புதன், 21 நவம்பர், 2012

எம்மொழியே செம்மொழி

                                                  எம்மொழியே  செம்மொழி

இனிய  தமிழ் மொழியே   நமக்கு அமுதம்,
நமக்கு இன்பம் தந்தாலே நல்லமுதம் !
எங்கள்  தமிழ்மொழியே சிறந்த செம்மொழி
அருளாளர்களும், ஆழ்வார்களும், வளர்த்த மொழி !

தமிழுக்கும் அமுதென்றுபேர், என்பார்  பாரதிதாசன்,
தமிழ்  எங்கள் அறிவுக்குத்  தோள் என்பார்,
தமிழ் எங்கள்  பிறவிக்குத்  தாய்  என்பார்,
தமிழையும், தாயையும் புகழாமல்   இருப்பவருண்டோ தரணியிலே !

செந்தமிழ் நாடெனும்  போதிலே  இன்பத்
தேன்வந்து  பாயுது  காதினிலே என்றார், பாரதியார்,
செம்மொழி மாநாடு நடந்ததும்  கோவையிலே,
தமிழர்கள்   கவிதை பாடியதும் தமிழ் ஆர்வத்தினாலே !

எங்கும் தமிழ், எதிலும் தமிழ் !
தமிழ் படித்தவர்களுக்கே தமிழ் நாட்டில் வேலை,
தமிழ் உரையாடலே, நீதிமன்றச்  சபையினிலே,
எம் தமிழ்மொழியும், பெருமைவுறுமே பாரினிலே !

தமிழ் பரவும் வகை செய்திடுவோமே !
கணினி மென்பொருளால் உலகெங்கும் பரப்பிடுவோமே!
அயல் நாட்டினரிடையே  எம்மொழி தொன்மையென எடுத்துரைப்போமே !
எம்மொழியே ஏற்ற மொழி என நிலைநாட்டுவோமே!

தமிழ், தமிழென  முரசு கொட்டவேண்டாம் !
ஆங்கிலத்தை என்றும் தமிழிலே கலக்கவேண்டாம் !
தமிழிலும்  அறிவியல், உலகவியல்  உண்டு !
பொருளை விளக்கவும் எம்மொழிகே தனித்திறமை உண்டு!

 எளிய நடையினில் எம்மொழியில் எழுதிடவே !
இலக்கணங்கள் புதிதாய் நன்முறையில் தோன்றிடவே !
வெளியுலகில் புதிய சிந்தனைகள் வருவதுண்டு !
அச்சிந்தனையினை விளக்கவும் எம்மொழிக்கு தனிச்சிறப்புண்டு !

ஆங்கிலப் பெயர் பலகையினை தமிழில் மாற்றுவதும் நல்லதன்றோ!
அதுவே தமிழ்நாட்டின் தமிழ்க்கே  ஒரு சிறப்பன்றோ !
தனியார்பள்ளிகளிலும் தமிழ்மொழிக் கல்வி புகுத்திடவேண்டுமே!
அறிவியலிலும்,உலகவியலிலும் தனித்தொரு திறனாய்வு செய்திடல்
                                                                                                                                 வேண்டுமே!

எம்மொழி, செம்மொழி  எனச்  சொன்னால் போதாது!
ஏற்றமிகு  மாற்றங்கள்  செய்திடல் வேண்டும் !
மாற்றங்கள் செய்ய பள்ளியும்,கல்லூரியும் ஒருமைபடவேண்டுமே !
பாமரனும் படித்து  உவகை  கொள்ளவேண்டுமே !

இலவச நூலகங்கள்  எவ்விடத்திலும் நிலவவேண்டும் !
எம்மொழியே உயர்வென்று பறைசாற்றிட வேண்டும் !
தலைமுறைகள் பல கழிந்து குறைகளைய வேண்டும்.!
எம்மொழியே செம்மொழியென ஆதரிப்பீர் !   வாரீர் !

ரா,பார்த்தசாரதி





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக