புதன், 21 ஜூன், 2017

மூன்றெழுத்து




                                                           மூன்றெழுத்து 

            கவிப்பரணியேறி  கலிங்கத்துப் பாடுகின்றேன் ,
            கேளுங்கள், கேளுங்கள் !

             ஆடிடும் அலையினில் ஏறிட்டும்  நுரையென
             பாடிடும்  பாட்டினில்  பண் ( இசை )  என, எங்கள் தாய்மொழி தமிழில்

              மூன்றெழுத்திற்கு  என்றும் ஓர்  சிறப்புண்டு,
               மூத்தமிழ்  என்ற பெயருண்டு

                தாய் தன் பிள்ளைகளிடம்  காட்டும் பரிவே    அன்பு 
                அன்பிற்கும் மூன்றெழுதுதான்

                தந்தை தன்  மகனுக்கு ஊட்டும் ஊக்கமே அறிவு 
                அறிவிற்கும்   மூன்றெழுதுதான்   

                  குரு தன் மாணவர்களுக்கு அளிப்பதோ ஆன்ற கல்வி 
                  கல்விக்கும் மூன்றெழுதுதான்

                   பக்தன் இறைவனிடம் கொள்வதோ  பக்தி
                   பக்திக்கும்  மூன்றெழுதுதான்  

                   கவிஞ்சன்   கவிதையை பாங்குற உரைப்பதே யுக்தி 
                   யுக்திக்கும் மூன்றெழுதுதான்  

                    குழந்தையின்  சிரிப்பே  மழலை 
                     பூக்களின்   சிரிப்பே  மணம் 

                     நாடு நலம் பெற வேண்டின்
                     நாட வேண்டும் நல்லவர்  நட்பு 

                     படை வீரர்கள்  திறமையே  வீரம் 
                     பெண்டிர்க்கு  அணிகலனே   கற்பு 

      மனிதன் நல்லதை செய்ய தேவை  நல்ல மனம் 
      கைம்மாறு  எதிர்பாராமல் செய்வதோ வள்ளல் குணம்
                                 
      தானை தலைவனும், தளபதியும் அடைவதோ வெற்றி 

       ஐந்தெழுத்தில் ( ராமானுஜம்) என்றும் மூன்று அடங்கும்
       சுபாஷ் (மூன்றெழுத்து ) என்ற  பெயரும் விளங்கும் !

      யோகா வகுப்பினை  வெற்றியுடனே நடத்திவரும் 
       நமது யோகா வகுப்பு தளபதி,மூன்றெழுத்து கொண்ட   சுபாஷ் ! 
                   
                            
                        
         ரா.பார்த்தசாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக