வெள்ளி, 23 ஜூன், 2017

சம்பத்ராகவன்





                                                     
                                                             வி. சம்பத்ராகவன்

   தோற்றம்:  1937                                                                               மறைவு : 2017

           திரு. வேணு கோபாலன்,பங்கஜவல்லியின்  கடைக்கோடி   மகனே
           திரு. வி.சம்பத்ராகவன்  எனும் பெயரை  உடைய ஆண் மகனே

           திட்டமிட்டு செலவழிப்பதில், சிக்கனத்தின் சிகரமாய் திகழ்ந்தாய் 
           எளிய உணவு, நல்ல பழக்கவழக்கங்களை  பழகி வந்தாய் ! 

           சிக்கனத்திற்கு   எடுத்துக்காட்டாய், ஆடம்பரமின்றி திகழ்ந்தாய்
           டென்னிசிலும், மேசைப்பந்திலும்,  பல பரிசுகளை  வென்றாய் !

           இறுதியில் பாரத் பெட்ரோலிய நிறுவனத்தில் பணி நிறைவுபெற்றாய்
           விளையாட்டிலும், அலுவகத்திலும்  நற்பெயர் பெற்று விளங்கினாய் !

           சுருக்கெழுதிலும், தட்டெழுத்திலும்  சிறந்து  விளங்கினாய்
           கிரிக்கெட்டில் சிறந்தும், நடுவராகவும் செயலாற்றினாய் !

           காதல் திருமணம் புரிந்தாலும், கண்ணியமாக  வாழ்ந்தாய் 
           அண்ணன் மகன் படிப்பதற்கு உதவி செய்து முன்னேற்றினாய் !      






          எண்பது வயதிலும் கால்முட்டியில்  சிகிச்சை செய்துகொண்டாய்
           மனோதிடத்துடன்  வீட்டில் பயிற்சி செய்து குணப்படுத்திக்கொண்டாய் !

           உனது சகோதரர்களைக் காட்டிலும் நோய் நொடி இல்லாமலிருந்தாய்
           இருமகள்கள்  அருகிலிருக்க ,உன் மரணத்தை அழைத்துக்கொண்டாய்

           உன்னைப்  பற்றி  மகள்களுக்கும், உறவினர்களுக்குமே  தெரியும்
           உன் அருமை,பெருமைகள்   எங்களுக்கே  தெரியும்  !   
           
           மூத்த  மகள் வீட்டில் இறப்பதற்காகவே  வீதி உன்னை  அழைத்ததே 
           உற்றார், உறவினர்களை உனது மரணம் சோகத்தில்  ஆழ்த்தியதே!                                   
           இருந்தபோது  யாரும் உன்னை புகழ்ந்ததில்லை
           இறந்தபின் யாரும் புகழாமல் இருப்பதில்லை!

           நெருநல்  உளன் ஒருவன் இன்றில்லை எனும் 
           பெருமை  உடைத்திவ் வுலகு .  என்பது வள்ளுவன் வாக்கு 


              ரா.பார்த்தசாரதி  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக