குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம்
குழந்தை பெறும்போது ஏற்படும் மகிழ்ச்சி
அதனை வளர்க்கும்போது பல வித நிகழ்ச்சி
குடிகார கணவனால் ஏற்படும் அவதி
குடித்துவிட்டு பிள்ளைகளை அடிப்பதும் தலைவிதி!
,
பள்ளிக்குச் செல்லும் வயதில் வேலைக்கு அமர்த்துவது
பல இடங்களில் குழந்தைகளை அடமானமாக வைப்பது,
கிடைத்த பணத்தை வீண் செலவு செய்வது
இதனையே குடும்ப தலைவன் பெருமையாக நினைப்பது !
கல்வீ இன்மையால் கெட்ட பழக்கங்களுக்கு அடிமை
பிள்ளைகள் பல கேளிக்கைகளில் ஈடுபடும் தன்மை
எதிர்காலத்தை பற்றி நினைக்காமல் காலம் தள்ளும் நிலைமை
மாநிலங்களும், நாடும் அடைவதோ ஏழ்மை !
கல்வி கொண்டு, குழந்தைகளின் அறியாமையை நீக்குவோம்
குழந்தை தொழிலாளர் ஒழிப்பிற்கு கூரல் கொடுப்போம்
அரசாங்கத்திற்கு உறுதுணையாக, சேர்ந்தே செயல்படுவோம்
உலக குழந்தை தொழிலாளர் தினத்தன்று நிறைவேற்றுவோம்
ரா.பார்த்தசாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக