மஞ்சள் நீராட்டு விழா
மஞ்சள் நீராட்டு, நன்மகளுக்கு ஓர் பாராட்டு
நட்டு வாய்த்த ரோஜா
இன்று மொட்டுவிட்டு சிரிக்குதம்மா
மஞ்சள் நீரில் குளித்து
ஒரு தங்கச்சிலை நனையுதம்மா
பட்டுசேலை கட்டி ஒரு
பட்டாம்பூச்சி பறக்குதம்மா
வானத்து நிலவே இன்று
வையகம் வந்ததம்மா 1
முத்தமிழே மூக்கனியே
எங்கள் குலத்து நாயகியே
நின்றா நீ ஒரு திருத்தேரே
நடந்தால் நீ காவிரியே
சிரித்தாள் முத்து உதிரும்
எங்கள் செல்வத் திருமகளே!
பொன்னிலே நிறமெடுத்தாய்
பூவாலே முகம் வடித்தாய்
வானவில் வண்ணத்தை நீ
அள்ளிவந்த தேவதையே !
பாவையருள் ஒரு பூவையராக
பூமியில் பிறப்பெ டுத்தாய் !
கம்பிர நடை கொண்ட நீ
கனகவல்லி தாயே !
மானுக்கு தோலழகு
மயிலுக்கு வாலழகு
குயிலுக்கு குரலழகு
கோமகளே நீ கொள்ளையழகு !
குலம் காக்க குலம் கொடுத்த
எங்கள் குலக் கொடையே !
பருவம் எய்தி பூப்பெய்தினாலே
அச்சிந்தியாவை வாழ்த்துவோம் அன்பாலே !
ரா.பார்த்தசாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக