் மதிப்பால்தான், உன்னையும் மதிப்பாள்
எந்த பெண்ணும் மது,மாது, சூது இம்மூன்றையும் வெறுப்பால் !
இருகை சேர்ந்தால்தான் வாழ்க்கை என்பதை புரிந்துகொள்
உன் வழியே உலகை காண்பவள் மனைவி என புரிந்துகொள்
ரா.பார்த்தசாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக