செவ்வாய், 14 டிசம்பர், 2021

 


                                   ஷஷ்டிப்பதாபூர்த்தி  வாழ்த்து மடல் 

     வண்டலூர்: சென்னை                                                             தேதி : 15 டிசம்பர் 2021

அகவை  அறுபதும், எழுபது மற்றும் எண்பதும்   சிறப்புடையதன்றோ 
தவப்புதல்வன் ஜெயந்த்தும்  மருமகன்  காயத்ரியும்  தலைமையேற்று 
நடத்துவதும் பெருமைக் குறியதன்றோ!


கல்யாணம் என்றாலே வைபோகமே,
வாரணமாயிரம்  பாடி வாழ்த்துவோமே 

தென்னக  ரயில்வேயில்  சிறப்புற பணிபுரிந்து  ஓய்வு பெற்றாய்
மகனுக்கும்  திருமண நிச்சியம் செய்துவிட்டாய் 

கண்ணின் அருகே இமை இருந்தும், கண்கள் இமையைப் பார்ப்பதில்லை 
கண்களை இமைகள் காப்பதுபோல், மனைவி, கணவனை விட்டு பிரிவதில்லை 

கணவன் என்றாலே  (கண் + அவன் ) என்பதாகும்.,
அவன் வழியே உலகை காண்பவள் மனைவியாகும் !

காலமும், கோலமும்   என்றும் உலகில்  மாறும்,.
கணவன்  மனைவி உறவே என்றும் நிலைத்து வாழும்.!

ஆயிரம் கைகள் நீட்டி மறைத்தாலும், ஆதவன் மறைவதில்லை,
ஆயிரம் உறவுகள் இருந்தாலும் மனைவி, கணவனை மறப்பதில்லை !

திருமதி ஒரு வெகுமதி என்று அழைப்பது வழக்கம் !
திருமதியின் பெயரோ ஜெயஸ்ரீ   என்று அழைப்பது பழக்கம்! !

கல்யாணம் என்றாலே உற்றார்,உறவினர்ககளின் ஆசிர்வாதமே,
அகிலத்தில் சிறந்தது , தாய், தந்தையின்  ஆசிர்வாதமே !

ஆறில்  என்றும் மூன்று  என்றும்  அடங்கும் 
ஜெயஸ்ரீ  என்ற பெயரும் விளங்கும்,

உற்றார், உறவினர்களும், பேரன்,பேத்திகளும் ஆசி பெறட்டும் 
வயதில் மூத்தவர்கள் தங்கள் ஆசியை நல்மனதுடன அளிக்கட்டும்! 

உற்றாரும், உறவினர்களும், ஒன்றுகூடி விருந்துண்போம் 
அவர்கள் வாழ்க்கை வளம் பெற  வாழ்த்துவோம் 

அன்பும்  அறனும் உடைத்தாயின் இல்வாழ்கை 
பண்பும் பயனும் அது.   என்பது  வள்ளுவன் வாக்கு 

Sattray Ninaithupaarungal




     சற்றே  நினைத்துப்பாருங்கள்  !
  1.               ஞானத்தை  வளர்த்துகொள்ளுங்கள் 
           அது    சக்தியின்       பிறப்பிடமாகும் !
  1.                கடவுளின்  அருளை  வேண்டுங்கள்
         அது பக்தியின்  இருப்பிடமாகும்  !
  1.                 தியானம்  செய்ய  விரும்புங்கள்
         அது  மனஅமைதியின்  உறைவிடமாகும் !
  1.                யோகாசனங்களை செய்ய  பழகுங்கள் 
       அது    உணர்சிகளை நிலைநிறுத்தும்  இடமாகும் ! 
  1.              நினைவாற்றலை வளர்த்துக்  கொள்ளுங்கள் 
      அது அறிவு எனும் ஊற்று தோன்றும்  இடமாகும்  !
  1.          உடற்பயிற்சியும்,  நடை பயிற்ச்சியும்   தினமும் கடைபிடியுங்கள்
  அது இளமையென்னும் ரகசியத்தை  ரசிக்கும் இடமாகும்  !
  1.              பிறர்க்கு நல்லதை  செய்ய  நினையுங்கள் 
      அது  உன்  புகழினை  பரப்பும்  இடமாகும்  !
  1.            நாணயமாக இருக்க  முயற்சி  செய்யுங்கள் ,
          அது  உன் நேர்மைக்கு இடமாகும்  !
  1.             வாழ்வில்  சேமிப்பை  கற்றுக்கொள்ளுங்கள் 
அது  எதிர்காலத்தில் நம்மை தாங்கும் தூணாகும்   !
  1.              சிரித்து      வாழ      கற்றுக்கொள்ளுங்கள் 
      அது  நோயினை நீக்கும்  மருந்தாகும்  !
                                      ஆம்,
வாய்விட்டு சிரித்தால்  நோய்விட்டு போகும் !
சிரிக்க தெரிந்தவனே, சிந்திக்க தெரிந்தவனாவான்  !!
                                       
                                                               ரா. பார்த்தசாரதி 

சனி, 11 டிசம்பர், 2021

therthal in India

                                      தேர்தலுக்க  போகமுன்  இந்தனை படிக்கவும் 
                 
               1          தேர்தல் :    
                        
                        வருகிறது  தேர்தல் !  தேர்தல் !
                         தயாராகுங்கள் ! மேட்ரோசோன் மக்களே ! 

                      ஊறுகாய் போட்ட  உறுதிமொழிகள் 
                     மாறுதல் பெற்று  வரப்போகிறது 
                     காணக்கிடைக்காத  வேட்பாளர்கள் 
                    கரை வேட்டியுடன் காட்சி தரப் போகிறார்கள் !!

           2        வாக்குச்சீட்டு :
                    \வாழ்வு  வழங்கும்  வலிமையுள்ள  வாக்குச்சீட்டினையே  
                   பிட்ச்சையிட்டு  பிச்சைக்காரனாகி விடுகிறோம் 

                                        குழந்தைகளின்  கையில் கத்தி  
                                       பைத்தியக்காரன் கையில் துப்பாக்கி 
                                      குடிகாரன்   கையில்  குழந்தை 
                                      இந்தியன் கையில் ஒட்டு !

 3      வாக்காளர்கள்        
           அட்சயப் பாத்திரத்தையே     
           பிட்சையிடும்  பாரி வள்ளல்கள் !

4.      தேர்தல் நாள் :

     ஆடுகளுக்கு வெட்டரிவால்  எடுக்கும் விழா 
    இந்த  ஆடுகளுக்கு  ஏக சந்தோசம் 
    உரிமை வந்து விட்டதாம் 
   தங்கள் கசாப்புக்கடைகளை 
  தாங்களே   தேர்ந்தெடுத்துக் கொள்ள 

5.  தேர்தலில் நிற்பவர் :

அன்று குனிந்து  வோட்டு  வாங்கியவர்கள் 
இன்று நிமிர்ந்து  பார்க்கவேண்டிய  நிலையில் ! 
இப்பொழுது   புரிகிறதா ! வாக்கு  என்பது 
இன்றைய  ஜனநாயகச்   சட்டத்தின் !
அடிமை சாசனம் !   தற்கொலை சின்னம் !   

ஜனநாயகத்தின்  கூசக்கூறல் 

பொய்களுக்கு   வாக்குறுதிகள் என்று 
புதிய பெயர்  சூட்டப்படும் 

மறந்துபோன  திட்டங்கள் 
அவசரமாய் ஞாபகம்  வரும் 

சின்ன மீனை போட்டு பெரிய மீனா 
      


                 

 

புதன், 8 டிசம்பர், 2021


                    அம்ருதா 50 வது பிறந்த நாள் வாழ்த்து மடல்

                    உமேஷின்  மனைவியாம்,  
                    பாசமும், நேசமும் கொண்டவளாம்               
                    திருமதி அம்ருதாவிற்கு இன்று ஐம்பதாவது 
                   பிறந்த  தினம் 

                   அம்ருதா  என்றாலே  அமிரதமா 
                    பாற்கடலில் கடைந்துதெடுத்த  அமிர்தமா 
                    அமிர்தவர்ஷினிலியும், கார்திகைலியும் கன மழை உண்டு 
                    அம்ருதா உமேஷுக்கு தவ புதல்வன் ஹரி எனும் மகன் உண்டு 
                     கணவன் என்றாலே  கண்+ அவன்  என்பதாகும் 
                     அவன் வழியே  உலகை காண்பவள் மனைவியாகும் !

                     அம்ருதாவிற்கு எங்கள் வாழ்த்தும் ஆசியும் 

                     கமலா / பார்த்தசாரதி 
                     
                   
                    
 

செவ்வாய், 7 டிசம்பர், 2021

amirtha pirantha naal madal

 


                                                       பிறந்தநாள் வாழ்த்து மடல் 
                                
                                            நீண்ட நாள்    நீடு   வாழ  வேண்டும் \      , 
                                           அன்பு வேண்டும்,  அறிவு  வேண்டும் 
                                           பண்பு வேண்டும், பரிவு வேண்டும்           
                                          பொறுமையும்,  நிதானத்தையும் 
                                           என்றும் கைக்கொள்ள  வேண்டும் 
                                           நன்மை செய்து  புண்ணியத்தை 
                                           என்றும்   சேர்க்கவேண்டும
                                          உறவையும், நட்பையும் பேணவேண்டும் 
                                          பாசமும், நேசத்தையும் வளர்த்திட வேண்டும் 
                                          பெரியோர் ஆசியும்,  அன்பையும் 
                                          என்றும்  பெறவேண்டும் 
                                          பல்லாண்டு வாழ்க  என 
                                          ஆசிர்வாதத்தை  அளிப்போம் 
                                          அமிர்தாவிற்கு எங்கள் 50th பிறந்த நாள் 
                                          வாழ்த்துக்கள்   ! ! ! ! 

                                          கமலா / பார்த்தசாரதி 
                                         

                                              
                                            
                                                                                      

bharathiye nee marupadium piranthu vaa

 


                             பாரதியே  நீ  மறுபடியும் பிறந்து வா 

                         முறுக்கு மீசை  முண்டாசு  கவிஞ்சனே
                         பல   மொழிகள்  தெரிந்த  கவிஞ்சன
                        \அகிலம் முழுதும் பைந்ந்தமிழ் மொழிந்தவனே 
                         வாழ்வும், வளமும்  எய்த்தும்படி  செய்தவனே!

                          உன் மந்திரச் சொல்லால் மயக்கம் தீர்த்து 
                         செந்தமிழ் தேர்பாகாணாய் எங்கள் மொழி காத்து 
                          சமூகம் தன்பால்  மாற்றத்தை விதைத்து 
                          மறுமலர்ச்சி பெற  நின் பாடலால் ஏற்றமளித்து ! 

                          பெண்ணின் சுதந்திரத்தை தட்டி  கேட்டவனே 
                          தமிழை  தீயாக தரணி முழுதும்  எரியவிட்டவனே 
                          பாமரனுக்கும், பாப்பாவிற்கும் பாட்டு எழுதியவனே 
                          நாட்டில் சுதந்திர பாடலால் எழுச்சி  செய்தவனே !

                          உன் கவிதையால்  சுதந்திர வேட்கையை தூண்டியவனே 
                          ஆணக்கு நிகர்  பெண் என சமத்துவத்தை சொன்னவனே 
                          சுதந்திர பாடலால்  மக்களை தட்டி  எழுப்பியவனே 
                          பார் போற்றும் பாரதியே ! நீ மறுபடியும்  பிறந்து வா.!

                           ரா.பார்த்தசாரதி