திங்கள், 12 ஜூன், 2017

ஆசையே அலைபோலே

                                             


                                               ஆசையே அலைபோலே

       ஆசையின் போக்கில் செல்லும் மனிதனே 
       ஆபத்தை விலைக்கும் வாங்கும் மானிடனே 
       அடைவது எல்லாம் துன்பமே அறிந்திடுவாயா 
       ஆசையை அடக்க மார்க்கத்தினை அறிந்தாயா !  

       துடுப்பிலா படகில் சென்றால் இலக்கை அடையமுடியுமா 
       பொறுப்பில்லாமல் வாழ்வதாலே பலன் பெறமுடியுமா 
       மனிதனின் மனதினில் அலைபோல ஆசைகள் எழுமே 
       ஆசையை கடிவாளமிட்டு  அடக்கி ஆள வேண்டுமே!

       எதை எடுத்தாலும் சந்தேகிப்பவன் வாழ்க்கை துயரமாகும் 
       தன்னை நம்பாதவன், கற்பனை செய்து தவிப்பவனாகும் 
       மதிப்பினை தருவது நிறை வேற்றப்படும்  நற்செயலாகும் 
       இதனை மனதில் கொண்டால் வாழ்க்கை  நலமாகும் !

        கையளவு இதயம் வைத்தான், கடலளவு ஆசை வைத்தான் 
        ஆசையே மனிதனின் அழிவிற்கு வித்து என உணரவைத்தான் 
         மண் மீதும், பெண் மீதும் ஆசை கொண்டவனை அழித்தான் 
         மகாபாரதத்தையும், ராமாயணத்தையும் உதாரணமாக வைத்தான்
       
        ஆசையை துறந்தவன் முற்றும் துறந்த முனிவனாகிறான் 
        ஆசையை  துறக்காதவன் துன்பமெனும் கடலில் மூழ்கின்றான் 
         மது, மாது, சூது  இம்மூன்றும் மனித வாழ்வை சீர்குலைக்கும் 
         மனிதனின் மனம்  செம்மையாய் இருந்தால்தான் நன்மை பயக்கும்!

        மனமெனும் கடிவாளத்தால் ஆசையினை அடக்கப்  பழகு 
        பிறர் பொருள் மீது  ஆசை படுவதையும் அறவோடு விலக்கு
         ஆசையை விட பேராசையே அழிவிற்கு பாலம் அமைக்கும் a
        ஆசைக்கு அணை போட்டால்தான் வாழ்க்கை நிலைக்கும் !


           ரா. பார்த்தசாரதி

        
                  
              
              
                

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக