நயகராவே நீ ஒரு அருவியா ! நதியா ! நங்கையா !
1.நதியையும் நங்கையையும் பற்றி எழுதாத கவிஞன் இல்லை
நதியினை காண வரும் மனிதர்களும் ஜாதி மதம் பார்பதில்லை !
2.இறைவன் படைத்த கவிதை மனிதன்தானே
மனிதன் படைத்த கவிதை, நதியும், நங்கையும் தானே !
3. மேகம் போன்ற மேனியும் , இளமைகொண்ட நங்கைப்போலே
3. மேகம் போன்ற மேனியும் , இளமைகொண்ட நங்கைப்போலே
மலைமேடு, பள்ளம் மூடி, ஓடுகின்றாய் நாணத்தினாலே!
4. நதியே நீயும் ஒரு பெ ண்தானோ ?
அருவி எனும் கூந்தலையும் , எழிலையும் காட்டுவதும் ஏனோ ?
5. நதியே ! நீ அருவியாய் நின்று புன்முறுவல் பூக்கின்றாய்
நாடி வரும் மனிதனின் மனதில் ஓர் தேன்னருவியாய் வீழ்கின்றாய் !
6 நதியே நீ நடந்தால் நங்கை ! குனிந்தால் குமரி யல்லவா !
எல்லோர்க்கும் என்றும் நீ ஒரு தாய் யல்லவா !
7.நதியே நீ அருவீயாய் விழுந்து , நதியாய் ஓடி கடலில் கலக்கின்றாய்
நங்கையின் பிறவியோ என்றும் பாசத்துடன் வாழ்வில் கலக்கின்றாள் !
நங்கையோ வாழ்க்கை எனும் நதியில் ஓளி பெறுகிறாள் !
9. நதியே நீ உறவை நாடி கடலில் கலக்கின்றாய்
நங்கையோ , ஓர் உறவை தேடி மனதில் கலக்கின்றாள் !
10.வெண்ணிற ஆடையணிந்து, வானவில்லை ஏந்தி நின்றாய்
நீலநிற ஆடை அணிந்த மனிதர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி தந்தாய் !
ஆம், நயகரா நதியே என்றும் நீ ஒரு நங்கைதான் !
ரா. பார்த்தசாரதி