ஓவியமா ! காவியமா!
ஒவியப்பெண்ணே ! உன்னையுமா
விட்டுவைக்கவில்லை இந்த உலகம் !
காதலுக்காக ஒப்பிடும் பெண்ணே
நீ நிலவா, காவியமா !
கண் வரைந்த ஓவியமா !
ஓவியத்தில் கூட ஒளிவுமறைவும்
இலைமறைவாய், காய்மறைவாய்
காட்டிடும் மேனியாக,
வேண்டாமென்றது * ஒட்டுத்துணி * !
கலைக்காகத்தானே கலைதெறியப்படுகிறது
கண்ணியமான ஆடை !
இறைவன் கொடுத்த அற்புத பெண்ணழகு
ஆதாம், ஏவாளின், அந்தக்கால நிஜமாய்
கலைகளுக்காக களவாளப்படுகிறது
சிலையும், பெண்ணின் கற்பும், மானமும்
காற்றில் பறக்கவிடப்படுதே !
ரா.பார்த்தசாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக