வெள்ளி, 26 மே, 2017

படக்கவிதை 113





                                                              படக்கவிதை 113  
       
             வெய்யிலின்  கொடுமை  நிலத்திலே  தெரியும் 
             பயிர் நிலங்கள் வெடித்து  பாளமாய் தெரியும் 
             இதனை கண்ட விவசாயின் மனம் வெதும்பும் 
             வானின்று  மழைப் பெய்யாத என ஏங்கும் !

             வெய்யிலின் கடுமை நிழலில் இருப்பவனுக்கு தெரியாது 
             படித்து பட்டம் வாங்கிய   விவசாய மகனுக்குப் புரியாது 
             ஏர் பின்னது உலகம் என்று வள்ளுவன் சொல்லியது 
             ஏனோ படைத்தவனுக்கு நடைமுறையில்,நடக்காமல் போனது !

                         
             படித்தவுடன், வேலையில்  சேர்ந்து பெருமை படவும் 
             காசை  பார்த்தவுடன்  ஆடம்பர வாழ்க்கை  வாழவும் 
             ஆவல் கொண்டு, தனக்கென்று பொன், பொருள் சேர்க்கவும் 
             தன்  மனைவி, மக்கள் என்ற  வேலி போட்டு வாழ்வதும் !

             தந்தை உழவானாலும்  தொழிலை மதிக்க தெரியவில்லை 
             அவரது உழைப்பிலே வளர்ந்ததை நினைத்து பார்க்கவில்லை 
             நிலம் பாழாய் போனாலும் கவலைப்பட நி      னைப்பதில்லை 
             கூறு போட்டு  விற்கவும், வீட்டு மனையாக்கவும் தயங்கவில்லை!

             இன்றுதான் ஞானம் பிறந்து, சற்றே சிந்தித்து பார்த்தேன் 
             உழவுத்  தொழில்  என்றும் கோழைப் படாது என உணர்ந்தேன் 
             பிறர்க்கு அடிமையாய் வேலை செய்ய  வெட்கம் அடைந்தேன் 
             நானும், உயர்ந்து, உழவு தொழில் செய்ய புறப்பட்டேன் !

            பட்டம் பெற்றாலும்,  பாட்டாளியாக உழைக்க தீர்மானித்தேன் 
           ஆழ்கிணறு தோண்டி, தண்ணீர் பெற ஏற்பாடு செய்தேன் 
           விவசாயம் கற்று, என் குடும்பத்தை மேன்மையுறச்செய்தேன் 
            நானே விவசாயி , கடவுள் கண்டெடுத்த தொழிலாளி ஆனேன் !

              ரா.பார்த்தசாரதி
    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக