வியாழன், 15 செப்டம்பர், 2016

இனிய தலைமுறை



தொடரும் இனிய தலைமுறை
பெயர் சொல்லும் பெயரன்(பேரன்)
நம் பெயரை வைத்துக்கொள்ளும் பெயரன்
பெருமை பேசும் பேத்தி
கூடிவாழும் குலத்தின் குலக்குறியீடு
மகனுக்கு நடைபயில்வித்த கால்களுக்கு
நடை தளர்ந்த வயதில்
நடைவண்டிகளாய்ப் பேரன்கள்
ஓடியாடும் சிறுபிள்ளையின் பேச்சு
ஒடிந்த மனதிற்கு ஒத்தடம் போடும்
[…]
தலையெடுக்கும் தலைமுறையினரைத்
தடத்தில் அழைத்துச்செல்லும் கரங்களாக
ஆச்சிதாத்தாஅய்யாஅப்பத்தாஆயா
பாட்டிபாட்டையா…. மாமை
விரல் பிடித்து வழிகாட்டும் பருவம் முதிர்ந்தபின்
தாவி ஓடும் இளையதலைமுறையைத்
தன் பாசவேர்களால் கட்டிப்போடுவார்
கைநீட்டிக் கதைபேசும் மழலைகளை
கைகாட்டி வழிநடத்துவார்
ஒவ்வொரு வீட்டிலும் வாழும் குலதெய்வங்கள்
நம் பெற்றோரும்
பெற்றோரின் பெற்றோரும்
ஆலமரங்களாய் முன்னைய தலைமுறையினர்
ஆதாரமாய் நம்மைக் காப்பர்.

”தாவி ஓடும் இளைய தலைமுறையைத் தம் பாசவேர்களால் வீழாது காப்போர் பெற்றோரும், பாட்டன்மார்களும், அவர்களையொத்த பிற உறவுகளுமே! கைநீட்டிக் கதைபேசும் மழலைகளைக் கைகாட்டி வழிநடத்தும் வித்தகர்கள் அவர்கள்” என்று முதுமையைப் போற்றும் புதுமைக் கவிதையிது! இதனை இயற்றியிருக்கும் முனைவர். மா. பத்மபிரியாவை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்த் தேர்வுசெய்கிறேன். பாராட்டுக்கள்!
=========================================================================


.

.

.

வெள்ளி, 9 செப்டம்பர், 2016

வாழநினைத்தால் வாழலாம்




                                               வாழநினைத்தால்  வாழலாம்

வாழ்க்கையில்  ஏற்படும்  எதிர்பாராத  திருப்பங்கள் ,
மனிதனின் மனதில் சட்டென்று மாறும் யோசனைகள்
ஏன் நடந்தது என்று தெரியாத ஒரு   மன வருத்தம்
மனதினில் சத்தம்  போடாமல் எழும்   ஆசைகள் !

எதை கண்டும் நெஞ்சினுள் ஏற்படும் ஒரு ஏக்கம்
கெட்டதை நினைத்து மனதினில் வேதனை கலந்த துக்கம் ,
யார் மீதோ ஏற்படும் காரணம்மில்லாத  கோபம் !
வெற்றி பெற முடியாமல், கண்ணீர் சிந்தும் தோல்வி !

வாழ்க்கையில் மறக்க முடியாத நினைவுகள்,
வாழ்க்கையில் சந்தித்த மறக்க முடியாத உறவுகள்
மனிதனின் மனதினில்  அலைபாயும் பாச உணர்வுகள்
அவன் முன்னேற்றத்திற்காக செய்யும் செயல்கள்!

மனித வாழ்க்கையில், விட முடியாத  தொடர்புகள்
வாழ்க்கையில் விட்டொழிக்க முடியாத தொல்லைகள்
வாழ்வில் மனிதனுக்கு ஏற்படும்   அவமானங்கள்
உறங்கும்போது கலைய மறுக்கும் கனவுகள் !

நிலையில்லாத வாழ்க்கையில் நிரந்தரத்தை நினைப்பதும்,
வாழ்க்கையில், இன்ப, துன்பங்களை  சமமாக நோக்காமலிருப்பதும்  ,
ஆறடி நிலமே சொந்தம் என அறியாமல் இருப்பதும்,
உன்னுடன் வருவதோ நீ செய்த பாவ புண்ணியங்கள் என தெரிந்தும் !

இன்றைய ஆடம்பரமும்,கலாசாரமும், மனிதனை வாழ விடுவதில்லை
ஆண், பெண்  இருவர் சம்பாதித்தாலும்,  நிம்மதி என்பது இல்லை ,
ஒருவக்கொருவர்  புரிதலுடன் , விட்டுக்கொடுத்தால் துன்பம்மில்லை
மனிதனே, வாழ நினைத்தால் வாழலாம், வழியாய்  இல்லை !


ரா.பார்த்தசாரதி









.

ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2016

மகனும் தாயும்




                                                         மகனும் தாயும்

பிறந்த மேனியுடன் வெளியுலகிற்கு  வந்தேன்
உனக்கு நான் மட்டற்ற மகிழ்ச்சி தந்தேன்

எனக்காக  கண்விழித்து தூக்கத்தை மறந்தாய்
உன் குருதியை என்னக்கு பாலகப் பொழிந்தாய்

தோளையே  தூளியாக்கி  என்னை சுமந்து சென்றாய்
கேட்டால், பிறக்கும்போது ஏற்பட்ட சுமையும், வலியை விடவா என்கிறாய் !

உனக்கோ ஆயிரம்  பிரச்சனை  இருக்கும்
என்னை கட்டியணைப்பதில்தான் ஆனந்தம் இருக்கும் !

உனது மடியும், இருகால்களுமே எனக்குத்  தொட்டில்
உனது மூச்சே எனக்கு அடைக்கலம் !


அம்ருதாவின் பூச்சூட்டல்/சீமந்தம்

                                         

                                           அம்ருதாவின் பூச்சூட்டல்/சீமந்தம் 


இறைவனுக்கும்  பூச்சூட்டல் உண்டு ஆழ்வார்களின் பாடலிலே,
கருவுற்ற  மாதரசிக்கும்  பூச்சூட்டல் உண்டு  பாரினிலே,
பூச்சூட்டல் என்பதே திங்கள் ஐந்தும் , ஏழும்  தொடகத்தினிலே ,
சீர்மிகு சீமந்தமோ திங்கள்   ஆறும், எட்டின்  முடிவினிலே !

பெண் பெருமை  அடைவதும்  தாய்மையாலே,
தாயாக  மாறுவதும்  அந்த   தாய்மையாலே 

விவேக்கின் மனைவி அம்ருதாவிற்கு  பூச்சூட்டல்!
விவேக்கின்   அன்பு மனைவியாம்,
பாசமும், நேசமும்  கொண்டவளாம் ,
மெல்போர்னில் இனிதே விவேக்குடன் வசிப்பவளாம் !
என்றும் சீரும் சிறப்புடன் 
குடும்பத்தின் குலவிளக்காய்  திகழ,
அவள்தன்  இனிய இல்லத்திற்கு ,
பூச்சூட்ட வாருங்கள், பூச்சூட்ட வாருங்கள் !

மல்லிகை, முல்லை, தாழம் என பல மலர்கள் பூச்சூட்டி,
மணம்  கமிழ், சந்தனமும்,  பன்னீரும்  தெளித்து,
வளைகாப்பும்,  வண்ண வளையல்களை கைய்யிலே அணிவித்து,
அவள் தன்  வாழ்வில் எல்லா வளம் பெற,
நலங்கிட்டு, நன்மனம் கொண்டு இன்றே வாழ்த்திடுங்கள் !  

தாயும், சேயும்  நலம் பெற, நன்மகனை  பெற்று தர,
அம்ருதாவை நன்மனம் கொண்டு  வாழ்த்துவோம் !

பூமிக்கு முகவரி வந்ததும் பெண்ணாலே !
பூவிற்கு நறுமணம் வந்ததும் பெண்ணாலே !
பூமகள் (அம்ருதா) பூரிப்பு அடைந்ததும் தாய்மையாலே !
பொன்மகள் என(அம்ருதாவை) வாழ்த்திடுவோம்  அன்பாலே !

ரா.பார்த்தசாரதி, கமலா பார்த்தசாரதி

  


 

அவனவன் வாழ்க்கை



                                                    அவனவன் வாழ்க்கை 

மழைத்துளிக்கு தெரியாது விழப்போவது நதியிலா, சேற்றிலா ?
வீழ்ந்தபின்தான்  அதன்  விதி என்னவென்று  தெரிகிறது,
ஆற்றில் விழுந்தால்  அனைவரது தேவையை தீர்க்கும்,
சேற்றில் வீழ்ந்தால் துர்நாற்றத்துடன் பயனற்று போகும்!

பூக்கும் மலருக்கு தெரியுமா,  சேருவது மணமலையா, மரணமாலையா?
அதன் விதி விற்பனை ஆகும்போதுதான் தெரிகின்றது,
மணமலையானால் எல்லோராலும் ஆசிர்வதிக்கப்படுகின்றது 
மரணமலையானால், மிதிபட்டு மக்கி நாசமாய்  போகின்றது !

மதிக்கும் பாதையில் செல்பவன் மகத்தான செயல் புரிகின்றான் 
மாபெரும் புகழுடன் சான்றோர்  போற்ற வாழ்கின்றான் 
மிதிக்கும் பாதையில் செல்பவன் மீளா தீமை அடைகின்றான் 
மிகுந்த வேதனைக்கு  ஆளாகி அனலிலிட்ட புழுவென துடிக்கின்றான் !

மனிதனின் பிறப்பை  கணிக்கப்படுவது விதியின் தலை எழுத்தா?
மனிதனின் குடிப்பிறப்பையும், சேரின்னத்தைச்  சேர்ந்ததா ?
அவன் பிறந்த ஜாதகத்தினால் வீதி  கணிக்கப்படுகிறதா ?
அவனவன் வாழ்க்கை, அவனவன் கையில்தான் எனக் கூறுவதா?

ரா.பார்த்தசாரதி

வெள்ளி, 26 ஆகஸ்ட், 2016

திருமண நாள்



                                                             திருமண நாள்



உற்றவர் பெற்றவர் ஆசிகள் சூழ
இலத்தரசனும், அரசியுமாக
மங்கலநாண் பூண்டிடும்
திருநாளே திருமண நாள்

திருமணம் என்பது இரு மனம் அல்ல 
அதுவே இரு மனம் கொண்ட ஒரு மனம்.
இருமனமும் புரிதலோடு வாழும்வாழ்க்கை 
வருடா வருடம், நினைத்து பெருமிதம் கொள்ளும் திருமணநாள் .

வேறு வேறு மண்ணில் மலர்ந்தாலும்
ஆயிரங்காலப் பயிராக
கிளை பரப்பி செழித்து நிற்க
அஸ்திவார நாளே திருமண நாள்


கண்ட கனவுகள் நனவுகளாக
மகிழ்ச்சி வானில் சிறகடித்து பறக்க
சமூகத்தில் புது அந்தஸ்து
பெறும் நாளே திருமண நாள்

சுற்றம் வளர்த்து நட்பு வட்டம் பெருக்க
வாழ்க்கை என்னும் பாதையில் நடக்க
இரு பாதங்கள் நடந்த வாழ்வுதனில்
நான்கு பாதங்களாய் இணைந்து நடந்திட
கருத்தொருமித்து மேன்மையான
எதிர்காலம் சமைத்திட
அடிகோலும் பெருநாளே
திருமணநாள்

ரா.பார்த்தசாரதி / கமலா பார்த்தசாரதி