சனி, 24 ஜூன், 2017

Sampathraghavan 2




                                                              காவியாஞ்சலி

           தோற்றம்:  1937                                                                          மறைவு : 2017

           திரு. வேணு கோபாலன்,பங்கஜவல்லியின்  கடைக்கோடி   மகனே
           திரு. வி.சம்பத்ராகவன்  எனும் பெயரை  உடைய ஆண் மகனே

           திட்டமிட்டு செலவழிப்பதில், சிக்கனத்தின் சிகரமாய் திகழ்ந்தாய் 
           எளிய உணவு, நல்ல பழக்கவழக்கங்களை  பழகி வந்தாய் ! 

           சிக்கனத்திற்கு   எடுத்துக்காட்டாய், ஆடம்பரமின்றி திகழ்ந்தாய்
           டென்னிசிலும், மேசைப்பந்திலும்,  பல பரிசுகளை  வென்றாய் !

           இறுதியில் பாரத் பெட்ரோலிய நிறுவனத்தில் பணி நிறைவுபெற்றாய்
           விளையாட்டிலும், அலுவகத்திலும்  நற்பெயர் பெற்று விளங்கினாய் !

           சுருக்கெழுதிலும், தட்டெழுத்திலும்  சிறந்து  விளங்கினாய்
           கிரிக்கெட்டில் சிறந்தும், நடுவராகவும் செயலாற்றினாய் !


           காதல் திருமணம் புரிந்தாலும், கண்ணியமாக  வாழ்ந்தாய் 
           அண்ணன் மகன்களுக்கு உதவியும், முன்னேற்றமடையாவும் செய்தாய்!    
 

          எண்பது வயதிலும் கால்முட்டியில்  சிகிச்சை செய்துகொண்டாய்
           மனோதிடத்துடன்  வீட்டில் பயிற்சி செய்து குணப்படுத்திக்கொண்டாய் !



           உனது சகோதரர்களைக் காட்டிலும் நோய் நொடி இல்லாமலிருந்தாய்
           இருமகள்கள்  அருகிலிருக்க ,உன் மரணத்தை அழைத்துக்கொண்டாய்


           உன்னைப்  பற்றி  மகள்களுக்கும், உறவினர்களுக்குமே  தெரியும்
           உன் அருமை,பெருமைகள்   எங்களுக்கே  தெரியும்  !   
           
           மூத்த  மகள் வீட்டில் இறப்பதற்காகவே  வீதி உன்னை  அழைத்ததே 
           உற்றார், உறவினர்களை உனது மரணம் சோகத்தில்  ஆழ்த்தியதே!                                   
           இருந்தபோது  யாரும் உன்னை புகழ்ந்ததில்லை
           இறந்தபின் யாரும் புகழாமல் இருப்பதில்லை!


           நெருநல்  உளன் ஒருவன் இன்றில்லை எனும் 
           பெருமை  உடைத்திவ் வுலகு .  என்பது வள்ளுவன் வாக்கு 


              ரா.பார்த்தசாரதி  

வெள்ளி, 23 ஜூன், 2017

சம்பத்ராகவன்





                                                     
                                                             வி. சம்பத்ராகவன்

   தோற்றம்:  1937                                                                               மறைவு : 2017

           திரு. வேணு கோபாலன்,பங்கஜவல்லியின்  கடைக்கோடி   மகனே
           திரு. வி.சம்பத்ராகவன்  எனும் பெயரை  உடைய ஆண் மகனே

           திட்டமிட்டு செலவழிப்பதில், சிக்கனத்தின் சிகரமாய் திகழ்ந்தாய் 
           எளிய உணவு, நல்ல பழக்கவழக்கங்களை  பழகி வந்தாய் ! 

           சிக்கனத்திற்கு   எடுத்துக்காட்டாய், ஆடம்பரமின்றி திகழ்ந்தாய்
           டென்னிசிலும், மேசைப்பந்திலும்,  பல பரிசுகளை  வென்றாய் !

           இறுதியில் பாரத் பெட்ரோலிய நிறுவனத்தில் பணி நிறைவுபெற்றாய்
           விளையாட்டிலும், அலுவகத்திலும்  நற்பெயர் பெற்று விளங்கினாய் !

           சுருக்கெழுதிலும், தட்டெழுத்திலும்  சிறந்து  விளங்கினாய்
           கிரிக்கெட்டில் சிறந்தும், நடுவராகவும் செயலாற்றினாய் !

           காதல் திருமணம் புரிந்தாலும், கண்ணியமாக  வாழ்ந்தாய் 
           அண்ணன் மகன் படிப்பதற்கு உதவி செய்து முன்னேற்றினாய் !      






          எண்பது வயதிலும் கால்முட்டியில்  சிகிச்சை செய்துகொண்டாய்
           மனோதிடத்துடன்  வீட்டில் பயிற்சி செய்து குணப்படுத்திக்கொண்டாய் !

           உனது சகோதரர்களைக் காட்டிலும் நோய் நொடி இல்லாமலிருந்தாய்
           இருமகள்கள்  அருகிலிருக்க ,உன் மரணத்தை அழைத்துக்கொண்டாய்

           உன்னைப்  பற்றி  மகள்களுக்கும், உறவினர்களுக்குமே  தெரியும்
           உன் அருமை,பெருமைகள்   எங்களுக்கே  தெரியும்  !   
           
           மூத்த  மகள் வீட்டில் இறப்பதற்காகவே  வீதி உன்னை  அழைத்ததே 
           உற்றார், உறவினர்களை உனது மரணம் சோகத்தில்  ஆழ்த்தியதே!                                   
           இருந்தபோது  யாரும் உன்னை புகழ்ந்ததில்லை
           இறந்தபின் யாரும் புகழாமல் இருப்பதில்லை!

           நெருநல்  உளன் ஒருவன் இன்றில்லை எனும் 
           பெருமை  உடைத்திவ் வுலகு .  என்பது வள்ளுவன் வாக்கு 


              ரா.பார்த்தசாரதி  

புதன், 21 ஜூன், 2017

மூன்றெழுத்து




                                                           மூன்றெழுத்து 

            கவிப்பரணியேறி  கலிங்கத்துப் பாடுகின்றேன் ,
            கேளுங்கள், கேளுங்கள் !

             ஆடிடும் அலையினில் ஏறிட்டும்  நுரையென
             பாடிடும்  பாட்டினில்  பண் ( இசை )  என, எங்கள் தாய்மொழி தமிழில்

              மூன்றெழுத்திற்கு  என்றும் ஓர்  சிறப்புண்டு,
               மூத்தமிழ்  என்ற பெயருண்டு

                தாய் தன் பிள்ளைகளிடம்  காட்டும் பரிவே    அன்பு 
                அன்பிற்கும் மூன்றெழுதுதான்

                தந்தை தன்  மகனுக்கு ஊட்டும் ஊக்கமே அறிவு 
                அறிவிற்கும்   மூன்றெழுதுதான்   

                  குரு தன் மாணவர்களுக்கு அளிப்பதோ ஆன்ற கல்வி 
                  கல்விக்கும் மூன்றெழுதுதான்

                   பக்தன் இறைவனிடம் கொள்வதோ  பக்தி
                   பக்திக்கும்  மூன்றெழுதுதான்  

                   கவிஞ்சன்   கவிதையை பாங்குற உரைப்பதே யுக்தி 
                   யுக்திக்கும் மூன்றெழுதுதான்  

                    குழந்தையின்  சிரிப்பே  மழலை 
                     பூக்களின்   சிரிப்பே  மணம் 

                     நாடு நலம் பெற வேண்டின்
                     நாட வேண்டும் நல்லவர்  நட்பு 

                     படை வீரர்கள்  திறமையே  வீரம் 
                     பெண்டிர்க்கு  அணிகலனே   கற்பு 

      மனிதன் நல்லதை செய்ய தேவை  நல்ல மனம் 
      கைம்மாறு  எதிர்பாராமல் செய்வதோ வள்ளல் குணம்
                                 
      தானை தலைவனும், தளபதியும் அடைவதோ வெற்றி 

       ஐந்தெழுத்தில் ( ராமானுஜம்) என்றும் மூன்று அடங்கும்
       சுபாஷ் (மூன்றெழுத்து ) என்ற  பெயரும் விளங்கும் !

      யோகா வகுப்பினை  வெற்றியுடனே நடத்திவரும் 
       நமது யோகா வகுப்பு தளபதி,மூன்றெழுத்து கொண்ட   சுபாஷ் ! 
                   
                            
                        
         ரா.பார்த்தசாரதி

ஞாயிறு, 18 ஜூன், 2017

நான் வென்றிடுவேன்




                                                  நான் வென்றிடுவேன் 

நல்லெண்ணம் கொண்டால் எல்லாம் நல்லதாக நடக்கும் 
நம்பிக்கை கொண்டு செயலாற்றினால் நன்மை  கிடைக்கும் 
தடைகளை  தாண்டி சென்று வெற்றி அடைந்திடுவேன் 
நான் நினைத்தது நடந்துவிட்டால் பெருமிதம் கொள்வேன் !

உடலில் உணர்வு இருக்கும் வரை உழைப்பதை நிறுத்தமாட்டேன் 
பிறர் பொருளை எடுத்து அனுபவிக்க கனவிலும் நினைக்கமாட்டேன் 
பொறுப்பை ஏற்றால் முடியும் வரை உறங்கிட மாட்டேன் 
புதிய பாதையை அமைத்து பொது நீதியை அமைத்திடுவேன் !

வெற்றி பெற்றவர்கள் எல்லோரும் புத்திசாலி  இல்லை 
புத்தி உள்ளவர்கள் எப்பொழுதும் வெற்றி காண்பதில்லை 
குறைகள் காணும் மனதிற்கு நிறைகள் தெரிவதில்லை 
முடிக்கப் பட்ட நற்செயலுக்கு குறை கூறாமலில்லை !
 
எங்கும் நேர்மையும், ஒழுக்கமும்மே ஆட்சி  செய்யும் 
அரிய செயல் செய்வதற்கும் மனோதிடம் அவசியம் 
என்றும் உங்கள் நண்பனாய் இருந்து மதிப்பினை பெறுவேன்  
தொண்டுள்ளம் கொண்டு, புன்னகையால் நான்  வென்றிடுவேன் !


ரா.பார்த்தசாரதி
 



 

சனி, 17 ஜூன், 2017

உலக யோகா தினம்







                           உலக யோகா தினம்                                   ஜூன்  21ம் தேதி

ஆய கலைகள் அறுபது நான்கு கலையே 
யோகாவும்  இதனில் அடங்கும் கலையே 
யோகிகளும், துறவிகளும் தொன்றுதொட்டு வளர்த்த கலையே 
நமது நாட்டினில் தோன்றிய பழம் பெரும் கலையே !


உடலும்,மனதும் ஒன்று கூடி, உணர்ச்சிகளை அடக்கும் 
மூச்சு பயிற்சியினால் பலவித நோய்கள் அடங்கும்
யோகப் பயிற்சியும் , நடை பயிற்சியும் அனுதினம் செய்யுங்கள்,
அது  இளமை என்னும் ரகசியம் தோன்றும் இடமாகும் !


 யோகாசனங்களில்  பல வகைகள் உண்டு
சில யோகாசனங்களுக்கு   மிகுந்த சிறப்புண்டு
சிறுவர் முதல், முதியோர்கள்  வரை யோகா  பழகலாம்
அனுதினம் இதனை கடைபிடித்தால் நோய்யின்றி வாழலாம் !

 
யோகா கலை  நமது நாட்டில் தோன்றியதே 
பழம் பெரும் கலையானாலும் ,எல்லோர்க்கும் உகந்ததே
முனிவர்களும், சித்தர்களும் வளர்த்த கலையாகும் 
இதன் பெருமை அறியாத மனித வாழ்வே வீணாகும்

நோய்யற்ற  வா ழ்வே குறைவற்ற செல்வம்,
யோகாசனங்களை செய்து உடல் நலனை பேணுங்கள் 
யோகாசனங்களின் நன்மையினை உலகிற்கு எடுத்துரையுங்கள் 
 உலக யோகா தினம் அறிவுறுத்தும்  கருத்தென உணருங்கள் !


ரா.பார்த்தசாரதி

வெள்ளி, 16 ஜூன், 2017






           

                               CHERRY BLOSSOM

            The Spring open its gate of Castle !

            Flowers blossomed with different colors of dazzle !

            Wears on his smiling face and a dream of spring,

            All nature's gife but the mankind makes the rift !

            Men may come and men may go,

            But the Cherry Blossoms comes on forever !


           The Cherry blossom display for our wish !

            It cherish in main and our thoughts are flourish

           Men may come and men may go,

           But the Cherry Blossoms comes on forever !

 

           From the Air and Peak, if we look down the pathway,

            It seems to be like a planted nosegay

            Men may come and men may go,

            But the Cherry Blossoms comes on forever !

          

            Raa.Parthasarathy

புதன், 14 ஜூன், 2017

கல்லறைப் பூவின் கண்ணீர் துளி



                                    


                                         கல்லறைப்  பூவின் கண்ணீர் துளி 



                             கண்ணே! உன் நினைவு 
                                     என்னை என்றும் நினைக்க வைக்கிறது!

                             உன் ஸ்பரிசம்  என் தேகத்தை 
                                        என்னை என்றும் சிலிர்க்க வைக்கிறது !

                             உன்னை  கண்ட நாள் முதல் 
                                           என் கண்கள் காதலால் நனைக்கின்றது !

                             உன்  இருவிழிகள் கூர்மையான அம்புபோல் 
                                              என் இதயத்தை துளைக்கின்றது !

                             உன் உண்மையான  காதல்  
                                                 என் நெஞ்சை  வாட்டுகிறது !

                             உன்னோடு  வாழ்ந்த  வாழ்க்கை 
                                                  என் உள்ளத்தில் கோவில் கொண்டுள்ளது !

                             உன் மரணமோ உன் கல்லறை பூவாய் கிடந்தது 
                                            என்  கண்ணீர் துளிகளால் எழுதப் பட்டிருக்கு!


                              ரா.பார்த்தசாரதி
 

திங்கள், 12 ஜூன், 2017

ஆசையே அலைபோலே

                                             


                                               ஆசையே அலைபோலே

       ஆசையின் போக்கில் செல்லும் மனிதனே 
       ஆபத்தை விலைக்கும் வாங்கும் மானிடனே 
       அடைவது எல்லாம் துன்பமே அறிந்திடுவாயா 
       ஆசையை அடக்க மார்க்கத்தினை அறிந்தாயா !  

       துடுப்பிலா படகில் சென்றால் இலக்கை அடையமுடியுமா 
       பொறுப்பில்லாமல் வாழ்வதாலே பலன் பெறமுடியுமா 
       மனிதனின் மனதினில் அலைபோல ஆசைகள் எழுமே 
       ஆசையை கடிவாளமிட்டு  அடக்கி ஆள வேண்டுமே!

       எதை எடுத்தாலும் சந்தேகிப்பவன் வாழ்க்கை துயரமாகும் 
       தன்னை நம்பாதவன், கற்பனை செய்து தவிப்பவனாகும் 
       மதிப்பினை தருவது நிறை வேற்றப்படும்  நற்செயலாகும் 
       இதனை மனதில் கொண்டால் வாழ்க்கை  நலமாகும் !

        கையளவு இதயம் வைத்தான், கடலளவு ஆசை வைத்தான் 
        ஆசையே மனிதனின் அழிவிற்கு வித்து என உணரவைத்தான் 
         மண் மீதும், பெண் மீதும் ஆசை கொண்டவனை அழித்தான் 
         மகாபாரதத்தையும், ராமாயணத்தையும் உதாரணமாக வைத்தான்
       
        ஆசையை துறந்தவன் முற்றும் துறந்த முனிவனாகிறான் 
        ஆசையை  துறக்காதவன் துன்பமெனும் கடலில் மூழ்கின்றான் 
         மது, மாது, சூது  இம்மூன்றும் மனித வாழ்வை சீர்குலைக்கும் 
         மனிதனின் மனம்  செம்மையாய் இருந்தால்தான் நன்மை பயக்கும்!

        மனமெனும் கடிவாளத்தால் ஆசையினை அடக்கப்  பழகு 
        பிறர் பொருள் மீது  ஆசை படுவதையும் அறவோடு விலக்கு
         ஆசையை விட பேராசையே அழிவிற்கு பாலம் அமைக்கும் a
        ஆசைக்கு அணை போட்டால்தான் வாழ்க்கை நிலைக்கும் !


           ரா. பார்த்தசாரதி

        
                  
              
              
                

சனி, 10 ஜூன், 2017

உழவன் மகன்




                                         உழவன் மகன்

வெய்யிலின் கொடுமை நிலத்திலே தெரியும்
பயிர் நிலங்கள் வெடித்துப் பாளமாய்த் தெரியும்
இதனைக் கண்ட விவசாயின் மனம் வெதும்பும்
வானின்று மழை பெய்யாதா என ஏங்கும்!
வெய்யிலின் கடுமை நிழலில் இருப்பவனுக்குத் தெரியாது
படித்துப் பட்டம் வாங்கிய விவசாய மகனுக்குப் புரியாது
ஏர்ப் பின்னது உலகம் என்று வள்ளுவன் சொல்லியது
ஏனோ படைத்தவனுக்கு நடைமுறையில் நடக்காமல் போனது!
படித்தவுடன் வேலையில் சேர்ந்து பெருமைப் படவும்
காசைப் பார்த்தவுடன் ஆடம்பர வாழ்க்கை வாழவும்
ஆவல் கொண்டு தனக்கென்று பொன் பொருள் சேர்க்கவும்
தன் மனைவி மக்கள் என்ற வேலி போட்டு வாழ்வதும்
தந்தை உழவனானாலும் தொழிலை மதிக்கத் தெரியவில்லை
அவரது உழைப்பிலே வளர்ந்ததை நினைத்துப் பார்க்கவில்லை
நிலம் பாழாய்ப் போனாலும் கவலைப்பட நினைப்பதில்லை
கூறு போட்டு விற்கவும் வீட்டு மனையாக்கவும் தயங்கவில்லை!
இன்றுதான் ஞானம் பிறந்து சற்றே சிந்தித்துப் பார்த்தேன்
உழவுத் தொழில் என்றும் கோழைப் படாது என உணர்ந்தேன்
பிறர்க்கு அடிமையாய் வேலை செய்ய வெட்கம் அடைந்தேன்
நானும் உயர்ந்து உழவு தொழில் செய்யப் புறப்பட்டேன்!
பட்டம் பெற்றாலும் பாட்டாளியாக உழைக்கத் தீர்மானித்தேன்
ஆழ்கிணறு தோண்டி, தண்ணீர் பெற ஏற்பாடு செய்தேன்
விவசாயம் கற்று என் குடும்பத்தை மேன்மையுறச்செய்தேன்
நானே விவசாயி, கடவுள் கண்டெடுத்த தொழிலாளி ஆனேன்!”

என்று உழவன் மகனொருவன் தான் விவசாயக் குடும்பத்தில் பிறந்திருந்தும் உழவின் மேன்மை அறியாதவனாய் வாழ்ந்ததை எண்ணி வருந்தி, மனம் திருந்தி ’மேழிச்செல்வம் கோழைப்படாது’ எனத் தெளிந்து, அத்தொழிலில் ஆர்வத்தோடு இறங்குவதை எளிமையாய்ப் பேசியிருக்கும் இக்கவிதையின் படைப்பாளர் திரு. ரா. பார்த்தசாரதியை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய் அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

வியாழன், 8 ஜூன், 2017

பெண்ணடிமை




                                                     பெண்ணடிமை 

தலையாட்டி பொம்மைகளா  நினைக்கும் நிலைமையா ?
தாய்க்குலத்தின்  வாய் பேசா வனிதையா ? 
சாவி கொடுத்தால் சலங்கை ஒலி தாலமிடத் 
தாவி ஓடும் பாவைகளா!

தன்  ஆசைகளை, புதைத்து வைத்து வெளியிடமுடியாத  ஊமை 
பணம் இருந்தும், அதனை செலவு செய்ய முடியாத நிலைமை 

திரைப்படங்களில் வரும் தேனிலவு ,
வானிலவுத் தேவதைகளா !
தொப்புள் கொடி அறுந்ததும் அப்பனுக்கு அடிமை,
தாலிக்கொடி யேறியதும் கணவனுக்கு அடிமை,
வேலைக்கு போன ஊழியத்தில் மேலதிரிகாரிக்கு அடிமை,
முதுமையடைந்ததும், பிள்ளைகளுக்கு  அடிமை !


வாழ்க்கையில் உனக்கு இல்லாத பட்டமா !
விதவை, மலடி, உடன்கட்டை ஏறுடி,
வரதட்சணை வர்த்தகி !

வரதட்சணை கொடுக்காதவளை  கண்டாலே காஸ் அடுப்பு வெடிக்கும் 
தட்டிக் கேட்க  யார் வந்தாலும்  பணத்தினால் மூடி மறைக்கும்!

புகுந்த வீட்டில் மாமியாருக்கு அடிமை,
ஆணைப்  பெற்றவளும் நீதான் 
பெண்ணைப் பெற்றவளும் நீதான் 
ஆயினும், வீடும்,நாடும் உனக்கு பொல்லாத சிறைதான் !

தலையாட்டம் நின்று, தலை நிமிர்ந்து 
என்று வீதியை எதிர்க்கின்றாயோ 
அன்றுதான் உனக்கு விடுதலை பெண்ணே !

ரா.பார்த்தசாரதி





.