திங்கள், 27 நவம்பர், 2023





                                               சமாமெஷ்ஷில்  பனித்துளி                                                       


             பனித்துளிகள் புல்லின்மேல்  மிக அழகாய் காட்சியளிக்குதே 
            படுக்க வெண்ணிறப்பாய்  போல் நமக்கு தோற்றமளிக்குதே 
            குளிர்ச்சியுடன் எங்கும் தரையில் பரவி நீண்டு பரவியதே 
            குளிர்ந்த காற்றுடன் தென்றல்போல் சில்லென்று வீசுதே 
           சிலமணி நேரத்தில் கதிரவன் ஒளி பட்டு மறைந்ததே 
           சமா மெஷ்ஷில் அதிகாலையில் காணும் காட்சியானதே 
           மரங்களும் இலை உதிர்த்து பல நிறங்களில் மிளிர்கின்றதே !
           எங்கள் மனதிலும் உடையிலும் குளிர்ச்சி உண்டானதே !


              
     

ஞாயிறு, 26 நவம்பர், 2023

Ithuthaan Kaliyugam

 


                                                            



                                                           இதுதான்  கலியுகம் 

                   நல்லவை அழிந்து  தீயவை  தொடர்ந்து நடப்பதே கலியுகம் 
                  தன்னலமே பொதுநலமாக  மனிதன் கருதும் கலியுக காலம் 
                  மக்களை ஏமாற்றி பணம் சேர்பதயே குறிக்கோலான காலம் 
                  பல கோடிகள் பணம் சேர்ந்தாலும் திருப்தியடையாத காலம் 

                  கொள்கைகள் இருப்பது போல் கபடநாடகம் ஆடும் காலம் .
                 பொய் மூட்டைகள் அவிழ்த்து விடும் சந்தர்ப்பவாதிகள் காலம் 
                  பணத்தைக் கொண்டு மக்களை ஏமாற்றும் பொற்காலம் 
                  எதையும் செய்யாமல் வாய் கிழிய சமூக நீதி பேசும் காலம் 

                  மது, மாது மற்றும் சூதாட்டம் தலைவிரித்து ஆடும் காலம் 
                  ஆண்களை குடியால் அடிமையாகி வாழ்வை அழிக்கும் காலம் 
                   பணத்திற்காக பெண்கள் கற்புநெறி தவறி நடக்கும் காலம் .
                   அடிதடி,  கொலை, கொள்ளைக்கு  அஞ்சாத கலியுக காலம் 

                   மக்களையும், ஏழைகளையும் ஏமாற்றி பிழைக்கும்  காலம் .
                   பணத்தால் , நியாயம் தர்மம் நீதியை வாங்கும் கலியுக காலம் 
                   பாசம் உறவு, நட்பு இவை என்னவென்று கேட்கும் கலியுக காலம் 
                   தவறுகளை கண்டிக்க கடவுளே அவதாரம் எடுத்து வருவார் !
                   

சனி, 25 நவம்பர், 2023

தமிழும், தமிழ் மக்களும்

 


                                                 

                                                  தமிழும், தமிழ் மக்களும் 

        தமிழனின் படைப்பிற்கு உலகில் ஈடு இணை உண்டா ?
        வைணவர்கள் ஆற்றிய தொண்டிற்கு இணை உண்டா ?
       சைவர்கள் ஆற்றிய தொண்டிற்கு ஈடு இணை உண்டா ?
       நம் இதிகாசங்களுக்கும், புராணங்களுக்கும் இணை உண்டா ?

      கல் தோன்றா காலத்தே, முன் தோன்றி மூத்தகூடி !
      எனது தமிழ் பழமையான மொழியாக கருதப்பட்டதே !
      மற்ற மொழிகள் யாவும் எம்மொழிக்கு பிற்பட்டதே !
      சேவையும். கண்டுபிடிப்பும் என்றும் இன்றியமையானதே !
      
     கண் பார்வையற்ற ஹெலன் கேளரை நாம் பாராட்டுகின்றோம்
     ஆனால் ராமபத்ராசாரியாரை நினைவில் கொள்ளமாட்டோம் 
     முயற்சியால் பல கண்டுபிடிப்புக்களை செய்தவர் G D Naidu!
     மூலிகை பெட்ரோல் அறிமுகப்படுத்தியவர் ஸ்ரீ ராமர் பிள்ளை  

   பல கண்டுபிடுப்புகளை இந்திய விஞ்ஞானிகள் செய்தனரே 
  அப்துல்கலாம், சர்  சி.வி  ராமன், சமுதாயத்திற்காக செய்தனரே 
   ஒன்று மட்டும் நிரந்தரம், விஞ்ஞானிகளை வாழ விடுவதில்லை 
   அரசியல் செய்து, கண்டுபிடிப்பில் நாட்டம் கொள்வதில்லை !
   
   எங்கே இவர்களால் நாடு முன்னேற்றம் அடைந்துவிடுமோ ?
   தங்கள்  ஈட்டும் லாபத்தில் துண்டு விழுமோ என அஞ்சுமோ !
   நாட்டைப்பற்றிகவலைஇல்லை,என்றும் சுய நலக் கொள்கை !
   நாடு எப்படி போனால் என்ன ! தன குடும்ப முன்னேற்றமே !

  சிறுதொகை கொடுத்து, பெரும்தொகை அடைய வேண்டுமே!
 இதனையறியா பாமரமக்கள் வாழ்க்கை என்றும் பாழ்படுமே
  அன்று நடந்த வெள்ளையன் ஆட்சியால் நன்மை பெற்றோமே  !
  இன்று நடக்கும் கொள்ளையர் ஆட்சியில் நாடே நலிவுற்றதே !

தமிழ் மக்களே! சுதந்திர உரிமை கொண்டுஎதிர்த்துநில்லுங்கள் 
மக்களே,  குடியரசு நாட்டில் வாழ்கிறோம் என் நினையுங்கள் !
ஜனநாயகத்தில் உணவு, உடை, உறையுள் பெற வழி செய்யுங்கள் 
மக்கள் குரலே! மகேசன் குரல் என எங்கும் ஒலித்திடுங்கள் !
தன்னலமற்ற தலைவனையே  பதவி ஏற்க உதவிடுங்கள் !
வாழ்க தமிழ் திருநாடு ! வாழ்க பாரத நாடு !வாழ்க ஜனநாயகம் !







      

       

திங்கள், 20 நவம்பர், 2023

தமிழனே துணிந்து செல்லடா

 



                                                   



                                  தமிழனே  துணிந்து  செல்லடா 

             தமிழன்  என்று சொல்லடா ! தலைநிமிர்ந்து நில்லடா !
             தமிழனே ! என்றும்  கைகட்டி வேடிக்கை பார்க்கலாமா !
             இந்து மதத்தை பழிப்பவனை  பழிவாங்கவேண்டாமா !
             எழுச்சி கொள்ளடா !  என்றும் துணிந்து செல்லடா !

            வேற்று மதத்தினர் இந்து மதத்தை குறைகூறலாமா 
            கூறை  கூற ,என்ன தகுதி இருக்கு என எண்ணவேண்டாமா 
            ஆராய்ந்து அறிந்து சொல்ல  அறிவு வேண்டாமா
            பிறர் எழுதி கொடுத்து படிப்பதை  அறிய வேண்டாமா !

           மதத்தைப் பழிப்பவன் தாய் மொழியை பழிப்பதற்கு சமம்.
           அவர்களின் பேச்சுக்கு சாட்டையடி கொடுக்க வேண்டாமா 
           மாநில சுயாட்சி என்ற பெயரில் நாட்டையே விற்பார்கள்
            தன மனதிற்கு பட்டத்தைப் பொய்யாக உரைப்பார்கள் !

           கொள்ளை அடிப்பதையே தொழிலாகக் கொண்டவர்கள் 
            நீதி தர்மம் மற்றும்  சமூக நீதியை பின்பற்றாதவர்கள் 
            தண்டனை பெற்றவர்களையும் கூட்டாக சேர்ப்பார்கள்     
           மக்களை பணத்தால் அடிமைப்படுத்த  நினைப்பார்கள் 

           பாரதிபோல் எதையும்  எதிர்த்து  முழங்க வேண்டும் !
           மதத்தை பழிப்பவனை, தரணியில்  அகற்ற வேண்டும் !
           தமிழ்  மக்களே ஏமாறாதீர்கள், தகுந்த பாடம் புகட்டுங்கள் 
           மக்கள் குரலே, மகேசன் குரல் என நினையுங்கள் !

          ரா.பார்த்தசாரதி 

                

வெள்ளி, 17 நவம்பர், 2023

சற்றே சிந்தித்துப் பார் தமிழா ! தமிழா !!

    



                                                   

                                



                  சற்றே  சிந்தித்துப் பார்  தமிழா ! தமிழா !!

                 எங்கே செல்கிறது நம் தமிழ் நாடு ? தமிழா !
                 சற்றே நினைத்துப்பாருங்கள் தமிழ் மக்களே !
                 இன்று காண்பது என்ன! கோடி கணக்கில் லஞ்சம் 
                 பொறுப்புள்ள மந்திரிகளே லஞ்சத்திற்குள் தஞ்சம் 

                 லஞ்சம் வாங்கினாலும் தண்டனையை தடுக்கலாம் 
                 நீதியை வளைத்தால் தண்டனையின்றி தப்பலாம் !
                 லஞ்சம் வாங்கியவன் சிறிதும் வெட்கப்படவில்லை 
                 மக்கள் வரிப் பணத்தை சுருட்டுவதாக நினைப்பதில்லை 

                 கண்டுபிடித்தாலும் அதனை திருப்பி கொடுக்க மனமில்லை !
                 எதையும் பணத்தால் சாதிக்கலாம் என்கிற நினைப்பு !
                 நாட்டில் ஆயிரம் பிரச்சனை இருக்கு? தீர்வு ஒன்றும்மில்லை 
                 கொள்ளையடித்ததை பங்குபோடுவதற்கே நேரமில்லை !

                 கோடிக்கணக்கில்  நாட்டையே விற்றாலும் ஆச்சரியமில்லை !
                  அதனை வேறு நாட்டில் முதலீடு செய்ய தயங்குவதில்லை !
                  ஏமாறும் மக்கள் ஏமாந்துகொண்டே  இருக்கவேண்டும்  
                  என்றைக்கு திருந்துமோ ! என்று திறன் கொண்டு எதிர்க்குமோ!

                  மக்களே  சபதம் மேற்கொண்டு  ஓட்டுக்காக பணம் வேண்டாம் 
                  நடுநிலை தவறாத நீதியும், அரசியலும் ஆட்சி செய்ய வேண்டும்  
                  கோ டிக்கணக்கான பணத்தை அரசே திரும்ப எடுக்க வேண்டும் 
                  எடுத்த பணத்தை நல்வழிலயில் மக்களுக்கே செலவிட வேண்டும் 


                  ரா.பார்த்தசாரதி 
                       

                  
                                   
                                   
1
                                 

 

அளவுக்கு மிஞ்சினால்

 


      


                                                        

                                               அளவுக்கு  மிஞ்சினால் 

                        அளவுக்கும் மிஞ்சினால் எல்லாம் ஆபத்தே 
                        இனிப்பு அதிகமானாலும் உடம்பிற்கு ஆபத்தே 
                        உப்பு அதிகமானாலும் உடம்பிற்கு ஆபத்தே 
                        அதிக கவலைகள்  உடம்பிற்கு என்றும் ஆபத்தே 

                         அதிக கண்விழிப்பும்  உடலுக்கு என்றும் ஆபத்தே 
                         அதிக உடற்பயிற்சியும் உடலுக்கு என்றும் ஆபத்தே 
                         அதிக குளிர்ச்சியுடன் சாப்பிடுவதும்        ஆபத்தே 
                         அதிக சூட்டுடன் குடிப்பதும் உடம்பிற்கு ஆபத்தே 
 
                         அதிக தூரம் ஓடினாலும்,நடந்தாலும் ஆபத்தே 
                         அதிக நேரம் கண்விழித்தல் உடம்பிற்கு ஆபத்தே 
                         அதிக நேரம் உறங்கினாலும் உடம்பிற்கு ஆபத்தே 
                         அளவிற்கு மிஞ்சி பணம் சேர்த்தாலும்  ஆபத்தே!

வியாழன், 16 நவம்பர், 2023

எங்கள் தலைவர் நரேந்திர மோடி










                                        எங்கள் தலைவர் நரேந்திர மோடி                                  

                          தன்னலம்  கருதாதவனே தலைமைக்கு தகுதியானவர்!
                           நாட்டு  நலனில் அக்கறை கொண்டவனே தலைவர் !  
                           தனக்கின்றி பிறர் நலனை கருத்துபவனே  தலைவர்! 
                           யார் குற்றம் புரிந்தாலும் தண்டிப்பவனே  தலைவர் !
                           தன்னலம் முடையவன் தன குடுப்பதையே நோக்குவார்!
                           தனக்கு மிஞ்சியே தர்மம் என நினைப்பார் !
                           நல்லவர்களின் துணை கொண்டு நற்செயல் புரிபவர் !
                           நாட்டின் நிலைமைக்கு ஏற்ப நலத் திட்டங்களை செய்பவர்!
                           தேனீர் விற்றாலும் தேச மக்களை நினைப்பவர் !
                           அவரே எங்கள் பிரதமர் திரு, நரேந்திர மோடி  ஆவார்!

                           ரா.பார்த்தசாரதி 
                                
                                
                                  

திங்கள், 13 நவம்பர், 2023

கொள்கையா ! ! கொள்ளையா !!

 


 

                                                



                                         கொள்கையா  ! !    கொள்ளையா !!

                      அரசியல் தலைவர்கள் தனக்கென  ஓர் கொள்கை !
                     அதனை பின்பற்ற வைப்பதே அவர்களின் கோரிக்கை !
                     இதனை விளம்பரப்புடுத்துவதே அவர்களின் வாடிக்கை !
                     இதனை இன்று கடைபிடிக்கத் தவறி விட்டார்களே !
                     தன்  குடும்பம், தன் வாரிசு என நினைக்கின்றார்களே !
                     தன்னலம் கருதுபவர்கள், பிறர் நலம் கருத்தமாட்டார்களே !
                    நாட்டை , கொள்ளையடிப்பதே எண்ணமாக கொண்டவர்களே !
                    கொள்கையை கடைபிடிக்காமல் காற்றில் பறக்கவிட்டவர்களே !
                     தன்  தவற்றை உணராமல், பிறரை குறை கூறுபவர்களே !
                     எல்லாம் செய்துவிட்டோம் என பொய்யுரை கூறுபவர்களே !
                     மக்களை அராஜகத்தால்  அடக்க என்றும் நினைப்பவர்களே!
                     கொள்கையின்றி, கொள்ளையில் கூட்டு சேருபவர்களே !
                     தர்மம், நியாயம் பற்றி சிறிதும் கவலைப்படாதவர்களே !
                     கொள்கையின்றி, கொள்ளையடித்து நரகம் அடைபவர்களே !
                    உங்களுக்கு தகுந்த பாடம் புகட்டுவார்கள் தமிழ் மக்களே !
 

                    


வெள்ளி, 10 நவம்பர், 2023

Kalamum, Neramum

 


                                                             காலமும்  நேரம் 

                            காலமும், நேரமும்  மனிதனுக்காக காத்திராது 

                              கடந்து விட்ட நேரமும் திரும்ப  வாராதது 

                             காலத்திற்கு ஏற்ப, எங்கும் நேரம்  மாறுபடுமே  

                              நாட்டிற்கு நாடு, மாநிலத்திற்கு ஏற்ப மாறுபடும் 

                              இவை எல்லாம் சூரிய உதயத்தால் மாறுபடுமே 

                              காலத்திற்கு ஏற்ப நாம் வேலை செய்யவேண்டுமே 

                              நேரத்திற்கு தகுந்தாற்போல் மாறுவது  நம் கடமை 

                              இதுவே  மனிதர்கள் எல்லோருக்கும் பொது உடைமை 

                              கடல் அலையும், நேரமும் மனிதனுக்காக காத்திராது  

                              சந்தர்ப்பம் வரும்போது அதனை நழுவவிடக்கூடாது 

                                காலமும் ,  நேரமும்  பொன் போன்றதன்றோ 

                               அதனை மதித்து போற்றுதல் நம் கடமையன்றோ !

                               எங்கே சென்றிடும் காலம் ! நம்மையும் வாழவைக்கும் !

                             

வெள்ளி, 3 நவம்பர், 2023

 




                                                   எங்கே சமூக  நீதி

              இதுதான்  நல்லாட்சியா ? இதுதான் சமூக நீதியா 
              நிர்வாணமாக்கி  இருவரிடம் கொள்ளை அடிப்பதும்,
              கடையில் தேநீர் கேட்டவனிடம் இனத்தினால் ஒதுக்கியதும் 
              குடிநீரில் மலம் கலந்தவனை கண்டுகொள்ளாமல் இருப்பதும்
              மனிதனின்  தலை மீது சிறுநீர் கழித்துஅவமானப்படுத்துவதும்,
              மாநிலம், நாடு என்றாலும் எல்லோர்க்கும் ஒரே நீதிதான் 
              தவறு எங்கு நடந்தாலும் அரசு தலையிடவேண்டுமே 
              இச்சமூக  அநீதிக்கு அரசு தண்டனை கொடுக்கலாமே ,

              திராவிடம்  பேசுபவன்,  சமூக  நீதியை பற்றி பேசுவானா !
             சந்தானத்தை பற்றி பேசுபவன், சாராயக்கடையை மூடுவானா !
             கோர்ட்டில் முறையிடாமல், முட்டையை காட்டி ஏமாற்றுவானா 
              

              பெண் உரிமை பணத்தை  சிலருக்கே கொடுப்பானா !
              பெண்கள்  இலவசமாக செல்ல ஓட்டை பேரூந்து அனுப்புவானா 
              காவல் துறையை கைபொம்மையாக்கி நீதி தவறுவானா 
              எல்லாம் சரியாக நடக்கின்றது என பொய்  உரைப்பானா !
              மக்கள் ஒரு நாள் தட்டி கேட்பார்கள் என  நினைபானா !
              கேட்டால்  அடக்கு முறை ஒன்றே  என தீர்மானிப்பானா !

              எழுந்திடுங்கள்! எதிர்த்திடுங்கள் ! சமூக நீதியைகாப்பாற்ற !
              பொருளாதாரத்தையும், சமூகநீதியையும் காப்பாற்றுங்கள் 
              காந்தியின் வழியை பின்பற்றி இவற்றை நிலைநாட்டுங்கள்