வெள்ளி, 11 டிசம்பர், 2015

Saroja Kavithai




தோற்றம் : 21-02-1930                                                  மறைவு: 04-12-2015


                                                                       சரோஜா

வாழ்வின் ஏட்டினை திருப்பிப்  பார்த்தேன்,
வலிதாங்கா இளமைபருவத்தை  எண்ணிப் பார்த்தேன் ,
எழுதுகோலை  துணிவுகொண்டு கைய்யில் எடுத்தேன்,
அன்னை சரோஜாவின் அருமையினை எழுத துணிந்தேன்.!

மக்களைப் பெற்ற மகராசியே   தாய்தான் ,
குடும்பத்தின் ஆணிவேராய் இருப்பதும் தாய்தான்,
ஞானியும், துறவியும்  போற்றும் தெய்வம்,
ஞாலம்   புகழ்ந்திடும் சிறந்த தெய்வம் !

ஏழு பிறவி எடுத்து  ஏழு பிள்ளைகள் பெற்றாய்,
ஏழு ஏழு ஜென்மத்திற்கு ஒர்  தொடர்பு வைத்தாய்,
ஏழுலே  ஒன்றே  ஒன்று  பெண் ஆனாலும் ,
எல்லோரிடத்திலும் மாறா அன்பும், பாசமும் வைத்தாய் !.

ஓய்வின்றி, உறக்கம்மின்றி,  உன் உயிரைக் கூட,
 ஒவ்வொர்  பிறவிக்கும் பணயம் வைத்தாய்.,
உன்னை வையகம் எந்நாளும் போற்றுமே,
உன் அருமை அறியா பிள்ளைகளை  தூற்றுமே.!

பாசமுள்ள   வேளையிலே, காசு பணம்  கூடலியே,
காசு வந்த   வேளையிலே.  பாசம் வந்து சேரலியே ,
பருவத்திலே நாங்கள் பட்ட  வலி தாங்கலியே ,
வார்த்தையிலே  வடிப்பதற்கு வார்த்தைகள் இல்லையே.!

பாசத்தோடு வாழ்வதுதான் தாயின் குணமே,
பாசத்துடன்  இருப்பதுதன் பிள்ளைகளுக்கும்  நலமே.
எனக்கென்று  துன்பம் வந்தால் உனக்கென்று வேறு பிள்ளையுண்டு ,
உனக்கென்று துன்பன் வந்தால் எனக்கென்று வேறு தாயுண்டோ ?

தாயைவிடச்  சிறந்த தெய்வம்  இல்லை ,
திசை நான்கும்  அவள்போல் எவரும் இல்லை,
தாயின் பெருமையினை சொல்ல வார்த்தையில்லை,
தியாகச்சுடரே  தாயுருவம், மனதினின்றும் மறைவதில்லை !

இளமையில் ஸ்பரிசம்,  முதுமையில் பாசம்,
என்றும் உறவின்  சிறந்த பந்தபாசம்,
இளமையில்  நான் உனக்கொரு குழந்தை,
முதுமையில் எனக்கு    நீயொரு   குழந்தை !

வாழ்க்கை  படகினிலே  நீயொரு  துடுப்பு 
எங்கள்         பிறப்பே  உன் படைப்பு 
எங்கள்         வளமே உன் சிறப்பு ,
எங்கள்   நினைவே  பாசத்தின் பிணைப்பு !

பூமியைவிடச்   சிறந்தவள்   தாய் ,
ஆகாயத்தை  விடச்  சிறந்தவர்  தந்தை.,
பூவிலே  சிறந்தது  மல்லிகை     ரோஜா,
எங்கள்   தாயின்   பெயரோ         சரோஜா !


                                                      ரா. பார்த்தசாரதி

சனி, 7 நவம்பர், 2015

மருமகள் / மருமகன்




                                                                         மருமகள்  / மருமகன்




திரு – மழலையாகப் பிறந்து
திரு – செல்வியாக வளர்ந்து
திரு – மதியாக வீடு புகுந்த
குல – மகள் என் தாய் கண்ட
மரு – மகள் 



திரு - மழலையாகப்   பிறந்து 
திரு - செல்வனாய்  வளர்ந்து 
திரு - மகனாய் விளங்கி 
குல - மகனாய்  என் தாய் கண்ட 
மரு -  மகன்.

வியாழன், 8 அக்டோபர், 2015

சுதந்திரம் எங்கே



 சுதந்திரம் எங்கே 

நள்ளிரவில்  சுதந்திரம் பெற்றோம்,
வெள்ளையனே வெள்ளியேறு  என சொன்னோம்!

சுதந்திரம் எதில்? பெண்ணிடமா , பெண்ண்மையிலா ?
கற்பை   சூறை யாடுபவர்களுக்கு   சுதந்திரமா! 

அரசியல்வாதிகள்  ஊழலை மறைபதற்கு சுதந்திரம்
ஏன்  என்று கேட்பவர்களுக்கு சிறையே  அடைக்கலம்!

நாட்டிற்கு சுதந்திரம் வாங்கித்தந்தவர்கள்  தியாகம் ,
இன்று கெடுதல் நடக்கா மலிருக்க ஓர் யாகம்!

ஆன்மிகவாதிகளுக்கும், அரசியல்வாதிக்கும் சுதந்திரம்,
நல்லதை செய்பவர்களை   தடைசெய்யுதே  சுதந்திரம்!

பறவைகள்  பறப்பதற்கு  என்றும்  சுதந்திரம்
பாவைகளுக்கு  எதிலே  இன்று சுதந்திரம் !

அறுபத்தொன்பது    ஆண்டுகள் ஆயினும்  வறுமைக்கோடு,
இன்றோ ஏழை  கூக்குரலின்  கூப்பாடு !

கவிஞர்கள் முழக்கிய  சுதந்திரம்  எங்கே?
இன்றும் பெயரளவில் இயங்குது இங்கே ?

இளைஞ்சர்களே நீங்கள் சுதந்திரத்தை நெஞ்சினிலே நிறுத்துங்கள் 
தாய் நாட்டின் முன்னேற்றத்திற்கு கடினமாய் உழைத்திதிடுங்கள் !

ஊழலையும், கொடுமைகளையும், அநீதிகளை   எதிர்த்து போராடுங்கள், 
ஊக்கத்துடன் போராடி வெற்றி காணுங்கள் !

சுதந்திரம் சும்மா வந்துவிடவில்லை  என நினையுங்கள்,
அதுவே  பல தியாகிகளின்,  தியாகம் என நினைந்திடுங்கள் !

இன்று சுதந்திரத்தின்  உள்ளுணர்வு உன்னை தூண்டட்டும்,
இன்றைய பாரத இளைஞ்சர்கள் ஒற்றுமை ஓங்கட்டும்.






வியாழன், 24 செப்டம்பர், 2015

ராகுல் சீமந்தம்

                                                               ராகுல் சீமந்தம் 

கடவுளுக்கும் பூச்சூட்டல் உண்டு ஆழ்வார்களின் பாடலிலே ,
கருவுற்ற மாதரசிக்கும்  பூச்சூட்டல் உண்டு பாரினிலே 
 பூச்சூட்டல் என்பதோ திங்கள் ஐந்தும் ஏழின தொடக்கத்திலே 
சீர்மிகு சீமந்தம் என்பதோ திங்கள் ஆறும்,எட்டின் முடிவினிலே 

இன்று சீர் மிகு சீமந்தம் இறைவன் அனுகிரக்ஹத்தோடு 
ஸ்ரீ குமரன் அனுகிரஹா மண்டபத்தில் இனிதே நடைபெறுகின்றதே 

பெண் முழுமை அடைவதும்  தாய்மையாலே ,
தாயாக  மாறுவதும்  அந்த  தாய்மையாலே 

இன்று திருமதி ஹரிணி ராகுலுக்கு  பூச்சூட்டல் 
ராகுலின் அன்பு மனைவியாம், 
பாசமும், நேசமும், கொண்டவளாம் ,
என்றும் சீரும் சிறப்புடனும் 
குடும்பத்தின் குல விளக்காய் திகழ, 
பூச்சூட்ட வாருங்கள் !   பூச்சூட்ட வாருங்கள் ! 

மல்லிகை, முல்லை தலையிலே சூட்டி 
மனமகிழ் சந்தனமும், பன்னிரும் தெளித்து 
வளைகாப்பும், வளையலும், கையிலே அணிந்திட ,
தாயும், சேயும் வளம் பெற,
நல்மனம் கொண்டு நல்வாழ்த்தும், நல்லாசியும் கூறுங்கள் 

திரு. ராமஸ்வாமி, உமா தம்பதியினரின் மூத்த மகனாம் 
என்றும் அன்பும், பாசமும் மரியாதையும் கொண்டவனாய் 
விளங்கும் ராகுல் பாரத்திற்கு இன்று சீர்மிகு சீமந்தம் 
ஹரிணியும், ராகுலும், வாழ்கையில் வளம் பெற வாழ்த்துங்கள் 

பூமிக்கு முகவரி தந்ததும்  பெண்ணாலே 
பூவிற்கு மணம் வந்ததும் பெண்ணாலே 
பூமகள் ஹரிணி பூரிப்பு அடைவதும் தாய்மையாலே 
பொன்மகள் ஹரிணி ராகுலை வாழ்த்துவோம் அன்பாலே !

ரா.பார்த்தசாரதி

பெண்ணே நீதான்




                                        பெண்ணே  நீதான்


  ஒரு உயிரைப்  படைத்த  கடவுளும்  நீதான் 

  பாலுட்டி, சீராட்டி  வளர்த்தவளும் நீதான்,

   என்னோடு விளையாடி, அன்புகாட்டியவளும் நீதான்.

  திருமணப் பந்தலில், கைபிடித்த மனைவியாய் இருப்பவளும் நீதான்

 நான் வாழ்வில் கலக்கம் அடைந்தால்  ஆலோ சனை கூறுபவளும் நீதான் 

நான் மூப்பு அடைந்தால், என்னை மடியில் சுமப்பவளும் நீதான் 

மானிட  சக்தியின் மறு அவதாரமாய், பராசக்தியாய்  இருப்பவளும் நீதான் 

குடும்பத்தில்  மந்திரி, காதலி, தாய், மனைவி, ஆகிய பல பதவிகளும் நீதான்,

குடும்பத்தின் பல்கலைகழகமாய்    திகழ்பவளும்  நீதான் ,

பாரதி கண்ட  புதுமைப்  பெண்ணும்  நீதான் .


ரா.பார்த்தசாரதி 

   





சனி, 29 ஆகஸ்ட், 2015

பிரியமானவளே ! !


                                                          பிரியமானவளே ! 

திருவிழாவில் மாவிலை தோரணம் கட்டி 
அழகாக அலங்கரிக்க கண்டேனே, 

வானம்  எனும் வீதியிலே நிலவும்,
 நட்சத்திரங்களும் மின்ன
அவைகள் என்னை கவர்ந்ததே !

தோரணத்தில் ஆங்காங்கே  பூக்களும்,
இலைகளும் செருகியதே ஓர்  அழகு ,
உனது நறுமணமிக்க பார்வை என்னை விழுங்குகியதே 

நீ நீர்தெளித்து கோலமிடும் பெண்களுடன் நின்றேன்,
கோலத்தை ஒளிப்படம் எடுக்கும்போது என்னை ரசித்தாய் 

ஆடி மாத அம்மனுக்கு பொங்கல் இட 
சுள்ளிகளை பெண்களுடன் சேர்ந்து தீயில் இட்டேன் 
அந்த வெய்யில்லில்  தூரத்து சூரியனாய் ஒளிர்ந்து நின்றாய்!

சாமிக்கு படைக்கப்பட்ட சர்க்கரை பொங்கலை கொடுக்கும்போது 
என் இதயம் இனிக்கிறது என்றாய். 
உன் சொல்லால் உலகமே இனித்தது எனக்கு .

மறுநாள் ஊருக்கு கிளம்புகையில் 
திரும்ப எப்ப வருவே  எனும் ஏக்க 
விழியாலும், பார்வையாலும், என்னை நோக்கினாய்!

பிரியமானவளே, அப்போதுதான் புரிந்து கொண்டேன்
என் உடலை விட்டு என் உயிரை எடுத்து செல்கிறாய் என்று !

ரா.பார்த்தசாரதி
 

வெள்ளி, 7 ஆகஸ்ட், 2015

சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம்

                                                சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம் 


சும்மா கிடைக்கவில்லை நமக்கு சுதந்திரம் 
தியாகிகளின்  தியாகத்தால் கிடைத்த சுதந்திரம் !

கண்ணீரும், ரத்தமும், கொடூரங்களும் கலந்த தேசமே 
 சுதந்திர தீயை உண்டாக்கியதும்   நமது  தேசமே !

தாய் நாட்டிற்கும், தியாகிகளுக்கும் முதல் வணக்கம் 
உயிர் துறந்த  தியாகிகளுக்கு எங்கள் வீர வணக்கம் !

தியாகிகளின்  உயிர் தியாகத்தினை நினைந்துகொள்விர் 
இன்று நாம் சுவாசிக்கும் சுதந்திர காற்றை நினைவு கொள்வீர் !

தாயின்  மணிக்கொடி  பறக்கவிட  வாரீர் 
அதனை தாழ்ந்து பணித்திட  வாரீர் !

வண்ணங்கள் பலவாயினும், எண்ணங்கள் ஒன்றே 
பறவைகள் பலவாயினும்  வானம் ஒன்றே !

தேகம்  ஒன்றானாலும் , குருதி  ஒன்றே 
பாஷைகள் பலவாயினும், தேசம் ஒன்றே !

சாதிமத வேற்றுமையை  வேரோடு ஒழித்துடுவோம் 
இந்தியன் என்ற உணர்வோடு  இருந்திடுவோம் !

தேசம் உனக்கு என்ன செய்தது என நினைக்காதே 
தேசத்திற்கு என்ன செய்திர்கள் என்பதை நினையுங்கள் ! 

தேசியக் கொடி  ஏற்றி  மரியாதை செய்துடுவோம்,
தேசிய கீதம்  பாடி சுதந்திரதினத்தைக் கொண்டாடுவோம் !

வந்தே மாதரம் !  வந்தே மாதரம் !     வந்தே மாதரம் !

ஜெய்ஹீந்த்,          ஜெய்ஹீந்த்,             ஜெய்ஹீந்த்,

ரா.பார்த்தசாரதி 

வியாழன், 6 ஆகஸ்ட், 2015

வாஷிங்டன் பயணம்


                                               வாஷிங்டன்  பயணம்


எங்களை வரவேற்றது வாஷிங்டன் விமான நிலையம். 

பன்னிர்த்துளிஎன  தெளித்தது  பனித்துளி .
 

சற்றே தயக்கமும் , நடுக்கமும் அடைந்தோம் 

அமெரிக்காவின் மழைத்துளிக்கா? பனித்துளிக்கா?



  இன்று வசந்தத்தின் வாசலில் நிற்கின்றோம்

  மலர்கள் பல நிறங்களில்   மிளிர்வதைகாண்கின்றோம் 

மனிதர்கள்,முகமலர்ச்சியுடன் வரவேற்ப்பதை  கண்டோம்

 எங்கள் எண்ணத்தில் புத்துணர்ச்சி கொண்டோம்!


பூத்து  குலுங்கும்   புதுமலர்கள்     அசைய

புதிதாய்  தளிர்த்து  புன்னகை புரிய,

மகிழ்ச்சியில்   நாங்கள்  பூரிப்பு அடைய,

வரவேற்றியதே   வசந்தமே  வருக,  வருக  என.

ரா.பார்த்தசாரதி  

தாய்ப் பால்

                                                                    தாய்ப் பால்

தாய்க்கு மிஞ்சிய  தெய்வம்மில்லை, தாய் பாலுக்கு மிஞ்சிய மருந்தில்லை
பிறந்த குழந்தைக்கு  தாய் பால் கொடுப்பதை விரும்பிச் செய்யுங்கள்
ஆவின் பாளை விட தாய் பாலே சிறந்தது  என நினையுங்கள்
தாய் பாலே நோய் எதிர்ப்பு சக்தி மருந்தாகும் என எண்ணுங்கள் !

தாய்ப்பால் கொடுப்பதாலே  தாய் பாசம்  மிகும் .
தாய்ப்பால் இல்லாத குழந்தை நோய்க்கு ஆளாகும்
தாய்ப்பாலே  குழந்தைக்கு சிறந்த  உணவு
தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரக்க கொடுக்கவும் நல்ல சத்துவுணவு !


உங்கள் கட்டுடலும், அழகும், குறையும் என் எண்ணாதீர்
குழந்தை  வளமே உங்கள் வளம் என நினைந்திடுவிர்
புட்டி பாலை விட தாய்ப்பால் சிறந்தது என நினைத்திடுவிர்
தாய்ப்பால் கொடுத்து, தாய்ப்பால் தினத்தை மேம்படச் செய்யுங்கள் !


ரா.பார்த்தசாரதி

புதன், 15 ஜூலை, 2015

மெல்லிசை மன்னன்

                                                       மெல்லிசை மன்னன் 


இசைக்கு  உருகாதார்  யாவரும் இல்லை 
இசையை வாழ்வோடு இணைத்து  வாழ்ந்த மனிதன் 
இசையை  வாழ்கையாய்   கொண்ட இசை மன்னன் 
அவரே மெல்லிசை மன்னன் திரு. எம்.எஸ்.விஸ்வநாதன் !

ஏழு  ஸ்வரங்களில் எத்தனை பாடல்கள் இசை அமைத்தாய் !
பாட்டிற்காக  இசையா,  இசைக்காக  பாட்டா !
மெட்டுக்காக  பாட்டா ,  பாட்டுக்காக  மெட்டா !
ஒன்றோடுஒன்று கலந்து வரும் திரு. எம்.எஸ். வியின் விளையாட்ட  !

கவிஞ்சனின்  பாடல்கள்  இன்னிசையாய்  உருமாறி,
சந்தத்துடன் பாடல்கள்  இனிதே மெருகேறி ,
பாடல்களும்  இன்னிசையால் புகழப் பெற்றதே !
கவிஞ்சனின் புகழும் அதனால் நிலைப்பெற்றதே 

கண்ணதாசன் பாட்டுக்களை காலமெலாம் கேட்க செய்தாய் 
வாலிக்கும் மற்ற  கவிஞ்சர்களுக்கும் இசை அமைத்து கொடுத்தாய் 
திரை உலகில் மெல்லிசை  மன்னனாய்  திகழ்ந்தாய்,
நீ மறைந்தாலும், உன் இசையை மக்கள் மனதிலே கலந்தாய் !

நல்ல இசை கேட்டாலே மனிதனுக்கு மனநிறைவு 
அந்த இசையே  மனிதனுக்கு தரும் மன நெகிழ்வு 
காலங்கள் மாறினாலும்  பாடலின் இசை  நம்மை நினைவுபடுத்தும்,
திரு. எம்.  எஸ். வி. மறைந்தாலும் அவரது இசை நெஞ்சிலே நிற்கும் !


ரா.பார்த்தசாரதி 






  

வியாழன், 25 ஜூன், 2015

திருமணத்தின் முக்கிய நிகழ்ச்சிகள்



                                                    திருமணத்தின்  முக்கிய  நிகழ்ச்சிகள் 


                    திருமாங்கலியத்தில்   9 (ஒன்பது ) இழைகளின்  தத்துவம்  

1.  உள்ளத்தை  உள்ளபடி புரிந்து கொள்ளுதல்  2.  மேன்மை  3. ஆற்றல்    

4.  தூய்மை   5. தெய்வீக  குணம்   6. உத்தமமான குணம்  

7.விவேகம்   8.  தன்னடக்கம்   9. தொண்டு.
================================================================== 

கணவன் மனைவியுடன்  இருக்க வேண்டியவை 

*   நல்லுறவு அனுசரித்தல்,   பரிபூரண அன்பு,
    ஒருவர் மீது ஒருவர் அக்கறை  காட்டுதல் ,

*   உயர்வு  தாழ்வு  இல்லாத  நட்பு 

*  சின்ன தவறுகள் மறந்து  கருணையுடன் நடத்தல்.

*தேவைப்படும்போது  பாராட்டுதல்.
==================================================================  

தாலிக்கயிறை மூன்று முடிச்சாக போடுவதற்கு விளக்கம் இது.
முதல் முடிச்சு - பெண் தன் ஒழுக்கத்தில் உயிராக இருக்க வேண்டும்
2-ஆம் முடிச்சு - கணவனை மதித்து அவன் உயர்வுக்கு காரணமாக இருக்க வேண்டும்
3-ஆம் முடிச்சு - நல்ல குழந்தைகளைப் பெற்ற சிறந்த தாயாக பெருமை பெற வேண்டும்.
ஆக இந்த மூன்று காரணங்கள் தான் மூன்று முடிச்சு போடுவதற்கு காரணம் என்று சொல்கிறார்கள்.

பெண்ணுக்கு தாலிகயிற்றில் மூன்று முடிச்சு போடப்படுவது மூன்று விதமான உயர்ந்த சிந்தனையை அவளுக்கு நினைவுப்படுத்த அந்த மூன்று முடிச்சுகள் போடப்படுகின்றன.

ஒரு பெண் மணவாழ்க்கையில் அடியெடித்து வைக்க போகின்ற நேரம் மூன்று பேருடைய சிந்தனைகளும் ஆலோசனைகளும் தேவைப்படுகின்றன.
- முதலாவது தாயின் ஆலோசனை. 
- 2-ஆவது பாட்டி போன்ற உறவுள்ள மிகுந்த வயதான பெண்மணியின் ஆலோசனை.
- 3-ஆவது அந்த பெண்ணுக்கு சமவயதுள்ள இன்னோரு பெண்ணின் ஆலோசனை. இத்தகைய மூவர் தரும் ஆலோசனைகள் ஒரு பெண்ணின் மணவாழக்கையை சிறந்து விளங்க உறுதுணையாக அமைகின்றது.


- ஒரு பெண்ணுக்கு முதலாதாக தாயின் ஆலோசனையே மிக முக்கியமானது. வாழப்போகிற இடத்தில் பெண் தனது பண்பாலும், அடக்கத்தாலும் தன் கணவன், மாமன், மாமியார், கணவனின் உடன் பிறந்தவர்கள் மற்றும் உற்றார் உறவினர்கள் அனைவரையும் எப்படி கவர வேண்டும் என்கிற அடிப்படையான விஷயத்தில் ஒரு தாயின் ஆலோசனை மிக முக்கியமானது.

- அடுத்ததாக பாட்டி போன்ற மூத்தோர்களின் ஆலோசனைகள். கணவனிடத்தில் எப்படியெல்லம் அணுகி பழக வேண்டும் என்கின்ற நுணுக்கத்தையும் தங்களது மகிழ்ச்சியான வாழ்நாள் இடையே தனது உடல் நலத்தையும் தனது கணவனின் உடல் நலத்தையும் எப்படி பேணி பாதுக்காத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆறியுரைகளையும் பிள்ளைபேறு காலங்களில் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என்பதையும் இவர்கள் மூலம் வழங்கப்படும் ஆலோசனைகள்.

- கடைசியாக சகதோழிகளிடமிருந்து அந்தரங்க விசயங்களை வேடிக்கை விளையாட்டாக அறிய முடியும்.

இவ்விதமாக ஒரு பெண்ணின் வாழ்க்கையில் மிக முக்கியமான ஆலோசனைகள் பெற்று நிலையான மணவாழ்க்கை சீர்தூக்கி நடத்த இந்த மூன்று முடிச்சுகள் அவளுக்கு நினைவூட்ட சாதனமாக விளங்குகின்றது. இப்படியும் ஒரு விளக்கம் சொல்லப்படுகிறது


தாலி கட்டிய பின் மணமகன் மணமகளின் உசந்தலையில் குங்குமத்தால் திலகமிடுவார். இது அவள் தன் கணவனுக்கே உரியவள் என்பதை எடுத்துக்காட்டவே. அத்தோடு அவ்விடத்தில் தான் மகா லட்சுமி வாசம் செய்கின்றாள்.


மாங்கல்யம் சூட்டும்போது கெட்டிமேளம் கொட்டுவது ஏன்னு தெரியுமா...??

சபையில் உள்ளோர் யாராவது தும்முதல், அபசகுன வார்த்தைகள் பேசுதல் போன்றவை மணமக்களிற்குக் கேட்கக்கூடாது என்பதற்காகவே.

மஞ்சள் கயிற்றில் தாலி கட்டும் போது மூன்று முடிச்சுப் போடுவார்கள். இதற்கு ஒரு விளக்கம்.
முதலாவது முடிச்சு – கணவனுக்குக் கட்டுப்பட்டவள் அல்லது பிறந்த வீட்டிற்கு
இரண்டாவது முடிச்சு – தாய் தந்தையருக்குக் கட்டுப்பட்டவள் அல்லது புகுந்த வீட்டிற்கு.
மூன்றாம் முடிச்சு – தெய்வத்திற்குப் பயந்தவள்

தாலி கட்டும்போது தூவப்படும் அட்சதை மணமக்கள் தீய சக்திகளிடம் இருந்து காப்பதற்கும் வளமான வாழ்க்கை அமைவதற்கும் ஆசீர்வதிப்பதாகும். தாலி கட்டும்போது கைவிளக்கு ஏந்தி நிற்பது ஏனென்றால் தாலி கட்டியதற்கு விளக்கு ஏந்தியவர் ஒரு சான்றாவார்.
=======================================================================

திருமணத்தின் போது ஏழு அடிகள் நடப்பதற்கு என்ன பொருள்?
திருமணத்தின் போது அக்னியை சுற்றி ஏழு அடிகள் நடப்பதற்கு என்ன பொருள்?
சம்ஸ்கிருதத்தில் இதை 'சப்தபதி' என்று கூறுவார்கள். அதாவது ஏழு அடிகள் மாப்பிள்ளையும் மணப்பெண்ணும் சேர்ந்து நடந்து வருவதாகும். அவ்வாறு ஏழு அடிகள் நடக்கும் போது மாப்பிள்ளை பெண்ணிடம் இறைவன் உனக்கு துணையிருப்பான் என்று கீழ்கண்டவாறு த*னது பிரார்த்தனையைச் சொல்கிறான்!
"முதல் அடியில்: பஞ்சமில்லாமல் வாழ வேண்டும்"
"இரண்டாம் அடியில்: ஆரொக்கியமாக வாழ வேண்டும்"
"மூன்றாம் அடியில்: நற்காரியங்கள் எப்பொழுதும் நடக்க வேண்டும்"
"நான்காவது அடியில்: சுகத்தையும், செல்வத்தையும் அளிக்க வேண்டும்"
"ஐந்தாவது அடியில் : லக்ஷ்மி கடாக்ஷம் நிறைந்து பெற வேண்டும்"
"ஆறாவது அடியில்: நாட்டில் நல்ல பருவங்கள் நிலையாக தொடர வேண்டும்"
"ஏழாவது அடியில்: தர்மங்கள் நிலைக்க வேண்டும்"
என்று பிராப்திப்பதாக சொல்லப்படுகிறது. இந்த சம்பிரதாயத்தில் மனிதர்களிடம் இருக்கும் மிகவும் சூக்ஷமமான மனோவியல் விசயத்தை இந்து தர்மத்தில் உணர்த்தியுள்ளார்கள் நம் முன்னோர்கள். இரண்டு நபர்கள் ஒன்றாக ஏழு அடிகள் நடந்தால் அவர்களுக்குள் சினேகிதம் உண்டாகும் என்பது சாஸ்திரம். உதாரணமாக நாம் சாலையில் நடக்கும் போது அறிமுகமில்லாத ஒருவரை கடக்கும் போது சில விநாடிகள் ஒன்றாய் நடக்க நேர்ந்தால் நன்றாக கவனியுங்கள். ஏழு அடிகள் நடப்பதற்குள் நாம் அவர்களை வேகமாக தாண்டிவிடுவோம் அல்லது அவர்களை முன்னே போக விட்டுவிடுவோம். முழுமையாக ஏழு அடிகள் ஒன்றாக நடக்க மாட்டோம். இரண்டு மனிதர்கள் ஒன்றாக நடக்கும் போது அவர்களுக்குள் நடக்கும் மனோவியல் மாற்றங்கள் ஏழு அடிகளுக்குளாக நடந்து விடும் என்பது ஒரு சூக்ஷமமான விஷயம். இதை மிகவும் நுணுக்கமாக ஆரய்ந்து நம் இந்து தர்மத்தில்" அதை ஒரு சம்பிரதாயமாக வைத்திருப்பதை நாம் அனுபவித்து உணர வேண்டும். இந்து தர்மத்தில் எதுவும் மூடநம்பிக்கை இல்லை. பல நுணுக்கமான அறிவியல் மற்றும் மனோவியல் விஷயங்கள் நிறைந்தது இந்து தர்மம்.
இதை வாழ்ந்து தான் தெரிந்து கொள்ள வேண்டும்.
இன்னும் முயற்சிப்போம்..
==================================================================== 

திங்கள், 22 ஜூன், 2015

புரியாத புதிர்



படக் கவிதை போட்டி 17

 பன்முகமாய் பரந்திலங்கும்  பான்மதியே 
செங்கதிரை விரித்து தோன்றும் பொன்னிற பானுமதியே 
கீழ்வானில் எழுந்து  குமரியிலே  மறைந்து,
பொன்மாலை  பொழுதிற்  அலைகள்  அசைந்து 

நின்னை  காணுங்கால்  ஓர்  இயற்கை  அழகு 
இயற்கை அன்னை தந்ததெல்லாம் எல்லோர்க்கும் சொந்தமடா ,
எனது, உனது என்பதெல்லாம் இடையில் மாறும் பந்தமடா !


ரா.பார்த்தசாரதி 

 புரியாத புதிர் 

அன்புள்ள  அம்மா உன் அடிச்சுவட்டை  பின்பற்றுகிறேன் 
அன்று உன் நிலைமை கண்டு பிரம்மிப்பு அடைந்தேன்,
உன்னைப்போல்  உழைக்கின்றேன் இன்று நானே, 
அன்று இளமையில் சுயநலமாக எதையும் சிந்தித்தேன் 

இன்று திருமணம் ஆனதால் பிற நலமாக  சிந்திக்கின்றேன் 
என்  குழந்தை,என் கணவன் என்கிற வட்டத்தில்  சுழலுகின்றேன்  
ஏன் இந்த மாற்றம்,  என்  நிலைமை  என்னை மாற்றியதா, 
பெண்  இனத்திற்கு இது இயற்கை என முடிவானதா !

பிறந்த வீட்டின் குலமும், புகுந்த வீட்டின் நலமே எனக்கொண்டாலும் 
இரண்டையும் சமமாக நினைக்க வேண்டும் என நினைத்தாலும் 
பெண்ணின் நினலைமை மதிற் மேல் பூனையாக  அமைந்தாலும் ,
பெற்ற தாயையும், தந்தையும் சற்றே தொலைவிலிருந்தாலும், 

அன்று கல் ஆனாலும் கணவன்,புல் ஆனாலும் புருஷன் ,
இன்று  ஒரு ஆண்,  மனைவிக்காக அனுசரித்து நடந்தும் ,
ஒருவரை ஒருவர் விட்டுகொடுக்கும் மனப்பாங்கே  
வாழ்கையில்  அன்பும், அமைதியும் என்றும் நிலவிடும் ! 

நீயும் என்வயத்தில் என்னை மாதிரி  உணர்ந்திருப்பாய் ,
உன் அன்பும், தியாகமும், எங்களுக்காக அளித்தாய் 
நீ செய்த பாசத்தையும்,  அன்பையும் திருப்பி அளிக்க முடியுமா, 
தாய்பாசத்தையும், தந்தையின் அரவணைப்பையும் திருப்பி தரமுடியம்மா   !

தாயின் பாசமும், அன்பும்,  அவள் மடியிலிருந்து தொடக்கம், 
பெண் தாய்க்கு  தாயாக  இருந்தாலும் மீண்டும் பிறக்கும் ,
பெண் அன்பில் ஒரு தாய், நட்பிற்கு  நேர்மை,  அறிவில் ஒரு மந்திரி,
 பெண்  கண்கண்ட ஆசான், பெண்ணே   வெற்றிக்கு மாலை !

பல உருவினில் இருந்தாலும், இன்றும்  ஒரு புரியாத புதிர் !

சனி, 13 ஜூன், 2015

அயல் நாட்டு மோகம்



                                                    அயல் நாட்டு மோகம் 

வானுர்தி மேலேறி  அயல்நாட்டு வாசம் 
புதிய தேசம், புதிய மனிதர்களின் நேசம் 
மொழி, குணம் உணர்ந்து செயல்பட வேண்டுமே 
உறுதிகொண்டு கண்விழித்து உழைக்க வேண்டுமே !

அங்கே அன்னையின்  அரவணைப்பு இல்லை 
ஆசை மனைவியின் இன்முகம் காண்பதில்லை 
பெற்ற மகன்,மகளின் ஸ்பரிசம் இல்லை 
அன்புடன் உறவாடும் நண்பனும் இல்லை !

அன்னமில்லை, நேரத்திற்கு நமக்கு ஆகாரம்மில்லை 
பண்டிகை இல்லை, அன்புகாட்ட  யாரும்மில்லை 
உணர்வுகள் வெறுமையுடன்  மாறிவரும் நிலை,
வேதனையும், துன்பத்தையும்,வெளிக்காட்டத நிலை !

பணம்மிருக்கும் நாட்டில், நல்ல மனதிர்க்கு இடமில்லை 
குணமிருக்கும் நாட்டில் பணத்திற்கு வழிஇல்லை 
வாழ்க்கை எனும் ஓடத்தில் வந்து சேரும் தடைகள் 
வந்தனவற்றை ஏற்றுக்கொள்ளும் இக்கால மனிதர்கள் !

கல்வி, கலைகள் எல்லாம் நன்கு கற்றோம்
வேலை கிடைத்து  வெளிநாட்டில் நன்கு உழைக்கின்றோம்
காரணம், இவை எல்லாம் பெற்றோரின்  ஆசையே
கலைமகளை, ஒதுக்கி, காசினைப் பூஜிக்கின்றாயே !

பணத்திற்காக  வெளிநாடு  விரைந்து  சென்றாய்
பெற்றோர்களை நினைந்து நிம்மதி இழக்கின்றாய்
நம் நாட்டு  உணவின் சுவையை  மறந்தாய்
மேல்நாட்டு உணவிற்கு மயங்கி அடிமைப்பட்டாய் !

வெளிநாட்டில் இருக்கும்போது நம் நாட்டின் அருமை தெரியும்
பண்பு, கலாச்சாரம் இவற்றின் மதிப்பு தெரியும் 
பணத்திற்காக பிள்ளைகளை அனுப்புகிறோம் என அறிவோம்
 அறிவாளிகள் வெளியேற்றம் என்பதை நாமே நடத்துகின்றோம் !

பிள்ளைகளை பணத்திற்காக புதைகுழியில் தள்ளுகின்றோம்
பாசத்தையும், அன்பையும், தள்ளிவைத்து துயரப்படுகின்றோம்
பிள்ளைகளின் அறிவை அடமானம் வைக்கின்றோம்
தாய்நாட்டின்  வளர்ச்சியை   தடை செய்கின்றோம் !

பணம் எட்டி பார்க்கும் , பாசம் பக்கத்தில் இருக்காதே  
பணத்திற்காக ஆசைப்பட்டு,உறவுகள் துரத்தபடுகிறதே   
தவறினை உணர்கின்ற நேரத்தில் காலங்கள் கழிக்கப்படுகிறதே
எண்ணியே வாழ்க்கை  இருதலை கொல்லியாய் இருக்கிறதே!

என்றும்     காலங்கள்   மாறி,  தன்னிறைவு  பெற்றாலும் 
பணம் இருந்தாலும், வசதிகள்  இருந்தாலும் 
மனம் பாசத்திற்காக  ஏங்கும்  காலமாய் இருந்தாலும் ,
என்று மாறுமோ  இந்த அயல் நாட்டு  மோகம் ! 

ரா.பார்த்தசாரதி 


  







குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம்




                                        குழந்தை தொழிலாளர் ஒழிப்பு  தினம்

  குழந்தை பெறும்போது  ஏற்படும் மகிழ்ச்சி
  அதனை வளர்க்கும்போது  பல வித நிகழ்ச்சி
  குடிகார கணவனால் ஏற்படும்  அவதி
 குடித்துவிட்டு பிள்ளைகளை அடிப்பதும் தலைவிதி!
,
பள்ளிக்குச் செல்லும் வயதில் வேலைக்கு அமர்த்துவது
பல இடங்களில் குழந்தைகளை  அடமானமாக வைப்பது,
கிடைத்த பணத்தை வீண் செலவு  செய்வது
இதனையே குடும்ப தலைவன் பெருமையாக நினைப்பது !

கல்வீ   இன்மையால் கெட்ட  பழக்கங்களுக்கு அடிமை
பிள்ளைகள் பல கேளிக்கைகளில் ஈடுபடும் தன்மை
எதிர்காலத்தை பற்றி நினைக்காமல் காலம் தள்ளும் நிலைமை
மாநிலங்களும், நாடும்  அடைவதோ  ஏழ்மை !

கல்வி கொண்டு, குழந்தைகளின்  அறியாமையை  நீக்குவோம்
குழந்தை  தொழிலாளர்  ஒழிப்பிற்கு  கூரல்  கொடுப்போம்
அரசாங்கத்திற்கு  உறுதுணையாக, சேர்ந்தே செயல்படுவோம்
உலக குழந்தை தொழிலாளர் தினத்தன்று நிறைவேற்றுவோம் 

ரா.பார்த்தசாரதி

     

வியாழன், 11 ஜூன், 2015

ரேகா திருமண வாழ்த்து மடல்



                                   திருமண வாழ்த்து மடல்                           .

மணமகள்: ஆர் . ரேக்கா                              இடம்: வசந்தம் கல்யாண மண்டபம் 
மணமகன்: எம். சாய்கணேஷ்                   ஆரிய கௌடா ரோட்      
                                                                                    தேதி :    12-06-2015 


1. இன்று , வசந்தம் கல்யாண மண்டபத்தில் ஓர் கல்யாண மேடை,
    இன்னாருக்கு  இன்னார், என்று  எழுதிவைத்த  கல்யாண மேடை,

2. இருவீட்டாரும்  இணைந்தே  நடத்திடும்  விழா ,
    உற்றாரும், உறவினர்களும், வாழ்த்திடும்  விழா !

3. திருமணம் என்றாலே உற்றார், உறவினர்  ஆசியே 
    அகிலத்தில் சிறந்தது தாய்,தந்தையர்  ஆசியே !

4. காதலை முடித்து, திருமணத்தை எதிர்நோக்கும் சாய் கணேஷ்  எனும்    
                                                                                                                                           ஆடவனே
   என்றும்  சென்னையில்  வாழ்ந்திடுவாய்  சிறப்புடனே!

5. காதல் என்பது எது வரை? திருமணத்தில் முடியும் வரை,
    திருமணம் என்பது எது வரை? இருமனம் ஓன்றாகி இல்வாழ்கை      
                                                                                                                         நடத்திடும்  வரை! 

6.  திருமதி என்பது  ஒரு வெகுமதி என்று சொல்வது வழக்கம் 
     திருமதியின் பெயரோ ரேக்கா என்று சொல்வது பழக்கம்   !

7.  காலங்களும், கோலங்களும், என்றும்  மாறும் 
     கணவன், மனைவி உறவே  என்றும் நிலைத்து வாழும்!

8.மலர்போன்று  மலர்கின்ற மனம் வேண்டும் நற்பெண்ணே,
    மண்வாசனை மாறாத குணம் வேண்டும் மணப்பெண்ணே!

9.  பிறந்த வீட்டின்  குலம் காக்க வேண்டும் ,
     புகுந்த வீட்டின்  நலம் காக்க  வேண்டும் !

10.கணவன் என்றாலே,  கண்ணைப் போன்றவனாகும்,
    அவன் வழியே  உலகை காண்பவள்  மனைவியாகும் !
  
11. ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை,
      ஆயிரம்  உறவுகள் இருந்தாலும், மனைவி, கணவனை மறப்பதில்லை!

12. வேற்றுமையில்  ஒற்றுமை கண்டு,  விருந்துண்டோம், 
      மணமக்கள் வாழ்வில் வளம்பெற  வாழ்த்துவோம்!

13. அன்பும், அறனும்  உடைத்தாயின், இல்வாழ்க்கை  
      பண்பும், பயனும்  அது.   என்பது  வள்ளுவர் வாக்கு. 

      ரா.பார்த்தசாரதி . 

வெள்ளி, 5 ஜூன், 2015

Ayal Naatu Mogam


Ayal Naatu Mogam
வாசல் வரை வந்த
துன்பமெல்லாம் வழியனுப்ப
வான்பறவை மேலேறி
அயல்தேசம் காணப்
பணங்கட்டிப் படியேற
விடை கொடுக்கும் நிலையம்
விமான நிலையம்…!

புதிய தேசம் போனதும்
புதிரான மனிதர்கள்…
இவர் மொழிதனைப் பயின்று
குணந்தனை உணர்ந்து
கொடுத்திடும் தொழிலைக்
கண்விழித்துச் செய்திட
உறுதிகொண்டு நுழைபவன்
சாதிப்பது நிச்சயம்…!

அன்பான அன்னையின்
அரவணைப்பும் இல்லை
ஆசை மனைவியின்
தலைகோதலும் இல்லை
பெற்றெடுத்த மக்களின்
ஸ்பரிசமும் இல்லை
ஓடிவந்து உதவும் உயிர்
நண்பனும் இல்லை..!

அன்னமில்லை ஆகாரமில்லை
அன்புக்கு யாருமில்லை
பண்டிகைக் கொண்டாட்டமில்லை
விடுமுறை நாட்களில்லை
உணர்வுகள் அத்தனையும்
வெறுமையாய் மாற்றிக்கொண்டு
வேதனை நிலை வெளிக்காட்டாது
இயற்கையோடு இயந்திரமாய்
வெளிநாட்டில்  நாம்…!

பணமிருக்கும் நாட்டிலே
நல்ல மனதிற்கிடமில்லை
குணமிருக்கும் தாய்நாட்டில்
பணத்திற்கு வழியில்லை
வாழ்க்கையெனும் ஓடத்திலே
வந்தொட்டும் தடைகளாய்
வந்ததெல்லாம் ஏற்றுக்கொண்டு
வாழ்கின்றோம் மனிதர்களாய்…!!
கலையெலாம் நன்கு கற்றுக்
காரியம் வெளிநாட்    டில்தான்
நிலைபெற வாழல்’ என்னும்
நினைப்பினைப்  பெற்றோர் பிள்ளை
தலையிலே பதிக்கின்  றாரே!
தமிழதற்(கு) உதவா தென்றும்
கலைமகள்  ஒதுக்கி வைத்துக்
காசினைப் பூசிப் பாரே!
=====================================================================================
உற்றது பிறரும் பார்க்க
உயர்ந்ததாய் வேண்டு மென்றே
கற்றதின் மேலே வைத்த
காதலா இந்தப் போக்கு?
மற்றைய நாடு சென்று
மங்காத செல்வம் சேர்க்கப்
பெற்றவர் தமக்குள் கொண்ட
பித்தமே இந்த நோக்கு!
‘இதந்தரும் தமிழைக் கற்றால்
என்வரும்? இங்குள் ளோர்போல்
பதர்களாய்  மடிவ  தற்கோ?
பணந்தரும் வெளிநா  டெ’ன்றே
விதந்துரை செய்து பிள்ளை
வெளிநாடு செல்ல வைத்து
நிதமவர் நினைப்பில் ஏங்கி
நிம்மதி இழக்கின்  றாரே!
மதங்களைப் போல இன்று
மற்றொரு நாடு சென்று
விதவித மான இன்பம்
விரும்பிடு கின்ற  ஆசைச்
சிதைவளர்க் கின்றார்! தங்கள்
சிறுவரைப் பலிகொ டுப்பார்!
புதைகுழிக் குள்ளே போகும்
புத்தியில் தெளிகி லாரே

செவ்வாய், 26 மே, 2015

முதுமை




                                           முதுமை 

முதுமை என்பதே மனிதனின் அனுபவ முதிர்ச்சி
உடலும் உள்ளமும் சற்றே  அடையும் தளர்ச்சி
துணை  தடுமாறினாலும் மனம் கொள்ளும் எழுச்சி
வீ ழ்ந்தாலும்  கைகொடுத்து தூக்கிவிடும் முயற்சி !

அனுபவத்திற்கும், வயதிற்கும், மதிப்பு  இல்லை
பெற்றதும்  உடன்பிறந்ததும் உதவ நினைப்பதில்லை,
ஏனோ கடனுக்காக  உதவும் நிலைமை  இக்காலத்திலே
உள்ளத்தில் கலங்கும் முதுமைக்கு நிம்மதி எக்காலத்திலே ?

அடிபட்டு, இடம் தேடித், தட்டிதடும்மாறும் நெஞ்சங்கள்
பாசத்தினால் விடுபட முடியாத  முதியோரின்  எண்ணங்கள்
இளம் ஜோடிகள் போல் காதலும், காமமும்  இல்லை
முதிர்ந்த காதல்தான், ஆனால்  காமம் இங்கில்லை  !

முதுமை காதல் என்பது தாஜ் மஹாலின்  நினைவு
இளமைக் காதல் என்பது மனக் கோட்டையின் வளைவு !
இன்று  முதுமையின் அடைக்கலம் முதியோர் இல்லங்கள்
இதனை  மாற்றாதோ  இளமையின்  எண்ணங்கள் !

தனக்காக  வாழாது  பிறருக்காக வாழும்  முதுமை
என்றும் உறவுக்கும், பாசத்திற்கும் ஏங்கும் தனிமை
இளமையின்  முதிர்ச்சியே  மனித இனத்தின்  முதுமை
தன் வினை தன்னைச் சுடும் என்பதுதான் பொதுஉடைமை !

முதுமையை இளமையாக்கி நெஞ்சுரத்துடன் நடைபோடுங்கள்
நட்பையும், உறவையும் என்றும் தவிர்த்து விடாதீர்கள்
நடைப்பயிற்சியும், யோகாவும் செய்து  உடலை பேணுங்கள்
எங்கே சென்றிடும் காலம் நம்மை, வாழ்விக்கும் என எண்ணுங்கள் !


ரா.பார்த்தசாரதி

.


.