சனி, 29 ஆகஸ்ட், 2015

பிரியமானவளே ! !


                                                          பிரியமானவளே ! 

திருவிழாவில் மாவிலை தோரணம் கட்டி 
அழகாக அலங்கரிக்க கண்டேனே, 

வானம்  எனும் வீதியிலே நிலவும்,
 நட்சத்திரங்களும் மின்ன
அவைகள் என்னை கவர்ந்ததே !

தோரணத்தில் ஆங்காங்கே  பூக்களும்,
இலைகளும் செருகியதே ஓர்  அழகு ,
உனது நறுமணமிக்க பார்வை என்னை விழுங்குகியதே 

நீ நீர்தெளித்து கோலமிடும் பெண்களுடன் நின்றேன்,
கோலத்தை ஒளிப்படம் எடுக்கும்போது என்னை ரசித்தாய் 

ஆடி மாத அம்மனுக்கு பொங்கல் இட 
சுள்ளிகளை பெண்களுடன் சேர்ந்து தீயில் இட்டேன் 
அந்த வெய்யில்லில்  தூரத்து சூரியனாய் ஒளிர்ந்து நின்றாய்!

சாமிக்கு படைக்கப்பட்ட சர்க்கரை பொங்கலை கொடுக்கும்போது 
என் இதயம் இனிக்கிறது என்றாய். 
உன் சொல்லால் உலகமே இனித்தது எனக்கு .

மறுநாள் ஊருக்கு கிளம்புகையில் 
திரும்ப எப்ப வருவே  எனும் ஏக்க 
விழியாலும், பார்வையாலும், என்னை நோக்கினாய்!

பிரியமானவளே, அப்போதுதான் புரிந்து கொண்டேன்
என் உடலை விட்டு என் உயிரை எடுத்து செல்கிறாய் என்று !

ரா.பார்த்தசாரதி
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக