இறைவனின் விளையாட்டு
இறைவனே, ஏன் என்னை படைத்தாய் என நினைக்கும்போது
என் கண்ணெதிரே கைகால் இழந்தவன் காட்சியளிக்கின்றான்
ஊன்று கோல் துணையுடன் அரு கில் வந்து கைநீட்டுகின்றான்
உனக்கும் கீழே பல கோடி என இறைவன் அறிவுறுத்துகின்றான் !
தள்ளாத வயதில் கீரை விற்கும் கிழவியின் தன்னம்பிக்கை
சாலையோரத்தில், காலணி, தைக்கும் தொழிலாளியின் நம்பிக்கை
சாலையில்,குப்பை கூட்டுபவர்களின் அன்றாட வாழ்க்கை
மூட்டை சுமந்து கஷ்டப்பட்டு கூலிக்காக வாழும் வாழ்க்கை !
வெய்யில், மழை பாராமல் கூவி,கூவி விற்கு ம் பூக்காரி
நடை பாதையில், பழரசமும், தேநீர் விற்கும் வியாபாரி ,
பாதையோரத்தில், சிறு பொருட்களை விற்கும் வியாபாரி,
நொண்டியானாலும், பேனா விற்கும் ஒரு சிறு வியாபாரி !
மனிதன் பிறக்கும்போது, ஏழை,பணக்காரனாய் பிறப்பதில்லை
அவனவன், படிப்பாலும், தொழிலாலும்,மாறுபடாமல் இருப்பதில்லை
படிக்காதவன் இழிந்த செயலை செய்வதற்கு தயங்குவதில்லை
வாழ்க்கை எனும் படகை செலுத்த மனிதன் சோர்வடைவதில்லை !
வாழ்க்கையை, வாழ்க்கையாலே இறைவன் பிரிக்கின்றான்
இறைவன் விளையாட்டை நம்மிடம் காட்டுகின்றான்
தோல்விகண்டு துவளும்போது பல செயல்களை நடத்துகின்றான்
அவற்றை கண்டு நம் மனதில் நம்பிக்கை பிறக்க வைக்கின்றான் !
ரா.பார்த்தசாரதி
வாழ்க்கை போரில் தோற்று,
'ஏன் படைத்தாய்' என
இறைவனை நிந்திக்கும்
போதெல்லாம்
கண் எதிரே வருகின்றனர்
கை, கால் இழந்த
ஊனமுற்றோர்...
ஊன்றுகோலே துணையாக
உலகை நடை போடும்
பார்வையற்றவர்...
சிக்னலில் இளைப்பாரும்
வாகனங்களுக்கு இடையே
இரக்கும் கரங்களுக்கு
சொந்தக்காரர்கள்...
அடுத்த நொடி
கடவுளுக்கு நன்றி
சொல்கிறது மனம்!
தோல்விகளால் துவண்டு
உள்ளம் சோர்வுறும் போதெல்லாம்
கண் எதிரே கடந்து செல்கின்றனர்
உச்சி வெயிலில்
பார வண்டி இழுக்கும் தொழிலாளி...
பத்து ரூபாய்க்கு ரெண்டு
சாலையோரம் கூவி
விற்கும் சிறுவன்...
தள்ளாத வயதில்
தளர் நடையில்
கீரை விற்கும் கிழவி...
தன்னம்பிக்கை கொள்கிறது மனம்!
வாழ்க்கையை, வாழ்க்கையாலே
பகுத்து, தெளிவுற வைக்கும்
கடவுள் தான்
எத்தனை பெரிய சூத்திரதாரி!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக