ஒபாமா
மூன்றெழுத்துக்கு ஓர் சிறப்புண்டு
முத்தமிழ் எனும் பெயருண்டு
தாய் தன் பிள்ளையிடம் காட்டும் பரிவே அன்பு.
தந்தை தன் மகனுக்கு ஊட்டும் ஊக்கமே அறிவு
குரு தன் மாணவர்களுக்கு அளிப்பதோ ஆன்ற கல்வி
மலர்களின் சிரிப்பே மணம்
குழந்தையின் சிரிப்பே மழலை
மனிதன் இறைவனிடம் கொண்ட அன்பே பக்தி
கவிஞன் கவிதையை பாங்குற எடுத்துரைப்பதே கவிஞனின் யுக்தி
மனிதன் நல்லதை செய்ய தேவை ஒரு நல்ல மனம்.
நாடு நலம் பெற வேண்டுமெனின் நாடவேண்டும் நல்லவர் நட்பு.
நம்மை வெற்றிப்பாதையில் அழைத்து செல்லும் நம் தலைவர்கள்
காண்பதோ வெற்றி
நம் வாழ்க்கையினை வளம்பெற செய்திடும் இந்நாடு,
நம் நாட்டிற்கும் உதவிக்கரம் நீட்டிடும் இந்நாடு,
அதுவே மூன்றெழுத்து கொண்ட U S Aஎனும் பொன் நாடு
இந்நாட்டில் வெற்றியுடன் உலா வரும் தானை தலைவரின்
பெயரும் மூன்றெழுத்து கொண்ட ஒபாமா
ரா . பார்த்தசாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக