வெள்ளி, 30 நவம்பர், 2012

seshasai

                                                                சேஷசாய்- மகன்

மகன் என்றும்,  மகள் என்றும், உரிமை  என்றும்,
மண்ணுலகத்தில் இல்லறத்தின் பயனாய் நின்றும்,
தகவுடைய குடிப்பெருமை தாங்க வந்த,
தகுதியின்   வடிவம்தான்,  மகனே ஆகும். 

பந்தங்கள், சொந்தங்கள் பெறுவதற்கே 
பாதையிட்ட  பெருமையெல்லாம் மகனால் அன்றோ,
நிறைவான பண்புகளால்  வாழ்க்கைத்  தேரை,
நேரியதோர் வழி  செல்லுதுவதும் மகன்   அன்றோ?

வளர்ந்த பின்னர்,  தந்தைக்கு  கால்களாக,
விளங்குகின்ற மகனேதான் சிறந்து நிற்பான்,
தளர்ந்து நிற்கும், பெற்றோர்க்கு  மருந்தாகி,
தன்னகத்தே உணவிட்டு நாளும் காப்பான் அன்றோ?

ஈன்றெடுத்த தாயானவளும்  கடமை செய்தாள்,
ஏற்றதோர்  கல்வி தந்து தந்தை நின்றான்,
சான்றோனாய் நிற்பதுதான் மகனின் ஆற்றல்,
சுமந்து நின்றே தாய்தந்தை வாழ்தல் வேண்டும்.

இருபத்து நான்கு வயதிற்குள் கல்வி முடித்தும்,
இருபத்து   ஐயிந்தில்   தொழில் கண்டும்,
குடும்பத்தில் கண்ணாகிய  கன்னியர்க்கு திருமணம் 
முடித்து வைத்து உதவுபவனும்  மகனே!!

அயல்நாட்டில் பெருமையுடன்  பணிபுரியும் நேசம்,
பணத்தையும், பாசத்தையும் ,பிரிக்கும் தேசம்,
மனம்சோர்ந்து  ஏங்கி தவித்திடும் தாய்தந்தையின் பாசம்,
என்றைக்காவது  குடிபுகுவாய் உன் தாய்நாட்டின் வாசம்.

விருப்பமுடனே பெற்றோர்  பார்த்த திருமகளை,
நன்றே  என நவின்றிடும் நற்புதல்வனே,
குலப்பெருமை காத்திடும், எங்கள் புத்திரனே,
சேஷசாய்  என்ற பெயருடன் இந்தியானபோலீசில் வாழ்ந்திடுவாய்  சிறப்புடனே !!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக