வியாழன், 25 ஜூன், 2015

திருமணத்தின் முக்கிய நிகழ்ச்சிகள்



                                                    திருமணத்தின்  முக்கிய  நிகழ்ச்சிகள் 


                    திருமாங்கலியத்தில்   9 (ஒன்பது ) இழைகளின்  தத்துவம்  

1.  உள்ளத்தை  உள்ளபடி புரிந்து கொள்ளுதல்  2.  மேன்மை  3. ஆற்றல்    

4.  தூய்மை   5. தெய்வீக  குணம்   6. உத்தமமான குணம்  

7.விவேகம்   8.  தன்னடக்கம்   9. தொண்டு.
================================================================== 

கணவன் மனைவியுடன்  இருக்க வேண்டியவை 

*   நல்லுறவு அனுசரித்தல்,   பரிபூரண அன்பு,
    ஒருவர் மீது ஒருவர் அக்கறை  காட்டுதல் ,

*   உயர்வு  தாழ்வு  இல்லாத  நட்பு 

*  சின்ன தவறுகள் மறந்து  கருணையுடன் நடத்தல்.

*தேவைப்படும்போது  பாராட்டுதல்.
==================================================================  

தாலிக்கயிறை மூன்று முடிச்சாக போடுவதற்கு விளக்கம் இது.
முதல் முடிச்சு - பெண் தன் ஒழுக்கத்தில் உயிராக இருக்க வேண்டும்
2-ஆம் முடிச்சு - கணவனை மதித்து அவன் உயர்வுக்கு காரணமாக இருக்க வேண்டும்
3-ஆம் முடிச்சு - நல்ல குழந்தைகளைப் பெற்ற சிறந்த தாயாக பெருமை பெற வேண்டும்.
ஆக இந்த மூன்று காரணங்கள் தான் மூன்று முடிச்சு போடுவதற்கு காரணம் என்று சொல்கிறார்கள்.

பெண்ணுக்கு தாலிகயிற்றில் மூன்று முடிச்சு போடப்படுவது மூன்று விதமான உயர்ந்த சிந்தனையை அவளுக்கு நினைவுப்படுத்த அந்த மூன்று முடிச்சுகள் போடப்படுகின்றன.

ஒரு பெண் மணவாழ்க்கையில் அடியெடித்து வைக்க போகின்ற நேரம் மூன்று பேருடைய சிந்தனைகளும் ஆலோசனைகளும் தேவைப்படுகின்றன.
- முதலாவது தாயின் ஆலோசனை. 
- 2-ஆவது பாட்டி போன்ற உறவுள்ள மிகுந்த வயதான பெண்மணியின் ஆலோசனை.
- 3-ஆவது அந்த பெண்ணுக்கு சமவயதுள்ள இன்னோரு பெண்ணின் ஆலோசனை. இத்தகைய மூவர் தரும் ஆலோசனைகள் ஒரு பெண்ணின் மணவாழக்கையை சிறந்து விளங்க உறுதுணையாக அமைகின்றது.


- ஒரு பெண்ணுக்கு முதலாதாக தாயின் ஆலோசனையே மிக முக்கியமானது. வாழப்போகிற இடத்தில் பெண் தனது பண்பாலும், அடக்கத்தாலும் தன் கணவன், மாமன், மாமியார், கணவனின் உடன் பிறந்தவர்கள் மற்றும் உற்றார் உறவினர்கள் அனைவரையும் எப்படி கவர வேண்டும் என்கிற அடிப்படையான விஷயத்தில் ஒரு தாயின் ஆலோசனை மிக முக்கியமானது.

- அடுத்ததாக பாட்டி போன்ற மூத்தோர்களின் ஆலோசனைகள். கணவனிடத்தில் எப்படியெல்லம் அணுகி பழக வேண்டும் என்கின்ற நுணுக்கத்தையும் தங்களது மகிழ்ச்சியான வாழ்நாள் இடையே தனது உடல் நலத்தையும் தனது கணவனின் உடல் நலத்தையும் எப்படி பேணி பாதுக்காத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆறியுரைகளையும் பிள்ளைபேறு காலங்களில் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என்பதையும் இவர்கள் மூலம் வழங்கப்படும் ஆலோசனைகள்.

- கடைசியாக சகதோழிகளிடமிருந்து அந்தரங்க விசயங்களை வேடிக்கை விளையாட்டாக அறிய முடியும்.

இவ்விதமாக ஒரு பெண்ணின் வாழ்க்கையில் மிக முக்கியமான ஆலோசனைகள் பெற்று நிலையான மணவாழ்க்கை சீர்தூக்கி நடத்த இந்த மூன்று முடிச்சுகள் அவளுக்கு நினைவூட்ட சாதனமாக விளங்குகின்றது. இப்படியும் ஒரு விளக்கம் சொல்லப்படுகிறது


தாலி கட்டிய பின் மணமகன் மணமகளின் உசந்தலையில் குங்குமத்தால் திலகமிடுவார். இது அவள் தன் கணவனுக்கே உரியவள் என்பதை எடுத்துக்காட்டவே. அத்தோடு அவ்விடத்தில் தான் மகா லட்சுமி வாசம் செய்கின்றாள்.


மாங்கல்யம் சூட்டும்போது கெட்டிமேளம் கொட்டுவது ஏன்னு தெரியுமா...??

சபையில் உள்ளோர் யாராவது தும்முதல், அபசகுன வார்த்தைகள் பேசுதல் போன்றவை மணமக்களிற்குக் கேட்கக்கூடாது என்பதற்காகவே.

மஞ்சள் கயிற்றில் தாலி கட்டும் போது மூன்று முடிச்சுப் போடுவார்கள். இதற்கு ஒரு விளக்கம்.
முதலாவது முடிச்சு – கணவனுக்குக் கட்டுப்பட்டவள் அல்லது பிறந்த வீட்டிற்கு
இரண்டாவது முடிச்சு – தாய் தந்தையருக்குக் கட்டுப்பட்டவள் அல்லது புகுந்த வீட்டிற்கு.
மூன்றாம் முடிச்சு – தெய்வத்திற்குப் பயந்தவள்

தாலி கட்டும்போது தூவப்படும் அட்சதை மணமக்கள் தீய சக்திகளிடம் இருந்து காப்பதற்கும் வளமான வாழ்க்கை அமைவதற்கும் ஆசீர்வதிப்பதாகும். தாலி கட்டும்போது கைவிளக்கு ஏந்தி நிற்பது ஏனென்றால் தாலி கட்டியதற்கு விளக்கு ஏந்தியவர் ஒரு சான்றாவார்.
=======================================================================

திருமணத்தின் போது ஏழு அடிகள் நடப்பதற்கு என்ன பொருள்?
திருமணத்தின் போது அக்னியை சுற்றி ஏழு அடிகள் நடப்பதற்கு என்ன பொருள்?
சம்ஸ்கிருதத்தில் இதை 'சப்தபதி' என்று கூறுவார்கள். அதாவது ஏழு அடிகள் மாப்பிள்ளையும் மணப்பெண்ணும் சேர்ந்து நடந்து வருவதாகும். அவ்வாறு ஏழு அடிகள் நடக்கும் போது மாப்பிள்ளை பெண்ணிடம் இறைவன் உனக்கு துணையிருப்பான் என்று கீழ்கண்டவாறு த*னது பிரார்த்தனையைச் சொல்கிறான்!
"முதல் அடியில்: பஞ்சமில்லாமல் வாழ வேண்டும்"
"இரண்டாம் அடியில்: ஆரொக்கியமாக வாழ வேண்டும்"
"மூன்றாம் அடியில்: நற்காரியங்கள் எப்பொழுதும் நடக்க வேண்டும்"
"நான்காவது அடியில்: சுகத்தையும், செல்வத்தையும் அளிக்க வேண்டும்"
"ஐந்தாவது அடியில் : லக்ஷ்மி கடாக்ஷம் நிறைந்து பெற வேண்டும்"
"ஆறாவது அடியில்: நாட்டில் நல்ல பருவங்கள் நிலையாக தொடர வேண்டும்"
"ஏழாவது அடியில்: தர்மங்கள் நிலைக்க வேண்டும்"
என்று பிராப்திப்பதாக சொல்லப்படுகிறது. இந்த சம்பிரதாயத்தில் மனிதர்களிடம் இருக்கும் மிகவும் சூக்ஷமமான மனோவியல் விசயத்தை இந்து தர்மத்தில் உணர்த்தியுள்ளார்கள் நம் முன்னோர்கள். இரண்டு நபர்கள் ஒன்றாக ஏழு அடிகள் நடந்தால் அவர்களுக்குள் சினேகிதம் உண்டாகும் என்பது சாஸ்திரம். உதாரணமாக நாம் சாலையில் நடக்கும் போது அறிமுகமில்லாத ஒருவரை கடக்கும் போது சில விநாடிகள் ஒன்றாய் நடக்க நேர்ந்தால் நன்றாக கவனியுங்கள். ஏழு அடிகள் நடப்பதற்குள் நாம் அவர்களை வேகமாக தாண்டிவிடுவோம் அல்லது அவர்களை முன்னே போக விட்டுவிடுவோம். முழுமையாக ஏழு அடிகள் ஒன்றாக நடக்க மாட்டோம். இரண்டு மனிதர்கள் ஒன்றாக நடக்கும் போது அவர்களுக்குள் நடக்கும் மனோவியல் மாற்றங்கள் ஏழு அடிகளுக்குளாக நடந்து விடும் என்பது ஒரு சூக்ஷமமான விஷயம். இதை மிகவும் நுணுக்கமாக ஆரய்ந்து நம் இந்து தர்மத்தில்" அதை ஒரு சம்பிரதாயமாக வைத்திருப்பதை நாம் அனுபவித்து உணர வேண்டும். இந்து தர்மத்தில் எதுவும் மூடநம்பிக்கை இல்லை. பல நுணுக்கமான அறிவியல் மற்றும் மனோவியல் விஷயங்கள் நிறைந்தது இந்து தர்மம்.
இதை வாழ்ந்து தான் தெரிந்து கொள்ள வேண்டும்.
இன்னும் முயற்சிப்போம்..
==================================================================== 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக