வியாழன், 22 நவம்பர், 2012

காதல் நாடகம்

                                            காதல் நாடகம் 

உள்ளங்கள் ஒன்றாகி துள்ளும் போதினிலே ,
கொள்ளும் இன்பமே, சொர்க்க வாழ்வினிலே !,

எல்லை மீறும் அன்பே, செல்வம் ஆகுமே ,
இளமை நேசமே, மண் மேல் சுகமே !

சிந்தும்  செந்தேனும் , சொல்லில் ஊறுமே,
தென்றல் வீசியே,  நன்றியும் கூறுமே!

காலம்  எனும் பந்தலில், அன்புக்கைகள் ஒன்று சேருமே 
மகிழ்ச்சி  வெள்ளத்தில்,   இரு உள்ளங்கள் துள்ளுமே!


ரா.பார்த்தசாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக