ஞாயிறு, 20 ஜூன், 2021

Father's day

 



    தந்தையர்  தின விழா


                            எந்தையும்,  தாயும் மகிழ்ந்து குலாவிய  நாடு ,
                            அன்னையும், பிதாவும் முன்னெறி தெய்வம் என்ற நாடு ,
                            தாயை  விட  சிறந்த  கோவில்  இல்லை,
                            தந்தை  சொல்மிக்க  மந்திரம்  இல்லை !

                            தாயிடம்  அன்பும்,  தந்தையிடம்  அறிவும்,
                            அவர்களால்  கல்விமானாய் உலகில் திகழவும்,
                            பணம் ஒன்றினால்  பாகுபடுத்த  தெரிந்தவனாய்,
                            ஏன்  பாசத்தை மட்டும் காட்ட   தயங்குகின்றாய் !

                            அன்று அவர்கள்  கொடுத்த   முகவரிதான்,
                            இன்று  உன்னை  அடையாளம் காட்டுகின்றதே,
                            பழையதை  மறந்து, புதியதில் என்றும் திளைக்காதே,
                            வந்த வழினையும், பாதையினையும் என்றும் மறக்காதே!

                            தந்தையே  உன்  பிறப்பிற்கு   காரணம் ,
                            தந்தையே  உன்  அறிவிற்க்கு  ஆதாரம்,
                            பணம்  என்றும்   எட்டிப்  பார்க்கும்,
                            பாசம்  என்றும்  பக்கத்தில் நிற்கும் !

                            வாழ்கை முழதும்  குடும்பத்தின்  தூணாய் , 
                            உன் ஆண்மைக்கும், அறிவுக்கும் தூண்டுகோலாய்,
                            உலாவி   வரும்  தந்தையே   இடிதாங்கி,
                            ஏன் எனில்  நல்லது  கெட்டதெல்லாம் அவர்மேலே!

                            தந்தைக்கும், தாய்க்கும்  ஊன்று கோலாய்  இருந்திடு ,
                            அவர்களே  கண்கண்ட  தெய்வமென  நினைத்திடு,
                            தரணியில்  என்றும்    சிறந்து  விளங்கிடு,
                            எல்லோர்க்கும்   நல்லவனாய்  என்றும் திகழ்ந்திடு !  

                           ரா.பார்த்தசாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக