நான் வென்றிடுவேன்
நல்லெண்ணம் கொண்டால் எல்லாம் நல்லதாக நடக்கும்
நம்பிக்கை கொண்டு செயலாற்றினால் நன்மை கிடைக்கும்
தடைகளை தாண்டி சென்று வெற்றி அடைந்திடுவேன்
நான் நினைத்தது நடந்துவிட்டால் பெருமிதம் கொள்வேன் !
உடலில் உணர்வு இருக்கும் வரை உழைப்பதை நிறுத்தமாட்டேன்
பிறர் பொருளை எடுத்து அனுபவிக்க கனவிலும் நினைக்கமாட்டேன்
பொறுப்பை ஏற்றால் முடியும் வரை உறங்கிட மாட்டேன்
புதிய பாதையை அமைத்து பொது நீதியை அமைத்திடுவேன் !
வெற்றி பெற்றவர்கள் எல்லோரும் புத்திசாலி இல்லை
புத்தி உள்ளவர்கள் எப்பொழுதும் வெற்றி காண்பதில்லை
குறைகள் காணும் மனதிற்கு நிறைகள் தெரிவதில்லை
முடிக்கப் பட்ட நற்செயலுக்கு குறை கூறாமலில்லை !
எங்கும் நேர்மையும், ஒழுக்கமும்மே ஆட்சி செய்யும்
அரிய செயல் செய்வதற்கும் மனோதிடம் அவசியம்
என்றும் உங்கள் நண்பனாய் இருந்து மதிப்பினை பெறுவேன்
தொண்டுள்ளம் கொண்டு, புன்னகையால் நான் வென்றிடுவேன் !
ரா.பார்த்தசாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக