அவனவன் வாழ்க்கை
மழைத்துளிக்கு தெரியாது விழப்போவது நதியிலா, சேற்றிலா ?
வீழ்ந்தபின்தான் அதன் விதி என்னவென்று தெரிகிறது,
ஆற்றில் விழுந்தால் அனைவரது தேவையை தீர்க்கும்,
சேற்றில் வீழ்ந்தால் துர்நாற்றத்துடன் பயனற்று போகும்!
பூக்கும் மலருக்கு தெரியுமா, சேருவது மணமலையா, மரணமாலையா?
அதன் விதி விற்பனை ஆகும்போதுதான் தெரிகின்றது,
மணமலையானால் எல்லோராலும் ஆசிர்வதிக்கப்படுகின்றது
மரணமலையானால், மிதிபட்டு மக்கி நாசமாய் போகின்றது !
மதிக்கும் பாதையில் செல்பவன் மகத்தான செயல் புரிகின்றான்
மாபெரும் புகழுடன் சான்றோர் போற்ற வாழ்கின்றான்
மிதிக்கும் பாதையில் செல்பவன் மீளா தீமை அடைகின்றான்
மிகுந்த வேதனைக்கு ஆளாகி அனலிலிட்ட புழுவென துடிக்கின்றான் !
மனிதனின் பிறப்பை கணிக்கப்படுவது விதியின் தலை எழுத்தா?
மனிதனின் குடிப்பிறப்பையும், சேரின்னத்தைச் சேர்ந்ததா ?
அவன் பிறந்த ஜாதகத்தினால் வீதி கணிக்கப்படுகிறதா ?
அவனவன் வாழ்க்கை, அவனவன் கையில்தான் எனக் கூறுவதா?
ரா.பார்த்தசாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக