புதன், 31 மே, 2017

நினைக்கத் தெரிந்த மனம்





                                   நினைக்கத் தெரிந்த மனம்



செய்தித் தாளை பிரித்தால் தினம் ஒரு சாலை விபத்து,
நினைத்தாலே  பதை  பதைக்கிறது நம் மனம் 
இரக்கம்மில்லாமல் கலப்படம் செய்யும் அரக்கர்களை கண்டு
எதிர்க்க முடியாமல் கொதிக்கின்றது நம்  மனம்!

ஜாதி,மத சண்டைகளை செய்யும் மத வெறியர்களை கண்டால் 
சமாதானப்படுத்துவதா, பரிதாபப்படுவதா என நினைக்கும் நம் மனம் 
நாடுகள் வேறாக இருந்தாலும்,அப்பாவிகளை கொல்லும் 
தீவிரவாதிகளை கண்டால் வெறிக்கிறது நம் மனம் !

சஞ்சலமின்றி சிறை செல்லும் அரசியல்வாதிகளை கண்டால் 
காறித் துப்ப நமது மனம் எண்ணுகின்றது !
கோடி,கோடியாக பணம் செலவழித்து திரைப்படம் எடுப்பதை கண்டால்!
காதலுக்காக உயிர் விடுவது கண்டு நம் மனம் சிரிக்கின்றது!

மக்களின் அறியாமையை மூலதனமாக்கி பணம் சேர்க்கும் 
ஆன்மிகவாதிகளை கண்டால் நம் மனம் சினம் கொள்கிறது!
முதல் போட்டு ஆரம்பித்த தொழில் நலிவடையும் போது 
முதலாளியை கண்டு நம் மனம் வருத்தம் கொள்கின்றது !

தினமும் நம் அறிவும், மனமும் பல உணர்வுகளை வெளிப்படுத்துகிறது  
நம்மிடம் வெல்வேறு வேலைகள் வரும்போது இவை திசை மாறுகிறது 
நினைக்க தெரிந்த மனதிற்கு கெட்டதை மறக்கத் தெரியவேண்டும் 
மறக்கத்  தெரிந்த மனதிற்கு என்றும் உண்மை புரியவேண்டும

 ரா.பார்த்தசாரதி 

 

 





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக