கடல்மங்கலம் வேணுகோபாலஸ்வாமி
குழலூதி கொள்ளைகொள்ளும் எங்கள் வேணுகோபாலா
எங்கள் உள்ளதை கொள்ளைகொள்ளும் வேணுகோபாலா !
காளிங்க நர்த்தனம் ஆடிடும் கோபாலா
கோவர்தனகிரியை குடையாக பிடித்த கோவிந்தா !
ஆநிரைகள் மெய்மறக்க குழலூதிய வேணுகோபாலா
வேணுகானம் இசைத்து ஆய்ச்சியரை மயக்கிய வேணுகோபாலா !
தாயாரை தரிசித்து, வேணுகோபாலனை தரிசிப்போம்
தரணியில் நோய் நொடியின்றி வளம்பெற யாசிப்போம் !
மனிதனை புனிதம் ஆக்குவது தெய்வ தரிசனம்
மனதில் சலனம் போக்குவதும் தெய்வ தரிசனம் !
வேண்டியதை வேண்டுவோர்க்கு அளிக்கும் வேணுகோபாலா
கடல்மங்கலத்தில், ருக்மணி,சத்யபாமாவாய் காட்சி தரும் வேணுகோபாலா !
ரா.பார்த்தசாரதி
த்ராத வினை எல்லாம் தீர்த்திடும் தெய்வம் !
வரும்துயர், பகையையும், போக்கிடும் தெய்வம்!
வாய்திறந்து, கேட்டாலே வழங்கிடும் தெய்வம் !
தாயாரை தரிசித்து வேங்கடவனை தரிசிப்போம் !
தரணியில் யாவரும் நலம்பெற யாசிப்போம் !
மனிதனை புனிதம் ஆக்குவது தெய்வ தரிசினம் !
மனதில் சலனம் போக்குவது தெய்வ தரிசினம் !
திருமலைவாசா என்று அழைத்தாலே குறை தீர்க்கும் தெய்வம் !
தினமும் நினைத்தாலே நல்வழி காட்டும் தெய்வம் !
கோவிந்தா, கோவிந்தா, என்றாலே பரவசம் !
கோவிந்தன் அருளும் கிடைத்திடுமே நம்வசம் !
என்றும், நினைப்போம், பணிவோம் அவன்தாள் !
எல்லார்க்கும், உகந்த தெய்வம், திருமலை தெய்வம் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக