காவியாஞ்சலி
தோற்றம்: 1937 மறைவு : 2017
திரு. வேணு கோபாலன்,பங்கஜவல்லியின் கடைக்கோடி மகனே
திரு. வி.சம்பத்ராகவன் எனும் பெயரை உடைய ஆண் மகனே
திட்டமிட்டு செலவழிப்பதில், சிக்கனத்தின் சிகரமாய் திகழ்ந்தாய்
எளிய உணவு, நல்ல பழக்கவழக்கங்களை பழகி வந்தாய் !
சிக்கனத்திற்கு எடுத்துக்காட்டாய், ஆடம்பரமின்றி திகழ்ந்தாய்
டென்னிசிலும், மேசைப்பந்திலும், பல பரிசுகளை வென்றாய் !
இறுதியில் பாரத் பெட்ரோலிய நிறுவனத்தில் பணி நிறைவுபெற்றாய்
விளையாட்டிலும், அலுவகத்திலும் நற்பெயர் பெற்று விளங்கினாய் !
சுருக்கெழுதிலும், தட்டெழுத்திலும் சிறந்து விளங்கினாய்
கிரிக்கெட்டில் சிறந்தும், நடுவராகவும் செயலாற்றினாய் !
காதல் திருமணம் புரிந்தாலும், கண்ணியமாக வாழ்ந்தாய்
அண்ணன் மகன்களுக்கு உதவியும், முன்னேற்றமடையாவும் செய்தாய்!
எண்பது வயதிலும் கால்முட்டியில் சிகிச்சை செய்துகொண்டாய்
மனோதிடத்துடன் வீட்டில் பயிற்சி செய்து குணப்படுத்திக்கொண்டாய் !
உனது சகோதரர்களைக் காட்டிலும் நோய் நொடி இல்லாமலிருந்தாய்
இருமகள்கள் அருகிலிருக்க ,உன் மரணத்தை அழைத்துக்கொண்டாய்
உன்னைப் பற்றி மகள்களுக்கும், உறவினர்களுக்குமே தெரியும்
உன் அருமை,பெருமைகள் எங்களுக்கே தெரியும் !
மூத்த மகள் வீட்டில் இறப்பதற்காகவே வீதி உன்னை அழைத்ததே
உற்றார், உறவினர்களை உனது மரணம் சோகத்தில் ஆழ்த்தியதே!
இருந்தபோது யாரும் உன்னை புகழ்ந்ததில்லை
இறந்தபின் யாரும் புகழாமல் இருப்பதில்லை!
நெருநல் உளன் ஒருவன் இன்றில்லை எனும்
பெருமை உடைத்திவ் வுலகு . என்பது வள்ளுவன் வாக்கு
ரா.பார்த்தசாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக