சனி, 19 ஜூன், 2021

 



      உலக யோகா தினம்                                   ஜூன்  21ம் தேதி


ஆய கலைகள் அறுபது நான்கு கலையே 
யோகாவும்  இதனில் அடங்கும் கலையே 
யோகிகளும், துறவிகளும் தொன்றுதொட்டு வளர்த்த கலையே 
நமது நாட்டினில் தோன்றிய பழம் பெரும் கலையே !


உடலும்,மனதும் ஒன்று கூடி, உணர்ச்சிகளை அடக்கும் 
மூச்சு பயிற்சியினால் பலவித நோய்கள் ஒடுங்கும் 
யோகப் பயிற்சியும் , நடை பயிற்சியும் அனுதினம் செய்யுங்கள்,
அது  இளமை என்னும் ரகசியம் தோன்றும் இடமாகும் !


 யோகாசனங்களில்  பல வகைகள் உண்டு
சில யோமற்றும் காசனங்களுக்கு   மிகுந்த சிறப்புண்டு
சிறுவர் முதல், முதியோர்கள்  வரை யோகா  பழகலாம்
அனுதினம் இதனை கடைபிடித்தால் நோய்யின்றி வாழலாம் !

 
யோகா கலை  நமது நாட்டில் தோன்றியதே 
பழம் பெரும் கலையானாலும் ,எல்லோர்க்கும் உகந்ததே
கொரான மற்றும் பல நோய்கள் யோகாவினால் கட்டுப்படும் 
இதன் அருமை, பெருமை அறியாத மனித வாழ்வே வீணாகும்

நோய்யற்ற  வாழ்வே குறைவற்ற செல்வம்,
யோகாசனங்களை செய்து உடல் நலனை பேணுங்கள் 
யோகாசனங்களின் நன்மையினை உலகிற்கு எடுத்துரையுங்கள் 
 உலக யோகா தினம் அறிவுறுத்தும்  கருத்தென உணருங்கள் !


ரா.பார்த்தசாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக