வருவது வரட்டும்
வானத்திற்கு கீழ் வீட்டை கட்டிவிட்டு
வான்மழைக்கும் வீசும் புயலுக்கும்
வரும் துன்பதிற்கும், வாட்டும் வேதனைக்கும்
வருந்துவதா? வாடுவதா ? மனம் விவாதிக்கிறது !
பலரின் வார்த்தைகள் என்றும் ஆறுதலிக்கும்
ஆறுதல் அளித்தலும், அவஸ்த்தையோடு மனம்
அவதிப்படும்போது, துயரம் கொள்ளாதபோது
மனமே கலங்காதே !துணிந்தபின் துயரமடையதே !
வாழ்க்கை வலியுடையது, வலையும்போது,
நிமிர்ந்தாலும், வளைந்தாலும் ஒருவித வலியாகும்
வேதனையாக்குவதும், மனம்தான், பின் அதுவே
வசந்தமாகுவதும், மனதின் வேலையும் அதுவே !
கருவறையில் இருந்தவரை நமக்கு கவலையில்லை
கணவாயுக்களியிலை எந்த துன்பம்மில்லை
கண்விழிக்கத் தெரிந்தவுடன் நமக்கு கவலையும்
கனவும், பயமும் , நமக்கு தோன்றாமலில்லை!
வலிவுடைய வாழ்க்கையை வலிதாக்கு
மனவலிமையுடன் அதனை எதிர்நோக்குதுடன்
தைரியத்துடன் வரவழைத்து அதை எதிர்நோக்கு
வானத்தின் கீழ் வாழ வந்தோம், வருவது வரட்டும் !
ரா.பார்த்தசாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக